தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தையின் மையம் வடகொரியா

தென்கொரியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பல முக்கிய முடிவுகளை எடுப்பார்.சியோலில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறும்.  சுற்றுப்பயணத்தில், இன்று, (2022 மே 20) தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பியோங்டேக் வளாகத்தில் உள்ள செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சென்றிருந்தார்.  அப்போது அவருடன் இருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், அங்குள்ள விஷயங்களை எடுத்துரைத்தார். … Read more

Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் … Read more

உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்

உக்ரைனின் மரியுபோலில் உள்ள எஃகு ஆலை முற்றுகையிடப்பட்டதகவும், 531 உக்ரைனின் பாதுகாவலர்கள் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது. வெள்ளியன்று (2022, மே 20), மரியுபோல் மற்றும் எஃகு ஆலை இரண்டும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இந்த செய்தியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் மொத்தம் 2,439 உக்ரைன் பாதுகாவலர்கள் சரணடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள எஃகு ஆலையின் முழுக் கட்டுப்பாட்டையும் ரஷ்யப் … Read more

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா எலான் மஸ்க்? அதிர்ச்சி ரிப்போர்ட்

ட்விட்டரை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், எலான் மஸ்க் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெள்ளியன்று அவரது விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு $250,000 கொடுத்ததாக ஒரு ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல் இருக்க, அப்பெண்ணுக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விமானத்தில் குழு உறுப்பினராக பணிபுரிகிறார். மஸ்க் தன்னை தகாத முறையில் … Read more

திவாலானது இலங்கை: 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை மத்திய வங்கி தகவல்

கொழும்பு: பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இதனால், மக்களின் கோபம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக எதிரொலித்த நிலையில், வேறு வழியில்லாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக … Read more

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான … Read more

வரம்பை மீறும் பெண்களுக்கு மட்டுமே வீட்டு சிறை: தாலிபான்களின் புதிய ஆணை

பெண்கள் உரிமைகள் குறித்து பேசியுள்ள தாலிபான்கள், தங்கள் ஆட்சியில் வரம்பை மீறும் பெண்கள் மட்டுமே  வீட்டு சிறையில் வைப்போம் எனக் கூறியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களை ஒடுக்கும்  வகையில் பல வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச அளவில் இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கவலைகளை வெளியிட்ட நிலையில், இப்போது பெண் உரிமைக்கு நாங்கள் எதிரி அல்ல என்பது போல் பேசியுள்ளனர். இப்போது புதிய ஆணையை வெளியிட்டுள்ளனர். தாலிபான் தலைவர் … Read more

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை; ரணில் நடத்திய முக்கிய ஆலோசனை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் ஆட்சிக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்கும் இடையே மூண்ட வன்முறையில், இலங்கை பற்றி எரிந்தது. அதில் அந்நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்ஷே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகினார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிபராக அவரது சகோதரர்  கோட்டாபய ராஜபக்ச தொடருகிறார். பின்னர் ஏற்பட்ட அரசியல் முன்னேற்றத்தில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். … Read more

மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைன் பேரழிவை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், இது உலக அளவிலும் பல்வேறு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து மிக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தப்பவில்லை. ஏர்கேப் ஹோல்டிங்ஸ … Read more

தீயை நான் பற்ற வைக்கவில்லை… பாகிஸ்தான் மாடல் வெளியிட்ட புதிய வீடியோ

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டிய நிலையில், கடுமையான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, பற்றி எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டார்.  மேலும் அந்த பதிவில் “நான் எங்கிருந்தாலும் நெருப்பு பற்றிக் கொள்ளும்.” என்று … Read more