வட கொரியா: கொரோனா அச்சத்துக்கு மத்தியில் ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு காய்ச்சல்

வடகொரியாவில் கொரோனா வைரஸ்: வடகொரியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 2,69,510 பேரில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும், 6 பேர் மேலும் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  இந்த தகவலை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இருப்பினும், கோவிட்-19 காரணமாக எத்தனை பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை வடகொரியா இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மக்கள் காய்ச்சலின் பிடியில் வேகமாக சிக்கி வருகிறார்கள்  வட கொரியாவின் வைரஸ் எதிர்ப்பு தலைமையகத்தின் கூற்றுப்படி, … Read more

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

கொரோனா வைரஸ் தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை சந்தித்து மீண்டு வர அமெரிக்கா முயற்சித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா பொருளாதார மந்தநிலை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  அமெரிக்காவிலுள்ள 80% க்கும் அதிகமான வயது வந்தோர் இந்த ஆண்டு அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்று நம்புகிறார்கள். மார்ச் கடைசி வாரத்தில் மொமென்டிவ் நிறுவனம் நடத்திய இந்த கணக்கெடுப்பில், 4000திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். … Read more

இங்கையில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது: ரணில் விக்கிரமசிங்க

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திங்களன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு நாளுக்கான பெட்ரோல் மட்டுமே இருப்பில் உள்ளது என்று கூறினார்.  1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்படும் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையில் நிற்கவோ அல்லது நிரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர திங்கட்கிழமை தெரிவித்தார். கொழும்பில், நகரத்தின் மிகவும் பிரபலமான போக்குவரத்து சாதனமான ஆட்டோ ரிக்ஷாக்கள் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக … Read more

இனி தொடர்வது எங்கள் மதிப்புக்கு இழுக்கு… McDonald's எடுத்த முக்கிய முடிவு

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடிவில்லாமல் தொடரும் நிலையில், ஃபாஸ்ட்ஃபுட் உணவக சங்கிலியான மெக்டொனால்டு  நிறுவனம் திங்களன்று தனது ரஷ்ய வணிகத்தை விற்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது. நிறுவனம் ரஷ்யாவில் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது, இதில் 62,000 பேர் பணியாற்றுகின்றனர். உக்ரைன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து வெளியேறும் மற்றொரு பெரிய மேற்கத்திய நிறுவனம் மெக்டொனால்டு. போரினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக் காட்டிய  மெக்டொனால்ட் நிறுவனம், ரஷ்யாவில் வணிகம் செய்வது இனி மெக்டொனால்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் … Read more

இந்தியாவைக் குறை கூறுவதால் பிரச்சனை தீராது…ஜி-7 நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த சீனா

உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும், இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் கோதுமை ஏற்றுமதிக்குத் உடனடியாகத் தடை விதிப்பதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மேலும் அரசு மூலம் ஏற்றுமதி செய்வதால் உண்மையாக உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவை விமர்சித்த ஜி-7 நாடுகளுக்கு சீனா … Read more

புற்று நோயால் ரஷ்ய அதிபரின் உடல் நிலை மோசமாகிறதா… வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த சில வாரங்களாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல விதமான செய்தி அறிக்கைகள் வெளியாகின. சமூக ஊடகங்கள் மூலமும் பல தகவல்கள் பகிரப்பட்டன. பெரும்பாலானவர்கள் அவர் மிகவும் கடுமையான நோய்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறுகின்றனர். சமீபத்திய அறிக்கையில், புடின் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விளாடிமிர் புடின் தற்போது “மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார்” என்றும் “இரத்த புற்றுநோயால்” பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூற்றுக்கள் ரஷ்யாவில் அரசியல் ஆதிக்கம் உள்ள ஒரு தொழில் … Read more

100 அடி உயரத்தில் தொங்கிய குழந்தை..உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்

கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 8-வது தளத்தில், இளம்பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை, குழந்தையை வீட்டிலேயே விட்டுவிட்டு அவரது தாய் கடைக்குச் சென்றார். அப்போது அக்குழந்தை மெத்தை மற்றும் பொம்மைகளைப் பயன்படுத்தி ஜன்னலில் ஏறியபோது நிலை தடுமாறியதால், சுமார் 100 அடி உயரத்தில் ஜன்னலின் கம்பியைப் பிடித்துத் தொங்கியது. அக்குழந்தையின் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசிக்கும் சபித் என்ற நபர், அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டு … Read more

வேற்றுகிரக வாசிகளை 259 முறை பார்த்ததாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு ஆராச்சியாளர்கள் பல வருடங்களாக ஆராச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கிறார்களா, இருந்தால் அவர்கள் எப்படி காட்சி அளிப்பார்கள் என்ற எண்ண ஓட்டம் அனைவர் மனதிலும் ஓடுவதை தவிர்க்க முடியாது.  இந்நிலையில், வேற்று கிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பிரிட்டிஷ் யுஎஃப்ஒ ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 … Read more

கிம் ஜாங் உன் எச்சரிக்கை: கொரோனா பரவலை குறைக்க மருந்து நிர்வாகம் அவசியம்

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதால் மருந்து விநியோகத்தை முறைப்படுத்துவது அவசியம் என வட கொரியாவின் இராணுவத்திற்கு, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், பியாங்யாங்கில் உள்ள ஒரு மருந்தகத்தை ஆய்வு செய்யும் போது, ​​கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் முகக்கவசத்தைஅணிந்துள்ள புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட வட கொரியாவில் ‘அடையாளம் தெரியாத காய்ச்சலால்’ மேலும் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளது.  கடந்த 12-ம் … Read more

உக்ரைன் போரில் ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கை: அம்பலப்படுத்தும் இங்கிலாந்து உளவுத்துறை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலக அளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. பிற நாடுகளுக்கு மட்டுமல்ல, ரஷ்யாவுக்கே பலத்த சேதத்தையும், பிரச்சனைகளையும் இந்தப் போர் ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யாவின் படைபலத்தில், அதன்  தரைப்படையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கலாம் என இங்கிலாந்து பாதுகாப்புத்துறையின் உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன.   “ரஷ்ய UAVகள் தந்திரோபாய விழிப்புணர்வு மற்றும் பீரங்கிகளை இயக்குவதற்கு இன்றியமையாதவை, ஆனால் உக்ரேனிய விமான எதிர்ப்பு திறன்களால் பாதிக்கப்படக்கூடியவை” என்று இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை … Read more