இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?

இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.  இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் இலங்கை போர்க்களமாக மாறியது.  மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் தீக்கரையாகின. மேலும், மஹிந்த … Read more

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள் BA 4 மற்றும் BA 5

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக … Read more

சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க ஜான்சன் உத்தரவு

அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது … Read more

உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன. சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க … Read more

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 … Read more

Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை  பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால்  பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல … Read more

பால்வெளியின் கருந்துளை: வெளியானது முதல் புகைப்படம்!

நமது அண்டவெளியில் பல்வேறு ஆச்சர்யமான விஷயங்கள் நிரம்பியுள்ளது.  தற்போது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  இந்த தெளிவற்ற வண்ணமயமான புகைப்படத்தை எட்டு சின்க்ரனைஸ்ட் செய்யப்பட்ட ரேடியோ தொலைநோக்கிகளின் தொகுப்பான ஈவண்ட் ஹாரிஸான் தொலைநோக்கியின் வெளியிடப்பட்டது.   BIG BREAKING: First ever image of the black hole at the centre of our (Milky Way) galaxy! It’s called Sagittarius … Read more

இலங்கையின் புதிய பிரதமராகிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை பதவியேற்கிறார். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் விக்ரமசிங்கவின் நியமனம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இப்போது பெரும்பான்மை வலு பெற ஒரு இடம் குறைவாக இருக்கும் நிலையில், எவ்வாறு பெரும்பான்மையை பெற முடியும் … Read more

பிரதமராக பதவியேற்கத் தயார்: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா

கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் போராட்டம் வலுப்பெற்று, போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த அடக்குமுறையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், அதன் பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்‌ஷேயின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் பதவியில் விலகிய ராஜபக்‌ஷே  தனது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் … Read more