எங்களைக் காப்பாற்றுங்கள்..பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மின்சாரம் இன்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டம் வலுத்து வரும் சூழலில் இலங்கையில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு பதவி விலகினர். இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அழைப்பு … Read more

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை..பெண்கள் சித்ரவதை..ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன் எல்லையில் பல மாதங்களாக படைகளை குவித்திருந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. கடந்த 40 நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் சுமார் 40 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கடந்த … Read more

இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

சீரழிந்த ஒரு நாட்டைக் கை காட்டுவதற்கு உதாரணமாக இலங்கை ஆகிவிட்டது. பொருளாதார நெருக்கடியில் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்ட இலங்கையின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அங்கு வாழும் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒரு தேசத்திற்கு இந்த நிலை எப்போதும் வரக்கூடாது. வெறும் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர் மட்டுமே முழுமையாக இதற்கு காரணம் என சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தத்துவ நிலைப்பாடும், அரசியல் அமைப்புச் சட்டமும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆளுமைகளும், தலைமைகளுமே … Read more

Srilanka Crisis: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலையும் குடும்ப அரசியலும்…

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என்பது தான் நிலைமை. மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், இவ்வளவு வளர்ச்சியடைந்த நாடு இவ்வளவு மோசமான நிலையை அடைந்தது ஏன் என்ற கேள்விக்கான எளிமையான பதில் இலங்கையின் கருவூலம் காலியாகிவிட்டது என்பது தான். இதை அடுத்து கருவூலம் எப்படி காலியானது என்ற இன்னொரு கேள்வி  எழுவதை தவிர்க்க முடியாது. … Read more

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இலங்கையில் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைப் பொருட்படுத்தாது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்களை பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாகவும் போராட்டம் தற்போது … Read more

இலங்கையில் தொடரும் சிக்கல்! மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகிறாரா?

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, நட்பு நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள், மின்வெட்டைப் போலவே அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பொருளாதார நெருக்கடிள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் அதிகரித்துவரும் போராட்டங்களும், அரசின் இயலாமையும் சேர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்யலாம் என்று ஊகங்கள் உலா வந்தன. அது தொடர்பாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே … Read more

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

ஒரு கிராமத்தில் மக்கள் 120 ஆண்டுகள் வாழ்கிறார்கள், அவர்களுக்கு நோய் ஏற்படுவதில்லை என்ற செய்தி ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை தான். அதுவும், பிரச்சனைகள் அதிகம் இருக்கும் பாகிஸ்தானில்தான் அப்படியொரு ஊர் இருக்கிறது. வட பாகிஸ்தானின் ஹன்சா பள்ளத்தாக்கில் வசிக்கும் ஹன்சா சமூகத்தின் மக்கள் மீது பல வகையான ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. பாகிஸ்தான், தற்போது அரசியல் மற்றும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காரணமாக அண்மை நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.  இதுதவிர மற்றொரு சிறப்பு … Read more

‘புயல் நெருங்கிருச்சு ஜாக்கிரத’ – நேரலையில் வீட்டுக்கு போன் செய்த வானிலை ஆய்வாளர்

செய்தியாளர் அரங்கில் இருந்து ரிப்போர்ட்டர்களுக்கு போன் செய்யப்பட்டு, கள நிலவரம் குறித்து கேள்வி கேட்பது வழக்கம். அதற்கு செய்தியாளர் அந்த இடத்தில் இருந்தபடியே பதில் சொல்வார். இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக கிண்டல் செய்து, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ‘சரண்யா’ என்ற பெயருடன் சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. ஊடக உலகில் அலுவல் ரீதியாக அவ்வப்போது சில விநோதமான கலாட்டா துணுக்குச் செய்திகளும் இணையத்தில் வைரலாகும். அதாவது, செய்திவாசிப்பாளர் இடைவேளை நேரத்தில் தூங்கிவிடுவது மாதிரியும், … Read more

வித்தியாசமான தந்திரோபாயங்களுக்கு ரஷ்யா முன்னுரிமை அளிக்கிறது! குற்றம் சாட்டும் உக்ரைன் அதிபர்

உக்ரைனில் நடந்த சண்டைக்கு மத்தியில், “முழு கியேவ் பிராந்தியத்தின்” கட்டுப்பாட்டை உக்ரைன் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கன்னா மாலியர் தெரிவித்தார். “இர்பின், புச்சா, கோஸ்டோமெல் மற்றும் முழு கியேவ் பகுதியும் படையெடுப்பாளரிடமிருந்து விடுவிக்கப்பட்டது” என்று உக்ரைன் கூறுகிறது. ரஷ்ய ஷெல் தாக்குதல்களால் பெரும் அழிவை எதிர்கொண்ட நகரங்கள் விடுவிக்கப்பட்டதாக உக்ரைன் அரசு கூறுகிறது.. இர்பின் நகரில் குறைந்தது 280 பேர் வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக புச்சாவின் மேயர் கூறினார். ரஷ்யப் படைகள் வடக்குப் பகுதிகளிலிருந்து படிப்படியாக … Read more

கிரிக்கெட்டில் இருந்து அரசியல் வரை.. இம்ரான் கானின் ரீ ப்ளே

பாகிஸ்தானின் லாகூரில் 1952-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி பிறந்த இம்ரான் கான் ஆக்ஸ்போர்டில் உள்ள கெபிள் கல்லூரியில் பட்டப்படிப்பை பயின்றார். பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய இம்ரான் கான், தனது 16 வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 1970-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அடுத்த பத்தாண்டுகளில் உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டராக உயர்ந்தார். 1981-ல் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி கடந்த … Read more