அந்த மனசுதான் கடவுள்! பிச்சை எடுத்த 50 லட்சத்தை அரசுக்கு வழங்கிய நபர்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தாலுகா ஆழங்கிணறைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 மகள், 1 மகன் உள்ளனர். பம்பாயில் தேய்ப்புக்கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்தார்.  அதன்பின் 2010ம் ஆண்டில் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்து உள்ளனர்.   இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிச்சை எடுத்து முதலமைச்சரின் … Read more

தமிழர் அல்லாதோர் மாவட்ட ஆட்சியர்களாக இருக்கிறார்கள் – வேல்முருகன் காட்டம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும்,பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான  வேல்முருகன் கலந்துகொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு … Read more

பெலோசியின் தைவான் பயணம் போரை தூண்டுவதற்கு தான்: அமெரிக்காவை சாடும் புடின்

பெலோசியின் தைவான் பயணம்  பதற்றத்தை தூண்ட “கவனமாக திட்டமிடப்பட்ட ” என்று  சாடிய புடின், இது “மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடும் வகையிலான செயல் என்றும், சர்வதேச பொறுப்புணர்ச்சி இல்லாத்ச செயல் என்றும் ப்புடின் சாடினார். அமெரிக்கா, உக்ரைனில் போர்  நீடிக்க வேண்டும் என முயல்வதாகவும், உலகில் போரை தூண்டும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது எனவும் புடின் குற்றம் சாட்டியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை புடின் குறிப்பாக சுட்டிக்காட்டினார். … Read more

சோலாப்பூரியில் நெளிந்த புழுக்கள்; வசந்த பவன் கொடுத்த அதிர்ச்சி!

சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி என்பவர் நேற்றிரவு தன் மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் VR மாலில் நேற்று இரவு உணவு உண்ண மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்று  தன்னுடைய மகனுக்கு  ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக  துர்நாற்றத்துடனும் 5 க்கும் மேற்பட்ட  புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஹோட்டலின் நிர்வாகத்தை … Read more

‘நாங்கள் பந்திக்கு முந்த மாட்டோம், தேவை இல்லாத பேச்சு வேண்டாம்’: ஜெயக்குமார் பளிச் பேட்டி

அதிமுக சார்பில் ஓ. பன்னீர்செல்வத்தை துணை எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியில் இருந்து  நீக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை துணை சபாநாயகர் சட்டப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். சபாநாயகர் கட்டப்பஞ்சாயத்து ராஜாவாக செயல்பட கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அண்ணா தொழிற்சங்க உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என திமுக கொடுத்த … Read more

இந்தியாவில் பஞ்சம் ஏற்படும்… பாபா வாங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதான் … Read more

நான் கிறிஸ்தவர் என்பதால் தேசிய கொடி ஏற்றமாட்டேன் – தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை

தருமபுரி  மாவட்டம் இண்டூர் அடுத்த பேடரஅள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 282 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி உள்ளிட்ட  13 ஆசிரியர்கள் பணிசெய்து வருகின்றனர். தலைமை ஆசிரியை தமிழ்செல்வி இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிசெய்கிறார். அவர் இந்தாண்டு ஓய்வு பெற  உள்ளார். இந்நிலையில் நேற்று 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி அப்பள்ளியில் கொடியேற்ற ஏற்பாடு நடந்தது. விழாவில்  பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை … Read more

பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் விழுந்த பஸ்… ஏழு ITBP வீரர்கள் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சந்தன்வாரி அருகே, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஃபிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP ராணுவ வீரர்கள் பணியில் இருந்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் இரண்டு … Read more

பாஜகவுடன் நட்பா நட்பில்லையா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் -நயினார் நாகேந்திரன்

நெல்லை சந்திப்பு முத்தாரம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும் பாஜக சட்டமன்ற கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,  அதிமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் பாஜக உறுதியாக உள்ளது. அது ஓபிஎஸ் ஆக இருந்தாலும் சரி.. ஈபி.எஸ் ஆக … Read more

இரண்டு மணி நேரத்தில் பெண்ணாக மாறிய ஆண் – பல்லாவரத்தில் ஆச்சரியம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் உலக சாதனைக்கான ஒப்பனை மராத்தான் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினமான நேற்று (ஆகஸ்ட் 15)நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரைசிங் ஸ்டார்ஸ் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 90 ஒப்பனைக் கலைஞர்கள்  பல்வேறுவிதமான ஒப்பனை கலைகளுடன் spectacular ramp walk  மூலம் அசத்தினர்.   ஒப்பனை கலைஞர்கள் தங்கள் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்தை 2 மணி நேரத்தில் … Read more