வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா…நாடு முழுவதும் ஊரடங்கு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனைத் தொடர்ந்து தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தங்களது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறி வந்தது.  உலக சுகாதார அமைப்பு, சீனா மற்றும் ரஷ்யாவினால் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்தது. அந்நாட்டிலுள்ள சுமார் இரண்டரை கோடி மக்களும் தடுப்பூசி போடவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனாவை எதிர்கொண்டதற்காக நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ … Read more

பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை

பசிபிக் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலவித வரலாற்று ரீதியிலான கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர், தற்போதைய உலகில் இல்லாத, தொலைந்து போன நகரமான பண்டைய அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக இது இருக்கலாம் என்று நம்பும்படி இது அமைந்துள்ளது. ஆழ்கடல் பயணத்தின் நேரடி காட்சிகள், கடந்த மாதம் ஆன்லைனில் எக்ஸ்ப்ளோரேஷன் வெசல் நாட்டிலஸ் குழுவினரால் வெளியிடப்பட்டது, விசித்திரமான தோற்றமுடைய இந்த பாதை … Read more

ஜாக் டோர்சி மீண்டும் ட்விட்டரை கைப்பற்றுவாரா… மவுனம் கலைத்த முன்னாள் CEO

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.  டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கிய பிறகு, ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி,  ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து மீண்டும் நிறுவனத்தை நடத்த உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு பதிலளித்த … Read more

ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்த விமானம்!..40 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலிருந்து திபெத்தின் நிங்சி நகருக்கு செல்லவிருந்த திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்படத் தயாராக இருந்தபோது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விமானத்தின் இறக்கைகளில் திடீரென தீப்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்தனர். விமானத்தில் 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திபெத் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40 பேர் லேசாக  காயமடைந்ததாகவும் அவர்கள் … Read more

அதிபரின் அதிகாரம் பறிப்பு… ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – சரிவில் இருந்து மீளுமா இலங்கை?

பற்றி எரியும் இலங்கை: இலங்கையில் தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் வீரியமைடைந்து வருகிறது. நிலைமை கையை மீறி சென்றதால் கடந்த 9-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே விலகினார். இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த அது அவர்கள் மீதே பூமராங்காக திரும்பியது. நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென ஒன்றுகூடி ஆளும் கட்சியினர் மீது … Read more

உக்ரைன் ரஷ்ய சண்டையால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பால் எண்ணற்ற பிரச்சனைகளும், உயிரிழப்பும் தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு முக்கியமான செய்தி வெளியாகி கவலைகளை அதிகரித்துள்ளது.  ரஷ்யா போர் தொடங்கிய பின்னர், இதுவரை 50 லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்ப்பு ILO (International Labour Organization) கூறுகிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் தூண்டப்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், நாட்டிலும் அண்டை நாடுகளிலும் தொழிலாளர் சந்தைகள் சீர்குலைந்து வருவது கவலையளிக்கிறது.  ரஷ்ய இராணுவம் இந்த போரை மேலும் தொடர்ந்தால் … Read more

தொற்றுநோய்களின் சுனாமி கொரோனாவால் இன்னமும் 1 6 மில்லியன் மக்கள் மரணிக்கலாம்: ஆய்வு

‘ஜீரோ-கோவிட்’ கொள்கையை நீக்குவது என்பது கொரோனா வைரஸை கட்டவிழ்த்து விடுவதற்கு ஒப்பானது என்று சீன ஆய்வு கூறுகிறது. சீனாவில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது. சீன அரசு விதித்துள்ளபூஜ்ஜிய-கோவிட் கொள்கை மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், இது தொடர்பான ஒரு புதிய ஆய்வு வெளியாகி அச்சங்களை அதிகரித்துள்ளது. கொரோனாவின் பரவலால் தொழிற்சாலைகளை மூடிய ஜீரோ கோவிட் என்ற கடுமையான கொள்கையை நீக்குவது “தொற்றுநோய்களின் சுனாமி” என்பது போல் பேரலையை எழுப்பும் என்றும், கிட்டத்தட்ட 1.6 மில்லியன் மக்களின் மரணத்திற்கு … Read more

விமான பயணத்தில் மாஸ்க் கட்டாயமில்லை; கொரோனா விதிகளை தளர்த்தியது EU

கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும் விமானங்களிலும் மாஸ்க் அணிவது  இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்துடன் இணைந்து எடுத்த … Read more

பெண்களுக்கான கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு: கருவை கலைத்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைதண்டனை

சான் சால்வடார்: கருக்கலைப்பு செய்துக் கொண்ட பெண்ணுக்கு எல் சால்வடார் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.  மகப்பேறு அவசரநிலை காரணமாக அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ததாக அந்தப் பெண்ணைப் பாதுகாக்க உதவிய ஒரு அரசு சாரா அமைப்பான சிட்டிசன் குரூப் ஃபார் தி கிரிமினலைசேஷன் ஆஃப் அபார்ஷன் (Citizen Group for the Decriminalization of Abortion), செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (2022, மே 9) … Read more

மகிந்த ராஜபக்ச இங்குதான் உள்ளார், நலமாக உள்ளார்: இலங்கை பாதுகாப்பு செயலாளர்

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் புதன்கிழமை தெரிவித்ததாக, செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.  ராஜபக்ச மர்மமான முறையில் பாதுகாப்பு வீரர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர் எங்கே உள்ளார் என்பது குறித்து பல வித வதந்திகள் பரவத் தொடங்கின.  பாதுகாப்புச் செயலரின் கூற்று இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  முன்னதாக, அவரைத் தேடி அவரது டெம்பிள் ட்ரீஸ் அலுவலகம் மற்றும் வதிவிடத்தில் வன்முறைக் கூட்டம் குவிந்தது. … Read more