தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் பாகிஸ்தானியர்களே: அரசு அறிவுறுத்தல்

இஸ்லாமாபாத்: அந்நியச் செலாவணி செலவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய வழியாக தேநீர் பருகுவதை கணிசமாக குறைத்துக் கொள்வது நாட்டின் கஜானாவுக்கு நல்லது என்று பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதிக்காக செலவு செய்யும் அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேநீர் நுகர்வை … Read more

Sister On Rent: ஒன்றாக நேரத்தை செலவிட உங்களுக்கான சகோதரி வாடகைக்கு எடுக்கலாம்!

ஜப்பானில் தங்கையை வாடகைக்கு விடுங்கள்: மகிழ்ச்சியான குடும்ப கலாச்சாரம் இப்போது வெறும் காட்சி படங்களில் மட்டுமே இருக்கும் அளவுக்கு குறைந்து வருகிறது. காலம் மற்றும் வயதுக்கு ஏற்ப சிலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு குடும்பம் பல்வேறு காரணங்களால் பிளவுபடுகிறது. அதன் காரணமாகவும் தனிமையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் குடும்பமாக ஒன்றாக வாழும் போதுக்கூட சிலர் தனிமை மற்றும் மனச்சோர்வு (Depression) போன்ற கடுமையான நோய்களுடன் போராடுகிறார்கள். தனிமையைக் கடக்க பல நேரங்களில் இளைஞர்கள் … Read more

ஆப்பிரிக்காவை இழிவுபடுத்தும் இனவெறி மற்றும் பாரபட்சமான பெயரா Monkeypox: பின்னணி

மங்கிஃபாக்ஸ் என்ற வார்த்தை இனவெறியைத் தூண்டுகிறது மற்றும் பாரபட்சமானது என்று விஞ்ஞானிகள் கூறியதையடுத்து குரங்கு அம்மை நோயின் பெயரை உலக சுகாதார அமைப்பு மாற்ற முடிவு செய்துள்ளது.  30 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இணைந்து கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், “குரங்குக் காய்ச்சலுக்கு பாரபட்சமற்ற மற்றும் களங்கமற்ற பெயரிடல் அவசரமாக தேவை” என்று கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.  உலக சுகாதார நிறுவனம் (WHO) குரங்கு பாக்ஸை மறுபெயரிட வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது, இந்த வைரஸின் “பாரபட்சமான” … Read more

கல்லறையின் சாபம்: திறக்காதே எச்சரிக்கும் 1800 ஆண்டு பழைய கல்லறை

இஸ்ரேலின் பீட் ஷீஅரிமில் உள்ள பாரம்பரிய தொல்லியல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை ஒன்றில் திறக்காதே என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 65 ஆண்டுகளுக்கு பிறகு யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லறை இதுவாகும். பயங்கர எச்சரிக்கையுடன் கூடிய கல்லறை என்பது திகில் திரைப்பட ரசிகர்களுக்கு புதிதல்ல. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல்லறையைக் கண்டுபிடித்ததால், திறக்காதே, நான் சபிக்கப்பட்ட கல்லறை என்ற சிவப்பு நிற எச்சரிக்கை கொஞ்சம் திகைப்பைத் தரும். இஸ்ரேலில் (Isreal) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னத்தில் … Read more

ட்விட்டர் ஊழியர்களுடன் முதல் முறையாக பேச்சுவார்த்தை நடத்தும் எலான் மஸ்க்

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.  இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் … Read more

பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாகக்கூறிய இலங்கை மின்சார சபை தலைவர் ராஜினாமா!

இலங்கை அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபையின் (CEB) தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ, அதானி குழுமத்துடனான எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைக்குரிய அறிக்கையால் இலங்கையிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள சர்ச்சையை அடுத்து, இன்று எம்.எம்.சி. பெர்னாண்டோ ராஜினாமா செய்தார். இலவச சபையின் தலைவர் எம் எம் சி பெர்டினாண்டோ எனக்கு வழங்கிய ராஜினாமா கடிதத்தை நான் ஏற்றுக்கொண்டேன். “இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்” என … Read more

அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வார இறுதியில் சிகாகோவில் பலவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 16 பேர் காயமடைந்துள்ளனர். இது நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் மேலும் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு … Read more

உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 109 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போர் முடிவடையும் சாத்தியக் கூறுகள் எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில், பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் இரு நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். ரஷ்ய இராணுவம் பேரழிவை ஏற்படும் ஆயுதங்களைப் உக்ரைன் மீது பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் சனிக்கிழமை எச்சரித்தனர். உக்ரைனின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் மேலும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் … Read more

ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து அடிக்கடி பல விதமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உக்ரைன் போரின் மத்தியில், புடினின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை கூறியுள்ளது. முன்னதாக, புடினுக்கு புற்றுநோய் இருப்பதாகவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக, ​​முன்னாள் KGB உளவாளியிடம் ரஷ்யாவிடம் அதிகாரம் ஆட்சியை ஒப்படைப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அத்தகைய அறிக்கை எதுவும் ரஷ்ய அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது அவரது … Read more

உலகிற்கு அச்சுறுத்தலாக மாறும் வடகொரியா; கிம் ஜாங் உன்னின் முக்கிய முடிவு

உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் முடிவை வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் எடுத்துள்ளார். மூன்று நாள் கூட்டம் நடந்த கூட்டம் தொடர்பாக,  சனிக்கிழமையன்று அரசின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கிம் எடுத்துள்ள முடிவு உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.    வடகொரியா, மேலும் புதிய அணு ஆயுத சோதனைகளை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து, கிம் ஜாங் உன் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆயுத உற்பத்தியை இரட்டிப்பாக்குவது … Read more