12 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற சிலைகள் – குற்றவாளிகள் கைது… நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஆதிநாதப் பெருமாள் ரங்கநாயகி அம்மாள் கோயில், திண்டுக்கல் மாவட்ட வடமதுரை காவல் நிலைய எல்லையில் மலையின் மேல் அமைந்துள்ளது. இந்த கோயில் சங்க காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் ஒரு பழமையான கோயில் மற்றும் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் உள்ளார்ந்த சக்தி இக்கோயிலுக்கு இருப்பதாக கருதப்படுவதால் இக்கோயில் பக்தர்களை வெகுவாக கவர்ந்துவருகிறது. இக்கோயில் கடவுள்கள் மீதுள்ள பக்தியால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு … Read more

அதிமுக விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை : சபாநாயகர் அப்பாவு

சென்னை தலைமை செயலகத்தில் 16-ஆவது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை அவை குறிப்புகளை இனி நேரடியாக மக்கள் இணையதளத்தில் படிக்கும் வசதியினையும், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர்  மு.கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெளியீடு ஆகியவற்றையும், பொது மக்களின் பார்வைக்கு சட்டமன்றப் பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வையும் சபாநாயகர் அப்பாவு தொடங்கிவைத்தார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அதிமுக விவகாரம் உட்கட்சி பிரச்சனை எனவும், அவர்கள், தேர்தல் ஆணையம், … Read more

பாஜக – திமுக உறவு குறித்து முதல்வர் ஆணித்தரமாக பேசியுள்ளார்: கே.பாலகிருஷ்ணன்

சென்னை தி நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் மற்றும் மனிதம் என்கின்ற மனித உரிமை அமைப்பும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தமிழகத்தில் நடைபெற உள்ள  பாஜக அரசிற்கான எதிரான போராட்டத்தை குறித்தும் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் சந்தேகம் தொடர்பான ஆய்வு அறிக்கையை மனிதம் குழு சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட உள்ள அதை குறித்தும் கே. பாலகிருஷ்ணன் கூறினார். கே.பாலகிருஷ்ணன் … Read more

இனி அனைவருக்கும் நாப்கின் இலவசம் : உலகில் முதன்முதலாக சட்டம் இயற்றிய நாடு

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம், The Period Products (Free Provision) என்ற சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கடந்த திங்கட்கிழமையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், மாதவிடாய் காலத்தில் தேவையான பொருட்களை வழங்குவது அரசு அதிகாரிகள், கல்வி நிறுவனங்களின் சட்டப்பூர்வ கடமையாகி உள்ளது. பள்ளி, கல்லூரிகள், மற்றும் பொது இடங்களில் உள்ள கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் அணுகும் … Read more

பட்டாசு வெடித்து கொண்டாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்; மவுனம் காக்கும் ஈபிஸ் தரப்பு

சென்னை: அதிமுக பொது குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்த நிலையில் அதனை எதிர்த்து பன்னீர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடரவும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பதவி ரத்து செய்யப்படுவதாகவும் அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதனை வரவேற்று ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி … Read more

கடந்த ஒரு வருடத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது -அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, தமிழகத்தில் ஓராண்டில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பார் டெண்டரில் 1778 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றுள்ளனர். டெண்டர் அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது. அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் புகார்கள் இல்லை. டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான … Read more

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கொண்டாடும் ஓபிஎஸ்…யோசனையில் ஈபிஎஸ்!!

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு பெரும் சறுக்கலாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.  அதிமுக-வில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என தெரிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.  எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலராக தேர்வு செய்தது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர, தனி கூட்டம் எதுவும் கூட்டம் கூட்டக் கூடாது என்றும் … Read more

மனைவியின் நினைவு நாளில் தற்கொலை செய்த கணவர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் அருகே உள்ள வாடமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு வயது 55.  இவர் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். முதல் மனைவி முனியம்மாளுக்கு ஒரு ஆண் (விஜய்) குழந்தையும் இரண்டாவது மனைவி இந்திராகாந்திக்கு ஒரு ஆண் குழந்தை (சுந்தரேசன்) ஒரு பெண் குழந்தை (இனிதா ) உள்ளனர். இதில் முதல் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து இரண்டாவது … Read more

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய முழு விவரம்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இதனைத் தொடரந்து காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு … Read more

நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்ற பெண் சாமியார் பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். பட்டுப்புடவை, நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க, இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அதன்பின்னர் தான் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்தது.  … Read more