ட்விட்டர் இயக்குநர் குழுவில் இணையும் எலன் மஸ்க்

டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் பிரபல சமூக நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் வரை உயர்ந்தன. ட்விட்டரின் பங்குகளை வாங்கியதன் மூலம் அந்நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக எலன் மஸ்க் மாறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எலன் மஸ்க்கும் இணையவுள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் அறிவித்துள்ளார். தங்கள் குழுவில் எலன் மஸ்க் … Read more

ஒருவேளை போரில் உயிரிழந்தால்…உக்ரைனில் குழந்தையின் முதுகில் எழுதப்படும் குடும்ப விவரங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. போர் காரணமாக உக்ரைனிலிருந்து 40 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி வரும் புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. குறிப்பாக புச்சா நகரின் வீதிகளில் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தது காண்போரை அதிர்வடைய வைத்துள்ளது.  ரஷ்ய வீரர்களால் தாங்கள் கொல்லப்படுவோம் என அஞ்சி பெற்றோர் குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்களை எழுதியுள்ள புகைப்படங்கள் தற்போது … Read more

உறக்கத்தில் இருந்த நபரை பாலியல் வன்கொடுமை செய்த பிரிட்டிஷ் எம்பி இம்ரான் கான்

பிரிட்டனில் ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு பார்ட்டிக்குப் பிறகு, கஞ்சா மற்றும் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தபோது, ​​​​பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில், தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.  வேக்ஃபீல்ட் கன்சர்வேடிவ் எம்.பி.யான இம்ரான் அஹ்மத் கான், ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு இல்லத்தில் ஜனவரி 2008 இல் 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து சவுத்வார்க் … Read more

விண்வெளி பயணத்தில் கால் பதிக்கும் தனியார் நிறுவனம்; வரலாறு படைக்கும் AXIOM SPACE

புளோரிடா: இந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையம் வழக்கத்தை விட அதிக பரபரப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும். உண்மையில், அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ், தனது நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன. இப்போது இந்த பணியின் கவுண்ட்டவுன்  தொடங்க உள்ளது இந்த பணி குறித்து முன்னாள் நாசா விண்வெளி வீரர் மைக்கேல் லோபஸ் அலெக்ரியா கூறுகையில், மனித விண்வெளி பயணத்தின் புதிய காலம் … Read more

இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது

கொழும்பு: இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தின் நிர்வாக தோல்வி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் மீது வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இலங்கையில் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளும் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் கூட்டணியில் இருந்து 41 எம்.பி.க்கள் வெளியேறுவதாக அறிவித்தனர்.  எங்கள் கட்சி மக்களுக்கு ஆதரவாக உள்ளது: சிறிசேனா இதனிடையே, ராஜபக்சேவின் … Read more

உக்ரைனின் புச்சா நகரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகரில் வீதியில் காணப்படும் உடல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிவ் பிராந்தியத்தில் உள்ள புச்சா நகருக்கு  சென்று பார்வையிட்ட போது, அங்கு ரஷ்ய துருப்புக்களிடமிருந்து மீட்கப்பட்ட  அந்த பிரதேசத்தில்  சாலையில் கிடக்கும் சடலங்கள், படுகொலைகள் நடத்தப்பட்டதற்கு சாட்சியாக இருப்பதாக குறிப்பிட்டார் புச்சா நகரில் என்ன நடந்தது என்பதை உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதற்காக அங்கு சென்றிருப்பதாக ஸெலென்ஸ்க்கி குறிப்பிட்டார். படுகொலைகளுக்குப் பொறுப்பானவர்களை உலகிற்குக் காட்டும் வரை உக்ரைன் அமைதியாக … Read more

புலம் பெயர முயன்றவர்களை புதைத்துக் கொண்ட மத்திய தரைக்கடல்! படகு விபத்தில் 100 பேர் பலி

ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்த 100 பேர் விபத்தில் பலியானதாக தெரிகிறது.  ஆப்ரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் பயணம் செய்வது வழக்கம். படகின் கொள்ளளவை விட மிக அதிகமானவர்கள் இருந்ததால் எடை தாங்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.   வாழ வழியில்லாமல், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், ஐரோப்பாவிற்கு சென்றால் எப்படியேனும் பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்காக … Read more

எங்களைக் காப்பாற்றுங்கள்..பிரதமர் மோடியின் உதவியை நாடும் இலங்கை

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், மின்சாரம் இன்றி மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிப்பு தெரிவித்து அதிபர் கோத்தபய ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டம் வலுத்து வரும் சூழலில் இலங்கையில் 26 அமைச்சர்கள் நேற்றிரவு பதவி விலகினர். இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அழைப்பு … Read more

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை..பெண்கள் சித்ரவதை..ரஷ்ய ராணுவம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன் எல்லையில் பல மாதங்களாக படைகளை குவித்திருந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியது. கடந்த 40 நாட்களாக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் சுமார் 40 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பின்வாங்கி உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்துவதாக ரஷ்யா கடந்த … Read more

இந்தியாவுக்கு இலங்கை சொல்லும் ‘ரகசியம்’ என்ன ?

சீரழிந்த ஒரு நாட்டைக் கை காட்டுவதற்கு உதாரணமாக இலங்கை ஆகிவிட்டது. பொருளாதார நெருக்கடியில் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்ட இலங்கையின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறிவிட்டது. அங்கு வாழும் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒரு தேசத்திற்கு இந்த நிலை எப்போதும் வரக்கூடாது. வெறும் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்ய – உக்ரைன் போர் மட்டுமே முழுமையாக இதற்கு காரணம் என சொல்லிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தத்துவ நிலைப்பாடும், அரசியல் அமைப்புச் சட்டமும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆளுமைகளும், தலைமைகளுமே … Read more