Sexual Abuse settlement: இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசத்தை எட்டியது

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுத்திருந்த வர்ஜீனியா கியூஃப்ரே சமரசம் செய்து கொண்டார். இதுதொடரபாக கியூஃப்ரேவின் வழக்கறிஞர் டேவிட் பாய்ஸ், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள், கொள்கையளவில் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். சட்ட நடைமுறைகளை முறைப்படி மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக  டேவிட் பாய்ஸ் (Attorney David Boies) நீதிமன்றத்தில் தெரிவித்தார். சமரச ஒப்பந்தத்தின் … Read more

தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ; போராட்டத்தை ஒடுக்க அவசர நிலை அதிகாரம் அமல்!

கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில், தீவிரமடையும்  டிரக்கர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அவசரகால அதிகாரங்களை ஜஸ்டின் ட்ரூடோ கோருகிறார். தேசிய நெருக்கடியாக மாறியுள்ள டிரக்கர்கள் தலைமையிலான போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர,  தனது தந்தையும் முன்னாள் பிரதமரும் ஆன பியர் ட்ரூடோ  வழியை பின்பற்றி, கூடுதல் அதிகாரங்களை வழங்க, அவசரகாலச் சட்டத்தை ட்ரூடோ செயல்படுத்துகிறார். அவசர அதிகாரத்தை அமல்படுத்துகையில், இராணுவம் நிறுத்தப்படாது என்றாலும் முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்களை அகற்றும் பொருட்டு எதிர்ப்பாளர்களை கைது செய்வதற்கும் அவர்களின் டிரக்குகளை கைப்பற்றுவதற்கும், அத்துடன் … Read more

இனி ‘துருக்கி’ அல்ல ‘துருக்கியே’ : துருக்கி அதிபர் எர்டோகன்

இஸ்லாமிய மதத்தின் பாதுகாவலர் என்று தன்னை வர்ணிக்கும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தனது நாட்டின் பெயரை மாற்றியுள்ளார். இனி துருக்கி (Turkey) இல்லை, அதை துர்க்கியே (Turkiye) என்று அழைக்கப்படும் என துருக்கி அதிபர் அறிவித்தார். அதாவது, இப்போது துருக்கிக்கு பதிலாக துருக்கியே என்ற பெயர் தான் அனைத்து வகையான வணிகம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திர வேலைகளுக்கு பயன்படுத்தப்படும். அதிபரின் அறிவிப்பு துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். … Read more

Russia – Ukraine: உக்ரைனில் போர் மேகங்கள்; உச்சகட்ட பதற்றம்; விமானங்களும் ரத்து!

மாஸ்கோ: உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் பேச்சு வார்த்தையில் எந்த வித பயனும் ஏற்படாத நிலையில்,  உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில்,  இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு கிளம்ப சொல்லி மீட்டுகொண்டிருப்பதால் உக்ரைன் யுத்தம் தவிர்க்கபட முடியாதது போன்ற  தோற்றம் நிலவுகின்றது. இங்கிலாந்து உள்ளிட்ட … Read more

கனடா போராட்டத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை; பலரை கைது செய்ய உத்தரவு

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில்  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. டிரக் ஓட்டுநர்கள் முக்கிய சாலைகளை அடைத்துக் கொண்டு போராடுவதால்,  பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமெரிக்க கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.  கனடா தலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாடினார். போராட்டம் உடனடியாக கைவிடப்பட வேண்டும் … Read more

Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!

இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர். அதிலும் சிறுவர்கள் சிலரும் அடிமையாகி, அது கிடைக்காமல் போனால், கொலை, கொள்ளை என இறங்கி விடும் சம்பவங்கள் அதிர்ச்சிகளை கொடுப்பதாக உள்ளன. ஸ்பெயினில் இது போன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ஒருவர் Wi-Fi இணைப்பை துண்டித்ததால், ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன் … Read more

முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!

இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அதிர்ஷ்டம் என்பது கூரை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. கணவர் பல வருடங்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். ஆனால் தற்போது வரை லாட்டரியில் இருந்து ஒரு ரூபாய் கூட வெல்ல முடியவில்லை. ஆனால்,  மனைவி முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கி முதல் முறையாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களாவை வென்றார். பென் என்ற நபர் பல ஆண்டுகளாக ஓமேஸின் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்தது. இருந்தாலும் இந்த முறை … Read more

Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி நடுத்தர வயது நபர் ஒருவரை பொது மக்கள் கல்லெறிந்து கொன்றனர். மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜங்கிள் தேரா கிராமத்தில் ஒரு நபர் குர்ஆனின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்ததாக செய்திகள் வந்ததையடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர். குரானின் பக்கங்களை எரித்ததாக கூறி, நடுத்தர வயது நபரை சுற்று வளைத்து, கல் எறிந்து படு கொலை செய்ததோடு, அவரின் சடலத்தை … Read more

உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை; ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  இந்நிலையில், உக்ரைனில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளார். படையெடுப்பு நடந்தால், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும் … Read more

பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!

தில்லியை உலுக்கிய தந்தூரி கொலை வழக்கு பலருக்கு நினைவில் இருக்கலாம் . தில்லியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மா, தனது மனைவி நைனா சாஹ்னியைக் கொன்றுவிட்டு, உணவகத்தின் தந்தூரி அடுப்பில் அவரது உடலை எரித்து விட்டார். இந்த வழக்கில் சர்மாவுக்கு 2003 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  அதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, முதல் மனைவியை இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த, மனைவியை … Read more