பிரபஞ்சத்தின் புகைப்படமா, சமையலறை டைல்ஸா? – நாசாவைக் கிண்டல் செய்த எலான் மஸ்க்

அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமையலறையில் உள்ள டைல்ஸ் உடன் ஒப்பிட்டு “நல்ல முயற்சி நாசா” என எலான் மஸ்க் கிண்டல் செய்துள்ளார். மேலும் படிக்க | SpaceX Accident: ஸ்பேஸ்எக்ஸ் பூஸ்டர் ராக்கெட் சோதனையில் விபத்து pic.twitter.com/ozWk7GxcEu — Elon Musk (@elonmusk) July 15, 2022 ஸ்பேஸ் … Read more

வளர்ப்பு மகளுடன் ரகசிய உறவு; எரோல் மஸ்க் கொடுத்த அதிர்ச்சித் தகவல்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க்கின் 76 வயதான தந்தை எரோல் மஸ்க் (Errol Musk) அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் எலோன் மஸ்க் நிறுவனத்தின் ஊழியருடன் தனக்கு இருந்த தொடர்பை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட நிலையில், அவரது தந்தை தற்போது, தனது வளர்ப்பு மகளுடன் தொடர்பு வைத்திருந்ததை வெளிப்படுத்தியுள்ளது புயலை கிளப்பியுள்ளது. இதுமட்டுமின்றி, தனது மனைவியின் 35 வயது மகளான ஜனா பெசூடென்ஹவுட் (Jana Bezuidenhout) என்ற தனது வளர்ப்பு மகளுடன் … Read more

CAATSA sanctions: S400 ஏவுகணை கொள்முதல் தொடர்பான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு

காஸ்டாவின் கீழ் ரஷ்யாவின் ஏவுகணை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிற்கு விலக்கு அளிக்க அமெரிக்க அரசு சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது.  2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம் S-400 வான் ஏவுகணை அமைப்புகளின் ஐந்து படைப்பிரிவுகளுக்கான 5.43 பில்லியன் டாலர் ஒப்பந்தமானது, இந்தியவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தானது. இது அமெரிக்காவின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், தற்போது குழு குரல் வாக்கெடுப்பு மூலம், அமெரிக்க அரசின் கமிட்டி ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது இது தண்டனைக்குரிய CAATSA … Read more

குழந்தைகள் கண் முன் மனைவியை வெட்டி சமைத்த கொடூர கணவன்

அனைவரின் மனதை பதற செய்யும் ஒரு கொடூரமான சம்பவத்தில், கணவன், தனது ஆறு குழந்தைகள் முன் மனைவியை வெட்டி சமைத்துள்ளார். இந்த சம்பவம் வேறெங்கும் அல்ல பாகிஸ்தானி நடந்துள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில், தான் கொடூர செயல் அரங்கேறியுள்ளது. கணவர் தனது மனைவியைக் கொன்று, தனது ஆறு குழந்தைகளுக்கு முன்னால் வெட்டி அண்டா போன்ற பெரிய பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்துள்ளார்.  ஊடக அறிக்கை ஒன்றில், புதன் கிழமை நர்கின் என்ற பெண்ணின் சடலத்தை, நகரின் குல்ஷன்-இ-இக்பால் … Read more

Fuel Price Reduced: பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைக்கப்பட்டது

Fuel Price Reduced in Pakistan:பாகிஸ்தான் அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தது அந்நாட்டு மக்களுக்கு ஆசுவாசம் அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் கடுமையான பணவீக்கத்தை சந்தித்து வரும் பாகிஸ்தான் மக்களுக்கு இது நல்ல செய்தியாக வந்துள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நேற்று (2022, ஜூலை 14) அறிவித்தார். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.18.50 மற்றும் … Read more

ரிபுதமன் சிங் மாலிக்: 1985 ஏர் இந்தியா விமான தாக்குதல் வழக்கு சந்தேக நபர் படுகொலை

புதுடெல்லி: 1985 ஆம் ஆண்டில்,  ஏர் இந்தியா விமானம் 182 வெடிகுண்டு தாக்குதலில்  329 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் அயர்லாந்து கடற்கரையில் நடைபெற்றது.  அந்த வெடிகுண்டு தாக்குதலில் ரிபுதமன் சிங் மாலிக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வழக்கு விசாரணையின்போது, ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். வான்கூவரில் தொழில் செய்துவந்த ரிபுதமன் சிங் மாலிக், நேற்று (2022 ஜூலை 14)  கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் … Read more

இலங்கை மக்களின் தொடர் போராட்டம்: ராஜினாமா செய்தார் ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலதிவிற்கு தப்பிச் சென்ற நிலையில் நேற்று தனது ராஜினாமா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.  இன்று காலை அவர்  கையெழுத்து இடம் பெறாத கடிதம் ஒன்று பரவி ராஜினாமா செய்து விட்டதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.  ஆனால் அது தவறான போலியான கடிதம் என இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில், தற்போது மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி … Read more

Rajapaksa in Singapore: நாடு நாடாக தப்பித்து செல்லும் அதிபர் கோத்தபய ராஜபக்சே

Sri Lanka crisis: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்கள் வீதியில் இறங்கி அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை கைப்பற்றிய பொதுமக்கள், தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்தனர். அங்கேயே தங்கி சமைத்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குளிப்பது என அவரது வீட்டை சுற்றுலா தலமாக மாற்றியுள்ளனர். புதன்கிழமை அதிகாலையில் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தங்கினார். அதே … Read more

செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்

Viral Video: அறிவியல் அற்புதங்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமானவை. அண்மையில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.  மிகவும் முக்கியமான விஞ்ஞான விஷயங்களை கொடுக்கத் தொடங்கிவிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் வழங்கும் காட்சிகள் இனி உலகம் முழுவதும் ஊடகங்களில் வைரலாகப் போகிறது என்பது எதிர்கால வைரல் செய்தியாக இருக்கலாம். ஆனால், தற்போது நாசா வெளியிட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அதை … Read more

Sri Lanka Crisis: கொழும்பு ஜோடியின் கிஸ் போட்டோ வைரல், ரணகளத்தில் ஒரு குதூகலமா?

இலங்கை நெருக்கடி: இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். இதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார். இதனால் அங்கு அரசியல் நெருக்கடி மேலும் அதிகரித்தது. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலைமை மோசமடைந்ததைக் கண்டு, இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், இந்த அசாதாரண சூழலில் ஒரு விசித்திரமான நிகழ்வும் அங்கு நடந்தது. இலங்கையில் போராட்டங்களுக்கு மத்தியில் ஒரு ஜோடி … Read more