பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் அவரது தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 44 வயதான மேக்ரோன், இரண்டாவது முறையாக பதவியேற்கும் மூன்றாவது பிரான்ஸ் அதிபர் ஆனார். இருப்பினும்,  2017  ஆம் ஆண்டு லு பென்னை முதன்முதலில் தோற்கடித்த போது கிடைத்த வாக்கு வித்தியாசத்தை … Read more

Sri Lanka Crisis: இலங்கைக்கு 50 கோடி டாலர் கூடுதல் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், நிலைமையை சீராக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவுடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் “பயனுள்ளதாக” இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1948ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் சிக்கலை சந்தித்து வருகிறது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் நெருக்கடி நிலை ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளின் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் … Read more

Corona 4th Wave: இரும்பு கோட்டையாகும் ஷாங்காய் நகரம்; கடுமையான லாக்டவுன் அமல்

சீனாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், அங்கு நான்காவது அலை குறித்த அச்சம் காரணமாக, அந்நாட்டு அரசு கடுமையான கட்டுபாடுகளையும், மிக கடுமையான லாக்டவுன் விதிகளையும் அமல்படுத்தியுள்ளது.  நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அல்லது கண்ணி வேலிகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளால், தன்னார்வலர்களும், கீழ்மட்ட அரசு ஊழியர்களும் உலோகம் மற்றும் … Read more

உக்ரைன் மீதான அணுகுமுறையை ஆசிய நாடுகள் மாற்றிக்கொள்ளும்: ஜெலென்ஸ்கி நம்பிக்கை

கிவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐரோப்பா செய்தது போல் ஆசிய நாடுகளும் உக்ரைன் மீதான தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் என அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாத நேட்டோவின் முடிவு பெரும் தவறு என்றும், கூட்டணியின் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகள்  உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான உக்ரைனின் வலிமையான பதில் தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய … Read more

இது செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்

சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.  சூரிய உதயம் என்பது ஆச்சரியமான நிகழ்வ்ல்ல, இது தினசரி வாடிக்கை என்றாலும், சூரிய உதயம் என்பது புத்துணர்ச்சி கொடுப்பது. சூரிய உதயத்தின் அழகைக் காண கண்கோடி வேண்டும். அதற்கு நமக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.  ஆனால் பூமியில் இது சரி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் எப்படி இருக்கும்? செவ்வாய் … Read more

கூகுள் டூடுல் கெளரவிக்கும் ஈராக் பெண் கலைஞர் நஜிஹா சலீம் பின்னணி

ஈராக்கின் மிகவும் பிரபலமான பெண் கலைஞரான நஜிஹா சலிமை டூடுல் மூலம் கூகுள் இன்று நினைவு கூர்ந்துள்ளது. நாஜியா சலீம் பற்றி தெரியுமா? அவருடைய வாழ்க்கையின் முழு கதையையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.. நாஜியா சலீம் (Naziha Salim) ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேராசிரியராக இருந்தார். ஈராக்கியப் பெண்களின் வாழ்க்கையைத் தன் கைகளால் பல அழகான படங்கள் மூலம் மிகச் சிறப்பாகச் சித்தரித்தவர் நஜீமா. உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான தேடுபொறியான கூகுள் இன்று டூடுல் மூலம் இரண்டு படங்களைப் … Read more

சவாலே சமாளி என டிவிட்டர் கோதாவில் இறங்கும் எலோன் மஸ்க் மற்றும் பில் கேட்ஸ்

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெயர் பெற்றவர். அண்மையில் ட்விட்டரை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ல எலோன் மஸ்கின் பணம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. இப்படி அவர் தனது தொழிலில் கெட்டியாக இருந்தாலும் போட்டி போடுவதிலும் பின்வாங்கவில்லை. அண்மையில் பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் எலன் மஸ்க். இருவருக்கும் இடையில் நடைபெற்ற சாட்டிங், ட்விட்டரில் வைரலாகிறது. இந்த சாட்டிங்கை ஹோல் மார்ஸ் கேடலாக் என்பவர் … Read more

மைக் டைசனிடம் குத்து வாங்கிய நபர்..செல்ஃபியால் நேர்ந்த சோகம்

பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் விளையாட்டில் எந்த அளவுக்கு பெயர் பெற்றவரோ அதே போல சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர். அடிதடி, போதைப்பொருள், பொது இடங்களில் வன்முறை என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மைக் டைசன், தற்போது விமானத்தில் தன்னுடன் பயணித்த சக பயணியை சரமாரியாகத் தாக்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஃப்ளோரிடா பயணித்த விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்த மைக் டைசனுக்குப் பின்னாள் அமர்ந்திருந்த ரசிகர் அவரிடம் தொடர்ந்து பேச … Read more

விரைவில் வருகிறது ரோபோடாக்சி: அறிவிப்பை வெளியிட்டார் Elon Musk

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்டீயரிங் வீல் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோடாக்ஸியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மின்சார-வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மார்ச் காலாண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தைப் பதிவு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு வருவாய் $18.8 பில்லியனாக இருந்தது. இது $17.9 பில்லியன் மதிப்பீட்டை முறியடித்தது. ஆண்டுக்கு ஆண்டு தொகையில் 81 … Read more

புவி நாள் – காலநிலை மாற்றத்தை உணர்த்தும் கூகுள் டூடுல்

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை வெப்பமயமாக்கியுள்ளன. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுள்ளன. புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும் அவை காலத்தில் காற்றோடு கலந்து விடுகின்றன. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும்தான் தொடர்கின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று 52ஆவது புவி நாள் கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் டூடுள் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் … Read more