‘சோழா சோழா’ – பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.  பொன்னியின் செல்வனின் டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படத்தின் கதாபாத்திர பெயர்கள் … Read more

படப்பிடிப்பில் விபத்து – நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக நடிக்கிறவர் நாசர். இவரது நடிப்பு பல படங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக தேவர்மகன், அவ்வை சண்முகி உள்ளிட்ட ஏராளமான படங்களில் தான் எவ்வளவு பெரிய தேர்ந்த நடிகர் என்பதை நாசர் உணர்த்தியிருப்பார். வில்லன் ரோல் கிடைத்தாலும், குணச்சித்திர வேடம் கிடைத்தாலும் தன் பணியை செம்மையாக செய்பவர் நாசர். கடந்த ஏப்ரல் மாதம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து ‘வாய்தா’ படத்தில் … Read more

இணைந்து பல சாதனைகள் செய்வோம் – ஷங்கருக்கு கமல் வாழ்த்து

தமிழ் சினிமாவின் பிரமாண்டம் என பெயர் எடுத்தவர் ஷங்கர். பிரமாண்டம் மட்டுமின்றி கதை ரீதியாகவும் தனி பாணியை கடைப்பிடித்து ரசிகர்களின் மனதில் இருக்கிறார். இவரின் ஆரம்பகால படங்களான ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், காதலன் உள்ளிட்ட படங்கள் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றவை. அதேபோல் இவர் இயக்கிய பாய்ஸ் படமும் சர்ச்சையையும், வரவேற்பையும் சேர்த்து பெற்றது. விக்ரமை வைத்து அந்நியன் படத்தில் வித்தியாசம் காட்டிய ஷங்கர் ரஜினியுடன் கைகோர்த்த சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட படங்கள் வசூல் வேட்டை … Read more

பில்கிஸ் பானோ வழக்கு: நாட்டு பெண்களுக்கு என்ன செய்தி சொல்கிறீர்கள்? ராகுல் சாடல்

2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாடு முழுவதும் பார்க்கிறது என்றும், நாட்டுப் பெண்களுக்கு என்ன செய்தி கொடுக்கப் போகிறீர்கள் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். கூட்டுப் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து … Read more

இன்னுக்கு மழை வருமா? வராதா? வானிலை அப்டேட் தெரிஞ்சிகோங்க

தமிழ்நாடு வானிலை தகவல்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நாளை (18.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அடுத்த கட்ட நடவடைக்கை என்ன?

ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து பல வித கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  ஒற்றை தலைமை மோதல் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு மோதிக்கொண்டுள்ளன. இதனையடுத்து … Read more

மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா

சியோல்: வட கொரியா புதன்கிழமை இரண்டு க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஆயுத சோதனைகளில் பியோங்யாங் சாதனை படைத்திருந்த நிலையில், சுமார் ஒரு மாத காலம் எந்த சோதனையும் செய்யப்படாமல் இருந்தது. எனினும், அந்த மந்தநிலையை தற்போதைய ஆயுத சோதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. “இன்று அதிகாலையில், தென் பியோங்கன் மாகாணத்தின் ஓஞ்சோனில் இருந்து வட கொரியா இரண்டு கிரூஸ் ஏவுகணைகளை மேற்குக் கடலில் … Read more

கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் -ஓ. பன்னீர் செல்வம்

சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும். அதிமுக கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது இன்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.  ஒன்றரை கோடி தொண்டர்களையும் அரவணைத்துச் செல்வேன்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி … Read more

ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையத்தில் தான் இருப்பார்கள் -உள்துறை அமைச்சகம் விளக்கம்

புது டெல்லி: டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS (பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான குடியிருப்பு) குடியிருப்பில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகள் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அவரது அறிக்கைக்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், ​​​​ரோஹிங்கியாக்கள் தடுப்பு மையங்களில் தங்கியிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியது. சட்டவிரோதமாக குடியேறிய புதிய ரோஹிங்கியாக்கள் EWS குடியிருப்புகளை வழங்குவதற்கு உள்துறை அமைச்சகம் (MHA) எந்தப் பிரதிநிதித்துவமும் செய்யவில்லை என்று HMO … Read more

12 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற சிலைகள் – குற்றவாளிகள் கைது… நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி அம்மாள் கோயில், திண்டுக்கல் மாவட்ட வடமதுரை காவல் நிலைய எல்லையில் மலையின் மேல் அமைந்துள்ளது. இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பழமையான கோயில் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் உள்ளார்ந்த சக்தி இக்கோயிலுக்கு இருப்பதாக கருதப்படுவதால் இக்கோயில் பக்தர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இக்கோயில் கடவுள்கள் மீதுள்ள பக்தியால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு … Read more