பூமியை நெருங்கும் எவரெஸ்டை விட பெரிய வால் நட்சத்திரத்தினால் ஆபத்து உள்ளதா…

வால் நடத்திரம் என்பது சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். வால் நட்சத்திரங்களின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால் நடசத்திரங்களும் சூரியனைச் சுற்றுகின்றன.   இந்நிலையில், எவரெஸ்டை விட இரு மடங்கு பெரிய அளவிலான வால் நட்சத்திரம் ஒன்று ஜூலை 14 அன்று பூமிக்கு மிக அருகில் வரும் என கூறப்பட்டுகிறது. பூமியை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கும் இந்த வால் நட்சத்திரத்திற்கு C/2017 K2 (PANSTARRS) அதாவது K2 … Read more

முத்தமிட்டு முதலையை மணந்த மேயர் – மெக்சிகோவில் விநோதம்

உலகெங்கிலும் விநோத செயல்கள் அரங்கேறுவது உண்டு. சம்பிரதாயம் என்று கூறி மனிதனுக்கும் கழுதைக்கும் திருமணம், மனிதனுக்கும் தவளைக்கும் திருமணம் என ஏகப்பட்ட விஷயங்கள் அப்படி நடக்கும்.  அதேசமயம் ஆபத்தான விலங்குகளிடம் மனிதர்கள் அந்த சம்பிரதாயத்தை காண்பிக்கமாட்டார்கள். ஆனால் மெக்சிகோவல் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் படிக்க | அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பிய நபர் உயிரிழப்பு: காத்திருந்த குடும்பத்தினர் சோகத்தின் உச்சியில் மத்திய மெக்சிகோவில் இருக்கும் சான் பெட்ரா  ஹவுமெலுலா என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ … Read more

Monkeypox Symptoms: இங்கிலாந்தில் பாலியல் கிளினிக்குகள் மூலமாக குரங்கு அம்மை நோய்

வைரஸ் நோயால் தற்போது உலகமே அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கும் வைரஸ்கள் தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும், நோயை எதிர்க்கும் முக்கிய கேடயங்களாக மாறுகின்றன.   சனிக்கிழமையன்று தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோயின் அறிகுறிகள் உலகின் பிற பகுதிகளில் பதிவாகிய முந்தைய வைரஸ் வெடிப்பைக் காட்டிலும் வேறுபட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள பாலியல் சுகாதார கிளினிக்குகளில் கலந்து கொண்ட 54 நோயாளிகளை ஆய்வு செய்த பின்னர், மே 2022 இல் … Read more

Comet C/2017 K2: பூமியை நோக்கி வேகமாக வரும் மாபெரும் வால் நட்சத்திரம்

எவரெஸ்ட் சிகரத்தை விட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து பூமியை கடக்க உள்ளது. இந்த வானியல் நிகழ்வு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருப்பது குறித்து வானியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். C/2017 K2 (PANSTARRS) என்று அறியப்படும் இந்த வால் நட்சத்திரம், முதன்முதலில் 2017 இல் சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகளில் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுருக்கமாக K2 என அழைக்கப்படுகிறது.   அந்த நேரத்தில், K2 … Read more

Russia vs Ukraine: ஸ்நேக் லேண்ட் மீது பாஸ்பரஸ் வெடிகுண்டு வீசுகிறது ரஷ்யா: உக்ரைன்

உக்ரைனில் உள்ள ஸ்நேக் ஐலாண்ட் என்ற தீவில் ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பான செயற்கைக்கோள் படமும் வெளியிடப்பட்டுள்ளது.   ஆனால், உக்ரைனின் குற்றச்சாட்டை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அடியோடு மறுத்துள்ளது. உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதிகளை ஒழுங்கமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியில் ரஷ்யா தலையிடாது என்றும் ரஷ்யா கூறுகிறது. கருங்கடலில் உள்ள மூலோபாய கேந்திரமான ஸ்நேக் ஐலாண்டில் இருந்து மாஸ்கோ தனது படைகளை வாபஸ் பெற முடிவு செய்த நிலையில், தீவில் … Read more

மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"… சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!

