திவால் நிலையை அறிவித்த அரசு: இலங்கை வாங்கியுள்ள கடன் விவரம் என்ன?
Sri Lanka Economic Crisis: அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. ஒரு வருடத்திற்குள் இலங்கை மீதான மொத்தக் கடன் 1600 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sri Lanka Economic Crisis: அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. ஒரு வருடத்திற்குள் இலங்கை மீதான மொத்தக் கடன் 1600 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 51-வது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உதவி வரும் நிலையில், மரியுபோல் நகரில் உக்ரைனின் 36-வது படைப்பிரிவை சேர்ந்த 1,062 வீரர்கள் தங்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், மரியுபோலில் தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு நேற்று முன் தினம் அமெரிக்கா உக்ரைனுக்கு 800 மில்லியன் … Read more
எலோன் மஸ்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது கருத்துக்கணிப்பு ஒன்றன் மூலம் தற்போது விவாதத்தில் உள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ட்விட்டர் பங்குகளை வாங்குவது குறித்து அவர் கருத்து கேட்டுள்ளார். ட்விட்டரின் 100% பங்குகளை வாங்குவதற்கான சிறந்த மற்றும் இறுதி ஆஃபர் என்ன என்று பங்குதாரர்களிடம் மஸ்க் கேட்டுள்ளார். மஸ்க் ட்விட்டரின் ஒரு பங்கின் விலையை ஒரு பங்குக்கு $54.20 என நிர்ணயித்துள்ளார். கார்ப்பரேட் ரைடர்-பாணி உத்தி கார்ப்பரேட் ரைடர் பாணியில் … Read more
டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதனைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவன இயக்குநர்கள் குழுவில் அவர் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் குழுவில் இணையப் போவதில்லை என எலன் மஸ்க் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இறுவனத் தலைவர் பிரெட் டெய்லருக்கு கடிதம் எழுதிய எலன் மஸ்க், அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக உள்ளதாக கூறினார். இந்திய ரூபாயில் இதன் … Read more
கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை வாசி உயர்வு மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைவாழ் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக் கடிக்கு … Read more
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது வித்தியாசமானதாகவும், சர்வதேச அளவில் பேசுபொருளாகவும் மாறுகிறது. அது அணு ஆயுத சோதனை செய்யும் தைரியமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் துணிச்சலாக இருந்தாலும் அவர் செய்திகளில் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது கிம் ஜாங் உன் அனைவரின் கவனத்தை பெற்றிருப்பது பரிசளித்த விஷயம் தொடர்பான விஷயம். 79 வயதான பிரபல வட கொரிய செய்தி தொகுப்பாளருக்கு, நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் … Read more
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்ப மண்டலப் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் 159 பகுதிகளில் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 13ம் தேதி) வெப்பமண்டலப் புயல் தாக்கியது. மெகி என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்குப் … Read more
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் ஆன எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தான் தயார் என அறிவித்துள்ளார். டிவிட்டர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்த சில நாட்களுக்குப் பிறகு, எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 43 பில்லியன் டாலர்களுக்கு வாங்க முன்வந்துள்ளார். எலான் மஸ்க் நிர்வாக குழுவில் இடம் பெற மறுத்ததற்கு பின் பல காரணங்கள் சொல்லபப்ட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற … Read more
ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “காதலுக்கு எல்லையே இல்லை” என்ற பழமொழியை உண்மையாக்கியுள்ளார் ஜப்பானின் முன்னாள் இளவரசி மாகோ. அவர் தற்போது, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டில் ஊதியம் பெறாத தன்னார்வலராக பணிபுரிவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 30 வயதான முன்னாள் இளவரசி, பட்டங்களை விட்டுவிட்டு, ‘சாதாரண’ காதலன் கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு … Read more
உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவி வழங்குவதற்காக, புதன்கிழமை (ஏப்ரல் 13) அமெரிக்கா, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அறிவித்தது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைனுக்கு, அதிக சக்தி திறன் கொண்ட உபகரணங்களை அமெரிக்கா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கான சமீபத்திய இராணுவ உதவியை அறிவித்து அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி மற்றும் மனிதாபிமான … Read more