104வது நாளாக தொடரும் போர்; அமெரிக்கா மீது ரஷ்யா விதித்துள்ள முக்கிய தடை

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 104 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனுடன் உக்ரைனுக்கு ஆதரவான நாடுகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்யா இப்போது அமெரிக்கா மீது மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் 61 அமெரிக்க  61 அமெரிக்காவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள்  மீது பொருளாதார … Read more

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் தேவாலய கட்டடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் இருந்தவர்களை நோக்கி  கண்மூடித்தனமாக சுட்டதாக ஓண்டோ மாநில காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் போது துப்பாக்கி ஏந்திய நபர்  நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒண்டோ மாநிலத்தின் … Read more

Extremely Poor: தீவிர வறுமை நிலை என்பது குறித்த உலக வங்கியின் புதிய அளகோல்

உலகம் முழுவதும் பண வீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில், உலகளாவிய அளவில் வறுமைக் கோடு என்பதற்கான வருமான வரையறை அவ்வப்போது மாற்றப்படுகிறது. தற்போது, ​​2015 ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கிடையில் பல விஷயங்கள் மாறியுள்ளன. எனவே உலக வங்கி இந்த புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும்.  தற்போது, ஒரு நபர் ஒரு நாளைக்கு 167 ரூபாய் ($2.15) க்கும் … Read more

அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரம் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு பிரசித்தி பெற்றது. நேற்று இரவு மக்கள் கூட்டம் அதிகமிருந்த பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். மக்கள் அதிகமாகக் கூடும் பகுதி என்பதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 2 … Read more

Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள் விபச்சாரத்தின் பாதையை தேர்ந்தெடுப்பதாக ஊடக அறிக்கை ஒன்றன் மூலம் தெரியவந்துள்ளது. தி டெலிகிராப் நாளிதழில் வெளியான செய்தியின்படி, நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் பெண்கள் பாலியல் தொழிலுக்கும் விபச்சாரத்துக்கும் தள்ளப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இலங்கை நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு, பானம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட மக்கள் கைக்கு எட்டாமல் , அதன் விலைகள் விண்ணை தொடும் நிலையில் உள்ளது. பணவீக்கம் தினம் தினம் புதிய … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்பாதுகாப்பில் பெரும் குளறுபடி… நடந்தது என்ன

அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டிற்கு அருகே நோ பிளை சோன் (No Fly Zone) என்னும் விமனம் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் விமானம் நுழைந்ததை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, அதிபரும் அவரது மனைவியும் வீட்டில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலாவேரில் உள்ள பிடனின் வீட்டிற்கு அருகே ஒரு … Read more

தானியங்களை திருடி விற்கும் ரஷ்யா: துருக்கிக்கான உக்ரைன் தூதர் குற்றச்சாட்டு

உலகளாவிய உணவு நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டிலுள்ள தானியங்களை திருடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. உலக அளவில் கோதுமை மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது உக்ரைன் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, அந்நாட்டின் ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது, இது உலகளாவிய உணவு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் தானியங்களை திருடி துருக்கி உட்பட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக துருக்கிக்கான உக்ரைன் தூதர் வாசில் போட்னர் வெள்ளிக்கிழமையன்று (2022, … Read more

10% ஊழியர்கள் வேலை நீக்கம்; ட்விட்டருக்குப் பதில் டெஸ்லாவில் கை வைத்த எலான் மஸ்க்

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக … Read more

சிறுநீர் கழித்து சண்டையிட்டதால் தரையிறக்கப்பட்ட விமானம்!

லண்டனில் இருந்து கரிரீஸ் கிரீஸ் நோக்கி பறந்துகொண்டிருந்த Jet 2 என்ற விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவரும் மது அருந்திருந்ததாக தெரிகிறது. இருவரும் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையின் ஆரம்பமாக ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் பெருகி சத்தமிட்டு இருவரும் போதை தலைக்கேறி சண்டை போட்டுக்கொண்டனர். முதலில் பேச்சு வார்த்தையாக இருந்த சகோதரர்கள் சண்டை சற்று நேரத்தில் கைகலப்பு ஆகியது. இதனால் சக பயணிகள் … Read more

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வால் தத்தளிக்கும் பாகிஸ்தானிகள்

சீன வங்கிகள் $2.3 பில்லியன் மறுநிதியளிப்பு செய்ய ஒப்புக்கொண்டதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை பாகிஸ்தான் பெருமளவில் உயர்த்துகிறது. 2022-23 நிதியாண்டில், பாகிஸ்தானின் தேசிய மின்சக்தி ஒழுங்குமுறை ஆணையம் (NEPRA) அடிப்படை மின் கட்டணத்தை கிலோவாட் ஒன்றுக்கு (kWh) ரூ.7.9078 உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது அடிப்படை மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.16.91 என்பதில் இருந்து 24 ரூபாயாக அதிகரிக்கும். பாகிஸ்தானின் நிதிச் சிக்கல்கள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. அதற்கான நம்பிக்கைகள் கானல்நீராகவே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அரசு … Read more