மதுபானங்கள் பல வகை… ஒவ்வொன்றும் ஒருவகை… எது எப்படி இருந்தாலும் மதுபிரியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து வகை மதுபானங்களையும் சுவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கும் அல்லவா. ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்காட்லேண்டு என பல நாடுகளின் முக்கிய அடையாளங்களாகவே சில மது வகைகள் விளங்கி வருகின்றன. உலகின் முன்னணி பிராண்டுகளும் இந்த நாடுகளின் அடையாளங்களைபோல் செயல்படுகின்றன. நல்ல சிவப்பு ஒயின் என்றால் பிரான்ஸ் நாடும், சுறுக்கென்ற வோட்கா என்றால் ரஷ்யாவும் பெயர்போன நாடுகளாக பார்க்கப்படுகின்றன. அதே … Read more

கோவிட்-19 மீண்டும் வேகமாக பரவுகிறது, தடுப்பூசி அவசியம்: எச்சரிக்கும் WHO

ஜெனீவா: உலகெங்கிலும் கோவிட்-19 தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதால், அதை செய்து முடிப்பதன் அவசியத்தையும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளவில் 4.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO அதன் சமீபத்திய எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.நா. சுகாதார நிறுவனம், தொற்றுநோய் … Read more

என் கணவரை வாடகைக்கு எடுத்துக்கோங்க… வெறும் 3000 ரூபாய் தான் – பெண்ணின் வைரல் ஐடியா

பிரிட்டன் நாட்டில் வசித்து வரும் தம்பதியினர் லாரா யங் – ஜேம்ஸ். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3 குழந்தைகளில் இருவருக்கு ஆடிஷம் எனப்படும் மூளை வளர்ச்சி பாதிப்பு உள்ளது. இதனால் தான் ஒருவராக லாரா யங் 3 குழந்தைகளை பார்த்துக்கொள்வது சாத்தியமில்லாத விஷயமாக மாறிவிட்டது. தந்தை ஜேம்ஸ் அதுவரை தனது வீட்டின் அருகிலுள்ள தொழிற்பட்டறையில் வேலை செய்து வந்தார். பின் மனைவி, பிள்ளைகளை பார்த்துக்கொள்ள தனது முழு நேர வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார். இதனால் … Read more

வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள் ரெடி! வைரலாகும் ஜப்பானின் புதிய டெக்னாலஜி

கிழக்கில் கடல் சூழ அமைத்துள்ள ஜப்பானில் வருடா வருடம் வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், கடல் கொந்தளிப்பு என பல்வேறு இயற்கை சீற்றங்கள் நிகழ்வதும் அதிலிருந்து மக்கள் விரைந்து தேறுவதுமே வழக்கமாக அமைந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் அங்கு மக்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு வருடமும் முதலலில் இருந்து தொடங்குவதுபோல் தொடங்கவேண்டிய நிலை பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. பலர் வீடுகளை இழந்து, வீட்டிலுள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்று பரிதாப நிலைக்கு செல்கின்றனர். … Read more

வேற்றுகிரக வாசிகள் குறித்த நாசாவின் ஆய்வு; செவ்வாய் கிரகத்தில் ஆதாரம் கிடைத்ததா

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மற்றும் நிலப்பரப்பைப் ஆராய்ச்சி செய்வதில் விஞ்ஞானிகள் எப்போதுமே ஆர்வத்துடன் ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றனர். மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடிக்கும் பணியை நாசா மேற்கொண்டு வரும் நிலையில்,  நாசா நடத்திய புதிய ஆய்வக சோதனையில், வேற்று கிரகவாசிகளின்  தடயங்களைக் கண்டறிய, ஒரு புதிய உத்தியைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.  செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரக வாசிகளின் இருப்பை கண்டறியும் பணியை மேற்கொண்டு … Read more