இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு பத்து லட்சம் பேருக்கு அனுமதி: சவுதி அரேபியா

இந்த ஆண்டு மொத்தம் பத்து லட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா இன்று (2022, ஏப்ரல் 7, சனிக்கிழமை) அறிவித்தது.  கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையும் முடங்கியது.   இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை பற்றி தகவல் தெரிவித்த சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம்,, “இந்த ஆண்டு ஹஜ்  பயணத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு யாத்திரீகர்கள் என … Read more

இந்தியாவை பிடிக்குமென்றால் அங்கேயே போய்விடுங்கள்: இம்ரான் கானை சாடிய நவாஸ் ஷரீப் மகள்

மிக அரிய நிகழ்வாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) அன்று இந்தியாவை புகழ்ந்தார். இதற்கு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப், இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) துணைத் தலைவரான மரியம், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்தியாவை அவ்வளவு பிடிக்கும் என்றால், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுமாறு கூறினார். “அதிகாரம் கையை விட்டு போவதைக் கண்டு ஒருவருக்கு … Read more

பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியும் பிற நாடுகள் மீது அதன் தாக்கமும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பு நிறைவேறினால் இஸ்லாமிய தேசத்தின் புதிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீப் பதவியேற்க உள்ளார். 220 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தானின் பணம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியின் தாக்கம், அந்த நாட்டுடன் தொடர்புடைய பிற நாடுகளிலும் எதிரொலிக்கும்.    மேலும் படிக்க | … Read more

‘உடனடியாக மருந்துகளைக் கொடுங்க’ – உலக நாடுகளிடம் கைநீட்டும் இலங்கை டாக்டர்கள்

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. உச்சக்கட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த நாடே திவாலாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் வாழ வழியில்லாமல் இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். நாள்தோறும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கள்ளத்தோணிகள் மூலம் குடும்பம் குடும்பமாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சமடைய வருவதால் அந்தப் பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி வரும் குடும்பங்களை என்ன செய்வதென்றே தெரியாமல் கடலோர காவல் படை அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.  … Read more

புடினின் மகள்கள் மீது தடைகள்..அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் அறிவிப்பு

உக்ரைன் மீது 43-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் தங்களுக்கும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா முதன்முதலாக ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்ய வீரர்களின் உயிரிழப்பு அதிகரிப்பது கவலை அளிப்பதாக ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள் உக்ரைன் மீதான போரை நிறுத்தக் கூறி பல முறை எச்சரித்தும் உடன்படியாததால் … Read more

26/11 சூத்திரதாரி ஹபீஸ் சயீத்துக்கு 31 ஆண்டு சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: இந்தியாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான மும்பை 26/11 தாக்குதல்களின் சூத்திரதாரியான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீதுக்கு இரண்டு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத் கட்டியதாகக் கூறப்படும் மசூதியும் மதரஸாவும் கையகப்படுத்தப்படும் என்று தகவல்கள் … Read more

உக்ரைன் ரயில் நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்: 30-க்கும் மேற்பட்டோர் பலி, பலருக்கு காயம்

கீவ்: கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8, 2022) ரஷ்ய படைகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்ததாக மாநில ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகளால் குண்டுவீச்சுக்கு உள்ளான பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை இரண்டு ரஷ்ய ராக்கெட்டுகள் தாக்கியதாக அந்த நிறுவனம் கூறியது. “கிராமடோர்ஸ்க் ரயில் … Read more

பணக்காரனா நீ? வரி கட்டு! செல்வந்தர்களுக்கு வரி விதிக்கும் இலங்கை

இலங்கையில் மோசமடைந்த பொருளாதார சீர்குலைவை சரிசெய்ய முடியாமல் திகைத்து நிற்கும் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அளிக்கும் முடிவை எடுத்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சீர்கேட்டை ஓரளாவது சரி செய்ய வேண்டுமானால், அரசுக்கு வருமானம் வேண்டும். நிதியுதவிகள் தேவை. ஆனால் விரைவான வருவாயைப் பெற இலங்கை அரசு எடுத்திருக்கும் முடிவு வித்தியாசமாய் இருக்கிறது. பணக்காரர்களுக்கு வரி விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு வாக்கெடுப்பும் இன்றி, இலங்கை நாடாளுமன்றம், பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கும், பிற்போக்கான கூடுதல் … Read more

Viral Video: மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா… ரஷ்ய வீரரை நடுங்க வைத்த உக்ரைன் ட்ரோன்…

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 6 வாரங்களை கடந்து நீடித்து வருகிறது. தொடக்கத்தில் உக்ரைனை ஆக்கிரமித்து புதிய ஆட்சியாளரை நியமிப்போம் என சூளுரைத்த ரஷ்யா தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. உக்ரைன் வீரர்களின் துணிச்சலான பதிலடி தாக்குதலால் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கி வருகின்றன.  தங்களின் திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியானதால் ரஷ்ய ராணுவ வீரர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பின்வாங்கும் நடவடிக்கையின்போது பொதுமக்கள் மீது … Read more

அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி!

நீதிமன்ற அமைப்புகள் உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்றார் போல் மாறுபடும். இந்திய உச்சநீதிமன்ற அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறானது அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பு. அதாவது, இந்தியாவில் பணிபுரியும் உச்சநீதிமன்ற  நீதிபதிகளின் பதவிக்காலம் 65 வயது வரை மட்டுமே. ஆனால், அமெரிக்க உச்சநீதிமன்ற அமைப்பில் ஓய்வுக்கான வயதுவரம்பு இல்லை. வாழ்நாள் முழுவதும் அவர்கள் நீதிபதிகள்தான். சுய விருப்பத்தின்பேரில் வேண்டுமானால் ஓய்வு பெறலாம். செனட் சபை ஒப்புதலின்படிதான் அமெரிக்காவில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், பெரும்பாலான வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கே வராது. … Read more