எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்
டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வங்கிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ட்விட்டரின் வருமானத்தை அதிகரிக்க, ஆட் குறைப்பு செய்வது பற்றி ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், எலான் மஸ்க், வங்கியாளர்களுடனான உரையாடலில், மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டரில், ” ஆட்குறைப்பு” பற்றி விவாதித்ததாகக் கூறப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தில் ஆட் குறைப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. … Read more