எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்

டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வங்கிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ​​ட்விட்டரின் வருமானத்தை அதிகரிக்க, ஆட் குறைப்பு செய்வது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், எலான் மஸ்க், வங்கியாளர்களுடனான உரையாடலில், மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில், ” ஆட்குறைப்பு” பற்றி விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தில் ஆட் குறைப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கருத்து  ஏதும் தெரிவிக்கவில்லை. … Read more

கிவ் மீது குண்டு மழை பொழியும் ரஷ்யா; ஐநா தலைவர் பயணத்தின் போது நடந்த தாக்குதல்

ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு மாத காலத்திற்கும் மேலாக தொடரும் நிலையில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சென் நிலையில், சில மணிநேரங்களிலேயே அந்நாட்டின் தலைநகரான் கிவ் நகரில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதலை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வியாழன் அன்று (ஏப்ரல் 28) உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு ஐக்கிய நாடுகளின் தலைமை செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா இந்த தாக்குதலை … Read more

டெஸ்லா பங்குகளை விற்ற எலன் மஸ்க்

பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு கடந்த திங்களன்று வாங்கினார். ட்விட்டரை வாங்குவதற்கான நிதியை திரட்ட எலன் மஸ்க் டெஸ்லாவில் தனக்குள்ள பங்குகளை விற்கக்கூடும் என தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.  தற்போது டெஸ்டா நிறுவனத்தில் தனக்குள்ள பங்குகளில் 400 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். டெஸ்டாவில் 17% பங்குகளை வைத்துள்ள … Read more

போர் என்பது 21ம் நூற்றாண்டில் மிகவும் அபத்தமானது: ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ்

ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்று அங்கு போர் நிலைமைகளை பார்வையிட்டார்.  இர்பின் மற்றும் புச்சா உள்ளிட்ட உக்ரேனின் நகரங்களுக்கு சென்ற அவர், ரஷ்யாவின் போர் ஏற்படுத்திய சேதங்களை பார்வையிட்டார். போரோடியங்காவிற்கு விஜயம் செய்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் போர் என்பது தீமையானது, அபத்தமானது என்று விவரித்தார். குடெரெஸின் சுற்றுப்பயணத்தின் போது, ​​நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரஷ்ய படைகளால் கொல்லப்பட்டதாக அவரிடம் கூறப்பட்டது. உக்ரேனிய அதிகாரிகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உட்பட உக்ரைனில் … Read more

பிரான்ஸ் அதிபர் மீது தக்காளி வீச்சு

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இம்மானுவேல் மேக்ரோன் 2-வது முறையாக அதிபராகி உள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் பிரான்சில் ஒரே நபர் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முதற்கட்டத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2-ம் கட்டத் தேர்தலில் மேக்ரோனுக்கு 58 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.  தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செர்ஜி பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு இம்மானுவேல் மேக்ரோன் வருகை … Read more

அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன் ஆனாலும் நேரம் பத்தலையே

மனைவியை காதலிக்க நேரம் ஒதுக்கி வாழும் மனிதரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆனால், 9 மனைவிகள், அதுவும் அழகான மனைவிகள் இருந்தால், பாவம் கணவர் என்ன செய்வார்? ஆனால் வருத்தம் என்னவென்றால், காதலுக்காக டைம் டேபிள் போட்டாலும் அதை சரிவர கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதாம்!  பிரேசிலில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ 9 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  இப்போது அவர் அனைவருக்கும் உரிய நேரத்தை வழங்காததால் கவலைப்படுகிறார். மனைவிகள் அனைவரும் அவருடன் … Read more

மன வளர்ச்சி குன்றிய இந்திய வம்சாவழியை தூக்கிலிட்ட சிங்கப்பூர் அரசு! காரணம் என்ன?

மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் நாகேந்திரன் தர்மலிங்கம், 34 வயதான மன வளர்ச்சி குன்றி நபர் ஆவார்.  இவர் 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில், தனது கால் தொடையில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை ஸ்டிராப்பால் கட்டிக்கொண்டு மறைத்து கடத்தி செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரின் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் (இது உலகின் மிகக் கடுமையான சட்ட திட்டம்) 15 கிராமிற்கு அதிகமாக போதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும் … Read more

ட்விட்டரால் திசை மாறிய எலான் மஸ்க்..ஒரே நாளில் சரிந்த டெஸ்லா பங்குகள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்குக்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய அதே சமயம் அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ட்விட்டரை வாங்குவதற்காக … Read more

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசிற்கு கொரோனா தொற்று

கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தான் வீட்டில் இருந்தபடியே பணிகளைத் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று இல்லை என பரிசோதனை முடிந்த பின்னரே அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  Today I tested positive for COVID-19. I have no symptoms, and I will continue to isolate and follow CDC guidelines. … Read more

குழந்தைகளை தாக்கும் மர்மக் காய்ச்சல்; அலட்சியப்படுத்த வேண்டாம்

உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் இன்று ஒரு மர்மமான நோயுடன் போராடி வருகின்றனர். இந்த நோயிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினால், அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.  இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும் இந்த மர்ம நோயால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக தி சன் செய்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வல்லுநர்கள் சில அறிகுறிகளை வெளியிட்டுள்ளனர் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும், இதனால் குழந்தைக்கு … Read more