ஓவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கை வெளியிடும் முதல் நாடாகிறது கனடா

ஒவ்வொரு சிகரெட் மீதும் சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறவுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 2020 இல் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தினசரி அல்லது அவ்வப்போது புகைப்பிடிப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. தனி நபர் சிகரெட்டுகள் மீது சுகாதார எச்சரிக்கைகளை வெளியிடும் உலகின் முதல் நாடாக மாறவிருக்கும் கனடா தான், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புகையிலை பொருட்களின் பேக்கேஜிங்கில் கிராஃபிக் புகைப்பட எச்சரிக்கைகளை உள்ளடக்குவதற்கான ஆணையை நிறைவேற்றிய முதல் நாடு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  … Read more

War For Taiwan: தைவானுக்காக போரும் நடக்கலாம்: அமெரிக்காவுக்கு சீனாவின் சூசக எச்சரிக்கை

தைவானுக்காகப் போரைத் தொடங்க தயக்கம் இல்லை என்றும் தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவது கட்டாயம் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது. “தைவான் சுதந்திரம்” என்ற சதித்திட்டத்தை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்துவதே சீனாவின் முடிவு என்று சீன அமைச்சர் உறுதிபட தெரிவித்தார். தைவான் சுதந்திரத்தை அறிவிக்கும் பட்சத்தில், பெய்ஜிங் “போரைத் தொடங்கத் தயங்காது” என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவை எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுடன் தனது … Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதாகவும், அவை மீட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர்.  முஷாரப் நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். “குடும்பத்தினரின் செய்தி: அவர் வென்டிலேட்டரில் இல்லை. கடந்த 3 வாரங்களாக அவரது உடல்நலக்குறைவு (அமிலாய்டோசிஸ்) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு சாத்தியமில்லாத மற்றும் உறுப்புகள் செயலிழந்த கடினமான கட்டத்தில் அவர் இருக்கிறார். அவர் நன்றாக … Read more

மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை துண்டிக்க முடியாது: விளாடிமிர் புடின்

மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து, மாஸ்கோவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைத் திசைதிருப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கலை மேற்கத்திய நாடுகள் பல ஆண்டுகளுக்கு முழுமையாகத் துண்டிக்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வியாழனன்று இதை கூறினார். ரஷ்ய மன்னர் பீட்டர் தி கிரேட் அவர்களின் 350 வது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்கோவில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட பின்னர் ரஷ்ய அதிபர் … Read more

ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா

ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தபோது அஷ்ரஃப் கனி, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார்.  ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னுடன் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் குறைவான பணத்தை எடுத்துச் சென்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. SIGAR (ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல்), ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பற்றி விசாரிக்கும் நிறுவனம், வெளியிட்ட ஆதாரங்களின்படி, மூன்று ஹெலிகாப்டர்களில் அஷ்ரஃப் … Read more

இந்தியா மட்டுமே உதவி செய்கிறது – சர்வதேச நிதியத்தின் உதவியை கோரும் ரணில் விக்கிரமசிங்கே

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.  இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார்.  … Read more

Video: பாலம் ஒன்று திறப்பு விழாவிலேயே சரிந்த அதிர்ச்சி சம்பவம்

மெக்ஸிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், மரப்பாலம் ஒன்றின் திறப்பு விழாவின் போது, புத்தம் புதிய பாலம் சரிந்து, அதிலிருந்த பலர் கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோவின் குர்னவாகா நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் திறக்கப்பட்டது. சம்பவத்தின் போது, ​​மேயர் மற்றும் பலர் உடனிருந்தனர். இயற்கை எழில் கொஞ்சும் ஓடையின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் மரப் பலகைகளால் ஆனது. பாலத்தின் உலோக சங்கிலிகள் சமீபத்தில் மறுவடிவமைக்கப்பட்டன.  இந்நிலையில், மெக்சிகோவின் இந்த தரைப்பாலம் திறக்கப்பட்ட … Read more

புற்றுநோயை 100% குணப்படுத்தும் அரிய மருந்து – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று சாதனை

மனிதர்களை தாக்கும் நோய்களில் குணப்படுத்தவே முடியாத முக்கிய நோய்களில் ஒன்றாக உள்ளது  புற்றுநோய். ரத்த புற்று, எலும்பு புற்று, நுரையீரல் புற்று, குடல், கல்லீரல் என இதில் பல்வேறு வகைகள் உள்ளன. இவை நமது உடலின் எந்த பகுதியையும் தாக்கும் அபாயம் உள்ளது. புற்றுநோய் பாதிப்பை விட அது மேலும் பரவாமல் இருக்க மெற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் மிகவும் வலி மிகுந்தவை. இதற்காக தற்போதுவரை கீமோதெரபி எனும் சிகிச்சை முறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  புற்றுநோயை குணப்படுத்தும் … Read more

USA vs North Korea: பேச்சுவார்த்தைக்கே வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது வடகொரியா: அமெரிக்கா

வட கொரியாவுடன் உயர்நிலை பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருந்தபோதிலும், அதை வடகொரியா புறக்கணிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் வட கொரியாவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் விரும்புவதாக பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூன் 7, செவ்வாய்கிழமை) கூறுகையில், பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவிடம் பல முறை முன்வந்தும், வட கொரியா  புறக்கணித்துள்ளது. கோவிட் பரவலில் உதவுவதற்கான அமெரிக்காவின் உதவியையும் தேவையில்லை … Read more

Mystery in Mexico: பிறந்த சில நாட்களிலேயே கண் பார்வை பறிபோகும் மர்மம்

உலகில் சில இடங்களில் நடக்கும் விசித்திரமான  நிகழ்வுகளும் மர்மங்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுகின்றன. சில சமயங்களில் அவை விஞ்ஞானிகளுக்கு கூட தீர்க்க முடியாத புரியாத புதிராக உள்ளது. அவ்வகையான மர்மம் நிறைந்த ஒரு இடம் தான் மெக்ஸிகோவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தில் பிறந்து சில நாட்களிலேயே கண்பார்வை இழக்கும் சம்பவங்கள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  இந்தக் கிராமத்தில் குழந்தைகள் பிறக்கும் போது நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் தான் பிறக்கின்றன. ஆனால், பிறந்து … Read more