அமெரிக்காவில் மாணவர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்!

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல. ஆனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மாணவர்களை குறிவைத்தே நடுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும் அளவிற்கு கடந்த 1999ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.  அந்த வகையில் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் கொலராடோவின் … Read more

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?…ஜோ பைடன் வேதனை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இந்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எப்போது முடிவு கட்டப்போகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். … Read more

உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா… ஆம்… சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 32 பில்லியன் கோக் கேன்களுக்கு சமமான சர்க்கரை கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடல் நுண்ணுயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் (Max Planck Institute for Marine Microbiology) என்னும் கல்வி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்குள் சர்க்கரை மலையைக் கண்டுபிடித்துள்ளனர்.  உலகப் பெருங்கடல்களில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரையின் பெரிய மலைகள் … Read more

இலங்கை நிதியமைச்சர் பதவியை கூடுதலாக ஏற்ற ரணில் விக்கிரமங்கே

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றார்.  இலங்கை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதனை சீரமைக்க இலங்கை அரசு வெளிநாட்டு வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழுவை அமைத்துள்ளது. … Read more

அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

அமெரிக்காவில் மீண்டும் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் ஆகும். மேலும் இந்த நபர் … Read more

இலங்கையில் உச்சம் தொட்ட பெட்ரோல் விலை; ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450

அண்மையில் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதையடுத்து மஹிந்தா ராஜபக்‌ஷே பதவி விலகி, அங்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில் ரனில் விக்ரமசிங்க பிரதமரானார்.  ஆனால், அவர் ராஜபக்சே … Read more

இந்தியாவின் வெற்றியும், சீனாவின் தோல்வியும்…! பிரதமர் மோடியைப் பாராட்டிய ஜோ பைடன்

2-வது குவாட் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் மோடி, குவாட் அமைப்பின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், மிகக் குறுகிய காலத்தில் குவாட் உலகில் முக்கியமான பங்களிப்பை செய்து வருவதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் நேரில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பிரதமர் மோடிக்கு … Read more

போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கத் தயார்: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திங்களன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து, அழிவை ஏற்படுத்தி வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழியைக் கண்டறிய அவர் சந்திக்கும்  நினைக்கும் ஒரே ரஷ்ய அதிகாரி புடின் மட்டுமே, வீடியோ இணைப்பு மூலம் உரையாற்றும் போது ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக … Read more

மூத்த ராணுவ அதிகாரி மரணம்..! சவப்பெட்டியைச் சுமந்து சென்ற கிம் ஜாங் உன்

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா … Read more

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனிஸ் பதவியேற்பு

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன், தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றி அந்தோணி அல்பேனீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வானார்.  கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமர் ஆவார். அவருடன் 4 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். … Read more