Sri Lankan Crisis: அரசு அலுவலங்களும் பள்ளிக்கூடங்களும் மூடப்படுகிறது: இலங்கை அரசு

கொழும்பு: எரிபொருள் இருப்புக்கள் விரைவாக குறைந்து வரும் நிலையில் இலங்கையில் எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நிய செலாவணி இல்லாமல் திண்டாடுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தின் பல துறைகளை முடக்கியிருக்கிறது.  பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கையில் நிலைமைகள் தொடர்ந்து மிகவும் மோசமாகிக் கொண்டு இருக்கும் நிலையில், நாளை (2022, ஜூன் 20 திங்கட்கிழமை) முதல் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடப்படும்.  கடந்த சில மாதங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் ஏற்பட்ட சிக்கல்களால் தொடர்ந்து தத்தளித்து வரும் இலங்கையில் கடுமையான … Read more

இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்

சீனாவின் கடன் வலைக்குள் சிக்கி சின்னா பின்னமாகியுள்ள இலங்கையின் பாதையில் பாகிஸ்தானும் செல்கிறது. லாகூர் ஆரஞ்ச் லைன் திட்டத்திற்கு வழங்கியுள்ள 55.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை, 2023  நவம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துமாறு சீனா சமீபத்தில் கோரியது பாகிஸ்தானிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பொருளாதார நிலை ஏற்கனவே மிக மோசமாக உள்ளபாகிஸ்தான் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. இதற்கிடையில், மார்ச் மாத இறுதியில், வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் வைத்திருக்கும் அந்நியச் … Read more

Abortion Rights: குழந்தை பிறப்பை முடிவு செய்வது அடிப்படை உரிமை: பெண்களின் உரிமை

அமெரிக்காவின் அயோவா உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பாதுகாப்புக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதாக போராட்டங்கள் வெடித்துள்ளன. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினார்கள். தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் 2018 தீர்ப்பை மாற்றியமைக்கிறது. 2018ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு, அயோவா மாகணத்தில் கருக்கலைப்பு செய்யும் உரிமை ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. மேலும் படிக்க | கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை தற்போதைய … Read more

வாரத்திற்கு 50 லட்சம் கொசுக்களை உற்பத்தி செய்யும் சிங்கப்பூர் அரசு!

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு டெங்கு, மலேரியா போன்ற நோய்  பெருமளவில் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அந்த நோய்களின் தாக்கம் மக்களிடையே கதவுகளையும், ஜென்னல்களையும் எப்போதும் மூடிவைக்கும் ஒரு பழக்க வழக்கத்திற்கு தள்ளியது.  இருப்பினும் இப்போதும் ஒரு சில இடங்களில் மலேரியா, டெங்கு காய்ச்சல்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த இரண்டு நோய்களையும் பரப்பும் முக்கிய நோய் கடத்தியாக கொசு உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு சந்தையில் இறக்கப்பட்ட கொசு வத்தி, எலக்ரிக் கொசு மருந்து … Read more

Epidemic in North Korea: வடகொரியாவை வாட்டி வதைக்கும் மற்றொரு வைரஸ் தொற்று

சியோல்: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வட கொரியாவில் மற்றொரு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.  நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஹெஜு நகரில் ஒரு தீவிர குடல் தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் பரவல் தொடர்பாக வியாழக்கிழமையன்று வட கொரியா தெரிவித்தது. தற்போதைய கோவிட்-19 வெடிப்புக்கு கூடுதலாக மற்றொரு தொற்று நோய் வெடித்துள்ளதாக அறிவித்த வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் புதிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது தனிப்பட்ட மருந்துகளை நன்கொடையாக வழங்கியதாகக் கூறினார். புதிய தொற்றுநோய் எவ்வளவு தீவிரமானது … Read more

China vs Aliens: சீனாவுக்கு சிக்னல் கொடுக்கும் ஏலியன்கள்: ஆச்சரியம் ஆனால் உண்மையா

வேற்றுகிரகவாசிகளிடமிருந்து சிக்னல் கிடைத்ததாக சீனா தெரிவித்ததாக வெளியாகும் செய்திகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.     சீன அரசுக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ் ஒன்றில் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து சிக்னல்கள் கிடைத்தது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது. ஆனால் அந்த அறிக்கையை பிறகு அந்த பத்திரிக்கை நீக்கிவிட்டது. அறிக்கையை திரும்பப் பெறுவதற்கான காரணம் எதையும் அந்த நாளிதழ் தெரிவிக்கவில்லை.   வேற்றுகிரகவாசிகள் இறுதியாக மனிதர்களை தொடர்பு கொண்டார்களா? ஆம் என்று சொல்வதற்கு சீனாவின் பத்திரிக்கை ஆதாரம் இருந்தாலும், அது இப்போது நீக்கப்பட்டுவிட்டதால் … Read more

குரங்கு அம்மைக்கு புதியப் பெயர் வைக்க ஆலோசனை

உலகம் முழுவதும் 39 நாடுகளில் 1,600-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 1,500-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மையின் அறிகுறிகள் உள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது. அண்மையில், ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள 30 விஞ்ஞானிகள் கொண்ட குழு இந்நோயின் பெயரை மாற்றக்கோரி உலக சுகாதார அமைப்புக்கு கோரிக்கை விடுத்தது. இந்த பெயர் பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் … Read more

அமெரிக்காவில் வங்கிக் கட்டணங்கள் உயர்ந்தன: பொருளாதார மந்தநிலையா: அதிர்ச்சி

அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதஙக்ளை உயர்த்தியதால், அந்நாட்டில் பொருளாதார மந்தநிலை அதிகரித்துவரும் அச்சங்கள் உண்மையாகின்றன.   அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve System), தனது கொள்கை விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. புதன்கிழமையன்று உயர்த்தப்பட்ட இந்த வட்டி விகிதமானது 1.5% முதல் 1.75% வரை வட்டிகளை அதிகரித்தது. 1994 க்குப் பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமான முடிவாக இது பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய இந்த வட்டி விகித உயர்வால், அந்நாடு சந்தித்து வரும் … Read more

தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே: அரசு அறிவுறுத்தல்

இஸ்லாமாபாத்: அந்நியச் செலாவணி செலவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய வழியாக தேநீர் பருகுவதை கணிசமாக குறைத்துக் கொள்வது நாட்டின் கஜானாவுக்கு நல்லது என்று பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதிக்காக செலவு செய்யும் அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேநீர் நுகர்வை … Read more

Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்!

ஜப்பானில் தங்கையை வாடகைக்கு விடுங்கள்: மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் குடும்பமாக ஒன்றாக வாழும் போதுக்கூட சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள். தனிமையைக் கடக்க பல நேரங்களில் இளைஞர்கள் … Read more