இலங்கை பெரும் பதற்றம்; அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இலங்கையில் ஏற்பாட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில், அதிபரின் இல்லத்துக்கு செல்லும் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மிரிஹானவில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. அதிபரின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், இலங்கை அதிபர் இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை போலீசார் … Read more

தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை (மார்ச் 31) தனது பிடிஐ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தான் தோல்வியை ஏற்காமல் இறுதிவரை போராடுவேன் என்று கூறினார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், “நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, நான் கடைசி பந்து வரை விளையாடும் வரை விளையாடியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் துவண்டு விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் … Read more

வில்ஸ் ஸ்மித்தின் மன்னிப்பும், கிறிஸ் ராக்கின் பதிலும்.!

ஆஸ்கர் விழா எப்போதும் போலவே இனிமையாக முடிந்தாலும், இந்தாண்டு ஒரு ‘அறை’ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெறுவது இதுவே முதல்முறையாகும். விழாவை கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலை குறித்துக் … Read more

Viral News: பறவைக்காக கூந்தலில் கூடு கட்டி தந்த வள்ளல்; 3 மாதம் வசித்த பறவை

மனிதர்களுக்கு இடையிலான ஆழமான நட்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பை அறிந்தால் வியப்பீர்கள். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட அனுமதித்த்துள்ள நிலையில், ஒரு அசாதாரண நட்பின் கதை இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.  ஒரு ட்விட்டர் பதிவில், Hannah Bourne-Taylor என்ற பெண், தன் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட ஒரு பறவைக்கு, 84 நாட்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறினார். லண்டனில் வசிக்கும் … Read more

நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையானால் உலக வரைபடமே 2022இல் மாறும்

Nostradamus Predictions for 2022: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.  2022ஆம் ஆண்டில் ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன. நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் 2022: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு மாத காலமாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படுகின்றன. போர் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்ய-உக்ரேனியப் போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் … Read more

இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்; பீப்பாய்க்கு $35 தள்ளுபடி வழங்கும் ரஷ்யா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு  $35  என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று … Read more

Viral News: ஆஸ்திரேலியாவின் சன்ஷைன் கடற்கரையில் ‘வேற்றுகிரக’ உயிரினம்…!!

ஆஸ்திரேலியாவில், கடற்கரையில் ஒருவர் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தை கண்டுள்ளார். 4 கால்கள் கொண்ட இந்த உயிரினம் அடையாளம் காணப்படவில்லை. சமூக வலைதளங்களில் வெளியான அதன் படங்களைப் பார்த்து சிலர் ஏலியன் என்று கூறி வருகின்றனர். இந்த விசித்திரமான  உயிரினத்தை கடற்கரையில் பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அதை முதன்முறையாக பார்த்தவர் வீடியோ செய்து ஷேர் செய்துள்ளார். ஏலியன் போன்ற தோற்றம் இந்த உயிரினத்தின் தோற்றம் வேற்றுகிரகவாசி போல் இருந்தது. எனவே, அதனை வேற்றுகிரகவாசி என்றும் அந்த நபர் … Read more

Video: விண்வெளியில் 355 நாட்களுக்குப் பின் பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்கள்!

ரஷ்யா மற்றும் அமெரிக்கா போர் காரணமாக பிளவு பட்டுள்ள போதிலும், ரஷ்யா மற்று அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஒன்றாக பூமிக்கு திரும்பியுள்ள நிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம்.  நாசா விண்வெளி வீரர்  மார்க் வந்தே ஹெய் , சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் கழித்த பிறகு புதன்கிழமை பூமிக்குத் திரும்பினார்.  அவரை போலவே கடந்த ஆண்டை விண்வெளியில் கழித்த ரஷ்ய விண்வெளி ஏஜென்சியின் பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோருடன் மார்க் … Read more

ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ

  பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான்  முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  உடன்பாடு ஒன்றை எட்டிய நிலையில் இம்ரான் கானிற்கு அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.  முன்னதாக,  இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்த நிலையில்,  ட்வீட் செய்த PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் MQM ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் … Read more

Pluto: எதிர்பார்த்ததைவிட மிகவும் ஆற்றல் வாய்ந்தது! குள்ள கிரகம் புளூட்டோவில் பனி எரிமலைகள்

நமது சூரிய குடும்பத்தில் அறியப்பட்டஇன்னும் செயலில் இருக்கும் பனி எரிமலைகள் புளூட்டோவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் மிஷனின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. தொலைதூரத்தில் உள்ள இந்த உறைந்த உலகம் முன்பு நினைத்ததை விட மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்பதைக் குறிக்கும் வகையில் இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் கிரையோவோல்கானோக்கள், ஆறில் ஒரு மைல் (1 கிமீ) முதல் நான்கரை மைல்கள் (7 … Read more