ஆயுத குவிப்புக்கு காரணம் ஏகாதிபத்தியங்களே! கிம் ஜாங் உன் குற்றச்சாட்டு

அச்சுறுத்தல்களை சமாளிக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் தேவை என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளது சர்வதேச நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுக்குள் வைத்திருக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் உதவுவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக அந்நாட்டின் அரச ஊடகமான KCNA இன்று (திங்கள்கிழமை, 2022, மார்ச் 28) தெரிவித்தது. பண்டமாற்று அல்லது எதற்கும் விற்க முடியாத “வலிமையான தடுப்பாற்றல் திறன்களை” நாடு தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் … Read more

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா..இந்தியப் பயணம் ரத்தாகுமா?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே மிகத்தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியதோடு, உலகிலேயே இஸ்ரேல் தான் முதல் நாடாக 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியது. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசின் திரிபான பிஏ1 மற்றும் பிஏ2 ஆகியவை ஒன்றிணைந்து உருவான புதிய உருமாறிய கொரோனா அண்மையில் இஸ்ரேலில் கண்டறியப்பட்டது. தற்போது இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனுடன்  நஃப்தலி … Read more

சீனாவின் மீண்டும் தலை தூக்கும் கொரோனா; ஷாங்காய் நகரில் தீவிர லாக்டவுன் அமல்..!!

கொரோனா நான்காவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் காரணமாக லாக்டவுனை அமல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. லாக்டவுன்  பகுதிகளில்  பொது போக்குவரத்தையும் நிறுத்துவதாக நகர அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் அல்லது உணவு வழங்குபவர்கள் தவிர, நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்  என … Read more

பெண்கள் விமானத்தில் தனியே பறக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் இருந்த சர்வதேச படைகள் வெளியேறிய பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டு வரை தாலிபன்கள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, விரும்பிய உடையை அணிவது என அனைத்து விவகாரங்களிலும் தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லவும் வாய்ப்பளிக்கப்படும் என தாலிபன்கள் உத்தரவாதம் அளித்தனர். … Read more

எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை: எலான் மஸ்க்

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) CEO  எலான் மஸ்க் ஒரு நேர்காணலில், கோடீஸ்வரர் மஸ்க் தனது வாழ்க்கை உட்பட பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார்.  அதில் அதான் மரணத்தை கண்டு தான் அஞ்சவில்லை என கூறியதோடு, ​​வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தனக்கு கவலையில்லை, ஆனால் வாழும் காலத்தில் தன்னை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துவதாக கூறினார். எலோன் மஸ்க் தனது உடல்நிலையை நன்றாக பராமரிக்க … Read more

கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  இன்னும் சிறிது நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் பேரணி நடக்கவுள்ளது.    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது வலிமையை காட்டவும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் தன்னால் இயன்ற அனைத்து … Read more

உக்ரைனின் லிவிவ் நகரை தாக்கிய ரஷ்ய ஏவுகணை; பற்றி எரியும் எரிபொருள் கிடங்கு!

லண்டன் (ராய்ட்டர்ஸ்) – மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் நகரில் உள்ள ராணுவ இலக்குகளை, மிக துல்லியமாக தாக்க வல்ல ரஷ்யாவின் கப்பல் ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளது.  லிவிவ் அருகே உக்ரைன் படைகளால் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்கை ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் தாக்கியதோடு,  டிரோன்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள், ரேடார்  அமைப்புகளையும் அழித்தது.  டாங்குகள் வைக்கப்பட்டிருந்த இடங்களையும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தாக்கியதாக என்று ரஷ்ய … Read more

போருக்கு மத்தியில் உக்ரைனில் அதிகரிக்கும் சிக்னல் டெலிகிராம் செயலிகளின் பயன்பாடு

உக்ரைனில் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள் 71 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதன் மூலம், சிக்னலின் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை நாட்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.   உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக, மில்லியன் கணக்கான உக்ரைன் குடிமக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். நாட்டின் நிலைமைக்கு ஏற்ப, தொலைபேசிகள் தொடர்பான மக்களின் தேவைகள் மற்றும் பழக்கவழக்கங்களும் மாறி வருகின்றன.  சென்சார் டவரின் அறிக்கையின்படி, உக்ரைனில் மொழிபெயர்ப்பு பயன்பாடுகள் 71 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதன் மூலம், … Read more

ரஷ்யாவை தடுக்க முடியாது… உலகை ஆளப்போகிறார் புதின்… வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் தனது 84-வது வயதில் 1996-ம் ஆண்டு காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்பு இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  இவரது கணிப்புகளில் 68% அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளரகள் அதற்கு … Read more

சீனா விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல்

பெய்ஜிங்: கடந்த திங்கட்கிழமை மலைப்பகுதியில் 132 பேருடன் மோதி விபத்துக்குள்ளான சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இரண்டாவது கருப்புப் பெட்டியை சீன அதிகாரிகள் மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.  “சீனா ஈஸ்டர்ன் விமானம் MU5735 ல் இருந்து இரண்டாவது கருப்பு பெட்டி மார்ச் 27 அன்று மீட்கப்பட்டது,” Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை குன்மிங் மற்றும் குவாங்சூ இடையே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்த போது 132 பேருடன் மலைப்பகுதியில் … Read more