பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இன்று ( 2022, ஏப்ரல் 21ம் தேதி) இந்தியா வந்தடைந்தார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வந்திறங்கிய அவரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல் நாளில் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிடுதல், தொழில்ரீதியா உரவை மேம்படுத்த ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.  அதோடு அவரது பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம்  மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் … Read more

WikiLeaks அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் ஜூலியன் அசாஞ்சே அடுத்து என்ன

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டன் நீதிமன்றம் இறுதி முடிவை தெளிவாக அறிவித்துவிட்டது. லண்டன் நீதிபதி அளித்த தீர்ப்பில், உளவு பார்த்த குற்றச்சாட்டை சுமந்திருக்கும் ஜூலியன் அசாஞ்சே, அந்த விவகாரத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறார்.  விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மோதல்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார். தன்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தடுக்க அசாஞ்சே பல ஆண்டுகளாக முயன்று வருகிறார். இதற்கான அவரது … Read more

ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்த ஜப்பான், ரஷ்யர்களின் சொத்துக்களும் முடக்கம்

உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில்,  ரஷ்யாவின் ‘மிகவும் நெருக்கமான நாடு’ அந்தஸ்தை ஜப்பான் முறையாக ரத்து செய்தது. சிவிலியன்கள் மீது ரஷ்ய இராணுவ  நடத்திய அட்டூழியங்களை வெளியாகியுள்ள நிலையில்,  டோக்கியோ புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் வர்த்தக அந்தஸ்தை அகற்றுவது மாஸ்கோவிற்கு எதிரான ஜப்பானின் சமீபத்திய தடை நடவடிக்கையாகும். புதிய தடைகள் கடந்த மாதம் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் … Read more

இந்திய அரசு கொரோனாவை திறமையாக கையாண்டுள்ளது: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் மற்றும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ள  பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மிகவும் பாராட்டுக்குரியவை என்று அவர் கூறினார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியாவின் ஒத்துழைப்பைப் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பரிமாற்றம் சிறந்த அண்டை நாடுகளின் சிறந்த ராஜீய உறவுகளுக்கு … Read more

Netflix பங்குகள் கடும் சரிவு; 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்

Netflix 200,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், செவ்வாயன்று Netflix பங்குகள் மதிப்பு 20% குறைந்தது. ஒரு தசாப்தத்தில் முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல் முறை. செவ்வாயன்று வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது. நிறுவனம் கூறிய காரணம் மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் அதன் சேவை நிறுத்தப்பட்டதும் ஒரு காரணம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் … Read more

இலங்கையில் வலுக்கும் போராட்டம்: பிரதான சாலைகள், ரயில் தடங்களில் மக்கள் கூட்டம்

இலங்கையில் பல இடங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்துவருகின்றன. பிரதான சாலைகள், ரயில் தடங்கள் ஆகியவற்றை மறித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. டயர்களை தீயிட்டு கொளுத்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.  இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம்,  கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட … Read more

Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரத்தை கையாள்வது தொடர்பாக அரசுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தை உருவாக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்மொழிந்துள்ளார். பிரதமர் அலுவலகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 2022) வெளியிட்ட அறிக்கையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தை அமைச்சரவையில் முன்வைக்க மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. “நிர்வாகம், நீதித்துறை மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய … Read more

காபூல் பள்ளிகளில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி, பலர் காயம்

காபூலில் குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டு சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் இறந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேற்கு காபூலில் இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடந்துள்ளன. முதலில் மும்தாஜ் பள்ளியில் ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இரண்டாவது குண்டுவெடிப்பு பின்னர் அதன் அருகே ரஹீம் ஷாஹித் பள்ளியில் நடந்துள்ளது.  குண்டுவெடிப்புகளில் டஜன் கணக்கான மக்கள் சிக்கினர் ஆதாரங்களின்படி, மேற்கு காபூலில் நடந்த குண்டுவெடிப்புகளில் … Read more

Elon Musk Vs Twitter: டிவிட்டர் Poison pill உத்தியை கடைபிடிப்பது ஏன்

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்  எப்படியாவது டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி விட வேண்டும் என திட்டமிட்டு வருகிறார். ஆனால் இதற்கு ட்விட்டர் இயக்குநர் குழு, ஊழியர்கள் முதலீட்டாளர்கள், நிறுவனம் எலோன் மஸ்க் கைவசம் செக்ல்வதை விரும்பவில்லை.  எலாஸ் மஸ்க் வாங்குவதை தடுக்க, ‘பாய்ஸன் பில்’ என்ற முறையை, நிர்வாகக் குழு கையாண்டுள்ளது. வாரியத்தின் இந்த திட்டத்தால், எலோன் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்துவது கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாய்ஸன் பில் … Read more

உக்ரைனின் லிவிவ் நகரில் ரஷ்யாவின் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் பலி

கிவ்: பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. போர் முடிவுக்கு வராத நிலையில், தொடரும் போரில் திங்களன்று, குறைந்தபட்சம் ஏழு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர், மேற்கு உக்ரேனிய நகரமான எல்விவ், அதிகாலையில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் தாக்கப்பட்ட சிறு குழந்தை உட்பட பலர் உயிரிழந்தனர். நாட்டின் கிழக்குப் பகுதியில் படைகளின் புதிய தாக்குதல் கவலைகளை மேலும் அதிகரிக்கிறது. கிழக்கில் இருந்து தப்பி … Read more