Bilateral Microstomia: அரிய நோயால் நிரந்திர புன்னனகையுடன் பிறந்த குழந்தை

உலகில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அழுது கொண்டே தான் பிறக்கிறது. ஆனால், நிரந்திர புன்னகையுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா…  வாழ்க்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகின்றன. சமீபகாலமாக அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.  Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் … Read more

Monkeypox: குரங்கு அம்மை சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது; எச்சரிக்கும் WHO

உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை காய்ச்சல் நோய் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு WHO தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என கனடா, அமெரிக்கா உள்ளிட்ட … Read more

கிரேக்க எண்ணெய் கப்பல்களை கைப்பற்றி பதிலடி கொடுத்த ஈரான்: அதிகரிக்கும் பதற்றம்

கிரேக்க நாட்டின் இரண்டு கிரேக்க எண்ணெய் டேங்கர்கள் மற்றும் அதன் பணியாளர்களை இரான் கைப்பற்றியது. இரான் கைப்பற்றிய இரண்டு கப்பல்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கிரீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானின் இந்த செயல்கள் இருதரப்பு உறவுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கிரேக்க நாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் கிரீஸ் மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகள் மோசமடைவதற்கான செயல் இது என்று சர்வதேச அளவில் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். … Read more

இந்தோனேசியாவில் 6 1 நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம்” என்று சுனாமி அறிவுறுத்தல் குழு தெரிவித்துள்ளது. கிழக்கு திமோர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (2022, மே 27)  6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இருப்பினும் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. இந்த நிலநடுக்கம் “இந்தியப் பெருங்கடல் பகுதியில் … Read more

20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை…எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

வைரஸ் தொற்றால் ஏற்படும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமரூன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு புதிய நாடுகளிலும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை … Read more

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளது…ஜெனிஃபர் லோபஸ் உருக்கம்

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி … Read more

வடகொரியா மீது பொருளாதாரத் தடை: வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்திய இரு நாடுகள்

வட கொரியாவின் ஏவுகணை பரிசோதனைகளை தண்டிக்கும் அமெரிக்காவின் முயற்சியை நிறுத்த ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தின. தென்கொரியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் வந்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சியோலில் இருந்து புறப்பட்டுவிட்டார். அவர் கிளம்பிய உடனேயே, வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) உட்பட மூன்று ஏவுகணைகளை சோதனை செய்தது. இது மேற்கத்திய நாடுகளுக்கு அச்சம் விளைவித்துள்ள நிலையில், வட கொரியாவின் மீதான கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க … Read more

41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரன்கள் : 113வது பிறந்தநாளை கொண்டாடும் நபர்.!

அப்பா, அம்மா மற்றும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் சுருங்கிபோன குடும்ப சூழலைதான் நாம் இன்று பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கூட்டு குடும்பம் என்று ஒன்று இருந்தது என கதை சொல்லும் நிலையும் உருவாகி விட்டது. நம் தாத்தா, பாட்டி, பாட்டன் என பரம்பரை கடந்து வந்த பாதை இதுவல்ல என்பதுதான் உண்மை.  குறைந்தது 10 குழந்தைகளை பெற்றெடுத்து உறவுகளை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தங்களுக்கென ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதையே கனவாகவும் லட்சியமாகவும் கொண்ட … Read more

Elon Musk: 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.54,50,67,53,50,000 இழந்தார் எலோன் மஸ்க்

கடந்த 24 மணி நேரத்தில் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது என்றாலும், 2022 ம் ஆண்டில் அவர் 70 பில்லியன் டாலரை இழந்தார் என ப்ளூம்பெர்க் குறியீடு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.  புதன்கிழமை, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு, டெஸ்லாவின் பங்குகளில் சுமார் 5 சதவீதத்துடன் மீண்டும் 200 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றாலும், இந்த ஆண்டு எலோன் மஸ்கின், நிகர சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலருக்கும் … Read more

ஆஃப்கன் குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது

ஆஃப்கானிஸ்தானில் நேற்று (2022, மே 25) நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காபூல் மசூதி மற்றும் மசார்-இ-ஷரீப்பில் மூன்று மினி வேன்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.  ஆஃப்கனின் மசார்-இ-ஷெரீப் பகுதியில் மினிவேன் குண்டு வெடிப்புகளில் பலர் காயமடைந்துள்ளனர்.  மினிவேன்களுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக ஆப்கனின் பல்க் மாகாண தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார். மசார்-இ-ஷரீப் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் அனைவரும் சிறுபான்மை இன ஷிய இஸ்லாமிய இனத்தை … Read more