Spain vs Women Rights: ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பை அறிமுகப்படுத்தும் ஸ்பெயின்

வலிமிகுந்த மாதவிடாய் மற்றும் கருக்கலைப்புக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பைக் கொண்டுவர ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது. இதற்கான அந்நாட்டின் முயற்சிகள் சட்டமாக மாறவிருக்கிறது. மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன் மூலம் மாதவிடாய்க்காக பெண் ஊழியர்களுக்கு  விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். கருக்கலைப்பு உரிமைகளை வலுப்படுத்தும் சிறுபான்மை இடதுசாரி அரசாங்கத்தின் வரைவு மசோதா சட்டமானால், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு என்ற சாதனையை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் கைது!

இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேரை காவல் துறை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி  பகுதியில் பணியில் இருந்த காவல் துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் வடக்கு கிழக்கின் பல்வேறு … Read more

போரை நிறுத்துங்கள்; உங்களுடன் ஓர் இரவை கழிக்கிறேன்: புடினிடம் கூறிய ஆபாச நடிகை

ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த உலகளாவிய சக்திகள் பலவேறு வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், முன்னாள் ஆபாச நட்சத்திரம்  ஒருவர் புடினுக்கு புதுமையான ஒரு ஆபரை வழங்கியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்பட வேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து பல வகையில் முறையீடுகள் வைக்கப்படுகின்றன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை நிறுத்தினால்,  அவருடன் ஒர் இரவைக் கழிக்க தான் தயார் என முன்னாள் ஆபாச நட்சத்திரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கு … Read more

US vs Chinia: தைவான் விஷயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா அமெரிக்கா

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன், சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி யாங் ஆகியோர் வட கொரியா மற்றும் தைவானுடன் பேசினர். பிராந்தியத்தில், தனதுநட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா இராணுவ நிலைப்பாட்டில் குறுகிய மற்றும் நீண்ட கால மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்தார்.  அமெரிக்கா தரப்பில் சல்லிவனும், சீனாவின் தரப்பில் சீனாவின் உயர்மட்ட அதிகாரி யாஙாகிய இருவரும்  உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மற்றும் “அமெரிக்க-சீனா உறவுகளில் குறிப்பிட்ட … Read more

வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்: தொடரும் கொரோனா பீதி

வட கொரியாவில் கொரோனா வைரஸ்: உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், வட கொரியாவில் மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், புதன்கிழமை, வட கொரியாவில் 2,32,880 பேருக்கு புதியதாக காய்ச்சல் இருப்பது பதிவாகியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிம் ஜாங்-உன் அதிகாரிகளை குறிவைத்தார்வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன், கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் அதிகரித்து வரும் பரவலைக் கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் … Read more

டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல்

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டி நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. காடுகளிலும் காட்டுத் தீ பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த பதிவில் “நான் … Read more

சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. கேன்ஸ் திரைப்பட விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 84 நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு சினிமா உலகத்தினரின் ஆதரவு வேண்டுமென விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.  யதார்த்த வாழ்விற்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், கடந்த … Read more

எலான் மஸ்க் "மனநலம் குன்றியவர்"….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலி கணக்குகள் குறித்த விவரங்களைத் தரும் வரை … Read more

காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காதலியின் கழுத்தை நெரித்து கொலை இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து … Read more

சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கப்பட்டது: அறிக்கை

கடந்த மார்ச் மாதம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்து விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  கடந்த மார்ச் மாதம்  133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 133 அனைவரும் உயிரிழந்தனர்.  விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டி என்னும் வமலைப் … Read more