Sri Lanka Crisis: ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் இலங்கையின் பிரதான எதிர்க்கட்சி. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.  நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளி விட்டதன் மூலம் அரசியலமைப்பு கடமையில் அவர்கள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குழுவொன்று பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எனக் … Read more

இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில், அவ்வவ்போது பல அவரது அறிக்கைகள் மற்றும் ட்வீட்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு சமூக ஊடக தளம் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். எலோன் மஸ்க் பதிவு செய்துள்ள ட்வீட்  டெஸ்லா … Read more

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விரும்பும் போப் பிரான்சிஸ்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதங்களைத் தாண்டி தொடர்கிறது. இதனால் இரு தரப்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.  இந்த போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வரும் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.  போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி போப் … Read more

பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை…தாலிபன்களின் புதிய கட்டுப்பாடு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முன்னதாக 1996-ம் ஆண்டில் இருந்து 2001 வரை தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த காலத்தில் பெண்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன.  கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கக் கூடாது, ஆண் … Read more

அரசின் BMW X5 காரை எடுத்து சென்றதாக குற்றசாட்டு; புதிய சிக்கலில் இம்ரான் கான்

பாகிஸ்தானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் மரியம் ஔரங்கசீப் ஒரு பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார். பிரதமர் பதவியை விட்டு செல்லும் போது, இம்ரான் கான் BMW X5  காரை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார். BMW  அரசின் அதிகாரபூர்வ வாகனம் என்பதோடு, வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான பிரதமர் அலுவலகத்தின் வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரத்தில் இருக்கும் பிரதமர்  மட்டுமே இந்த வாகனங்களைப் பயன்படுத்த முடியும் என்று ஔரங்கசீப் கூறியதாக டான் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்த காரை … Read more

புதிய ட்விட்டர் CEO நியமிக்க எலோன் மஸ்க் திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் ஊழியர்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும்  வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.  ட்விட்டரின் நிர்வாகத்தின் மீது மஸ்க்  தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், எலோன் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாக … Read more

Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை

இலங்கை பொருளாதார நெருக்கடி: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. எரிபொருள் வாங்க இலங்கைக்கு இந்தியா 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே 200 மில்லியன் டாலர் கூடுதல் கடன் வழங்கியுள்ளது என்று இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜயசேகர் தெரிவித்தார். இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு உதவிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ‘இந்த கடன் வசதி மே மாதம் நான்கு சரக்கு எரிபொருளுக்கு … Read more

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை துவம்சம் செய்த சூறாவளி; மனம் பதற வைக்கும் காட்சிகள்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை நேற்று முன்தினம் பயங்கர சூறாவளி தாக்கியது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி வீடுகள், கட்டிடங்கள் பெரும் சேதமடைந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் வெகு தூரம் தூக்கி வீசப்பட்டன. மரங்களை வேறோடு சாய்ந்ததோடு, வாகனங்கள், மின் கம்பங்கள் ஆகியவை தூக்கி வீசப்பட்டன. சூறாவளி காற்றில் சிக்கி மின் கம்பங்கள் சாய்ந்ததால், அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.  ட்விட்டர் பயனரான ரீட் டிம்மர், அமெரிக்காவின் கன்சாஸ் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி… ஜெர்மனியை மிரட்டும் ரஷ்யா

ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு மாத காலங்களுக்கு மேலாக தொடர்கிறது. இதற்கிடையில், உக்ரைனுக்கு உதவ வேண்டாம் என்றும்,  மீறினா; போரில் நடுநிலைமை வகிக்கும் நாடு என்ற நிலைமையை ஜெர்மனி இழக்க நேரிடும் என்று ரஷ்யா ஜெர்மனிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஜெர்மனி வெளியிட்டுள்ள மறுப்பு ரஷ்யா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜெர்மனியின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் ஹெபஸ்ட்ரீட், கடந்த 6 வாரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை ஜெர்மனி முடுக்கிவிட்டதாகக் கூறினார். ஆனால் ஜெர்மனியில் கட்டப்பட்ட அமெரிக்க தளத்தில் … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸை உலகுக்கு பரிசாக வழங்கிய சீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த சில விசித்திரமான முறைகளை சீனா பயன்படுத்துகின்றனர், இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சீனாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் அறிவித்து, பாலிதீனில் அடைத்து பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பிணவறைக்கு அழைத்துச் … Read more