எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்,  வாங்குவது உறுதியாகியுள்ளது. மஸ்க் கடந்த சில காலமாக ட்விட்டரை வாங்க முயற்சித்து வந்த நிலையில், தற்போது  ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.  ட்விட்டர் நிறுவனத்தை  44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின்  9.2 சதவீத பங்குகளை வாங்கிய நிலையில், தற்போது 44 பில்லியன் டாலருக்கு நிறுவனத்தையும் வாங்க ட்விட்டர் … Read more

9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல்

ரயில்களை தடம் புரள வைப்பதும்,  எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட  ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது.  ஒசாமா பின்லேடன் என்ற உலகளாவிய பயங்கரவாதி (International Terrorist), 2001 இல் 3,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சோகமான 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா மீது இரண்டாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்று தெரியவந்துள்ளது.    ஒசாமா பின்லேடனை, கொன்ற பிறகு அவர் பதுங்கியிருந்த இடத்தில் … Read more

Beijing Corona Alert லாக்டவுன் அச்சத்தால் பெய்ஜிங்கின் கடைகளில் காலியாகும் பொருட்கள்

கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் சீனாவில் அண்மைக்காலமாக மீண்டும் அதன் தாக்கம் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது.   கொரோனா வைரஸ்  அதிக அளவில் அதிகரித்து வருவதால் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சீனாவிற்கு சங்கடங்கள் அதிகரித்தால், அந்நாட்டு அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், குடிமக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஷாங்காய் நகரில் கடுமையான கட்டுப்பாடுகளும் லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக பெய்ஜிங்கிலும் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது. பெய்ஜிங்கிலும் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் … Read more

Energy Drink: ஆறு வயது குழந்தையின் உயிருக்கு எமனான எனர்ஜி ட்ரிங்க்

இன்றை துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், மனிதர்களின் உடல் பல நோய்களின் அடைக்கலமாக மாறி வருகிறது. அதுவும் இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது, ஆனால்  6 வயதான குழந்தை மாரடைப்பால் இறந்தது என்றால் நம்ப முடியவில்லை அல்லவா…. உங்களுக்கு இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சிகரமாகவும் இருக்கலாம், ஆனால் இது வடகிழக்கு மெக்சிகோவில் நடந்துள்ளது. எனர்ஜி  பானத்தை குடித்ததால் மரணம் தி மிரர் இதழில் வெளியான செய்தியில், வடகிழக்கு மெக்ஸிகோவில் உள்ள மாடமோரோஸில் 6 வயது … Read more

நிலவில் அணுவை வெடிக்க செய்ய அமெரிக்கா திட்டமிட்டதா; உளவு தகவல் கூறுவது என்ன

அமெரிக்காவின் சந்திரனுக்கான மிஷன் பற்றிய மிக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நிலவில் அணு வெடிப்பு  ஒன்றை நடத்த அமெரிக்கா, மிஷன் ஒன்றை திட்டமிட்டது என்று சில உளவுத்துறை ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அட்வான்ஸ்டு ஏரோஸ்பேஸ் த்ரெட் ஐடென்டிஃபிகேஷன் புரோகிராமின் (ஏஏடிஐபி) கீழ், அமெரிக்கா இந்தப் பணிக்காக நிறைய செலவிட்டது என்றூம் ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும் உளவு துறை ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அமெரிக்காவின் முழு திட்டம் அமெரிக்கா திட்டமிட்டிருந்த மிஷனில், புவியீர்ப்பு எதிர்ப்பு சாதனங்கள், அணு … Read more

தாயைப் பற்றி கூகுளில் இருந்த அதிர்ச்சியான செய்தி – வருந்தும் மகன்

தாய் மற்றும் மகன் பாசம் குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒவ்வொரு தாயும் தன் மகனை மிகவும் நேசிப்பார். பிள்ளைகளும் அப்படியே தாயை நேசிப்பார்கள். இந்த அன்பை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் அன்பை விட சிறந்தது இந்த உலகில் எதுவுமில்லை. ஆனால், அப்படியான தாயைப் பற்றி ஒரு சிறுவனுக்கு கூகுளில் தேசியபோது அதிர்த்தி காத்திருந்தது.  இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த ரீஸ் மேடிக் என்பவருக்கு தான் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது.  ரிக்கி மேடிக் மற்றும் … Read more

உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம்; விலை ஒரு கிலோ ரூ.2.70 லட்சம் மட்டுமே

இந்தியாவில் மல்கோவா, இமாம் பசந்த், கிளி மூக்கு மாம்பழம், பங்கனபள்ளி, துசேரி, அல்போன்சா, போன்ற பல வகையான மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன. ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம் எது, அது எங்கு விளைகிறது என்று உங்களுக்குத் தெரியுமா?  உலகின் மிக விலை உயர்ந்த மாம்பழம், ஊதா மாம்பழம் அல்லது மியாசாகி மாம்பழம் ஆகும். ஜப்பானில் உள்ள மியாசாகி நகரில் பயிரிடப்படும் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழம், சர்வதேச சந்தையில் ஒரு கிலோ சுமார் ரூ.2.70 லட்சம் என்ற … Read more

இலங்கையில் பறை இசை போராட்டம்; ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தல்

தமிழர்களின் பாரம்பரிய பறை இசை கருவியை வாசித்து ஒப்பாரி வைத்து போராட்டங்களை முன்னெடுத்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் பாரம்பரிய பறை இசை வாசித்து இளைஞர், யுவதிகள் போராட்டம்  நடத்துகின்றனர்.  போராட்டம் தீவிரம் அடையும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச ஒழிய வேண்டும். சிறைக்கு செல்ல வேண்டும் என  இளைஞர்கள் பேட்டி அளித்துள்ளனர்.  கொழும்பு செட்டியார் தெரு பிள்ளையார் ஆலய வாளகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி அதிபர் மாளிகை … Read more

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 வயதான மேக்ரோன், இரண்டாவது முறையாக பதவியேற்கும் மூன்றாவது பிரான்ஸ் அதிபர் ஆனார். இருப்பினும்,  2017  ஆம் ஆண்டு லு பென்னை முதன்முதலில் தோற்கடித்த போது கிடைத்த வாக்கு வித்தியாசத்தை … Read more

Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், நிலைமையை சீராக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவுடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் “பயனுள்ளதாக” இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் சிக்கலை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருக்கடி நிலை ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் … Read more