பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு – இந்திய உணவகத்துக்கு நேர்ந்த கதி!

கர்நாடகாவில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் வாசலிலேயே நிற்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இஸ்லாமிய மாணவிகளுக்கு அச்சுறுத்துத்தல் தரும் வகையில் காவி துண்டு அணிந்து வந்த மாணவர்களால் பதற்றமான சூழல் உருவானது.  நிலைமையை சமாளிக்க பள்ளி கல்லூரிகளுக்கு அம்மாநில அரசு காலவரையற்ற விடுமுறை அளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் 144 … Read more

முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யா போர் : நாள் குறித்த புதின்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷ்யா பெரும் சேதங்களை சந்தித்துள்ளதாகவும் இதுவரை ரஷ்யாவின் 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக படைகளை முறையாக வழிநடத்தவில்லை என ரஷ்யாவின் 37-வது படைப்பிரிவின் தலைவரை சக வீரர்களே சுட்டுக்கொன்றதாக மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.  போரில் தங்கள் தரப்பை சேர்ந்த 300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கிரம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை … Read more

Satyameva Jayate: ஜீ மீடியாவிற்கு வெற்றி! உக்ரைன் விவகாரத்தில் வியான் மீதான தடையை நீக்கிய YouTube

புதுடெல்லி: யூடியூபின் வியான் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது தர்மம் என்றும் வெல்லும் என்பதையும், ஜீ குழுமம் விதிமுறைகளை பின்பற்றி இயங்குகிறது என்பதையும் உறுதி செய்துள்ளது. ரஷ்யப் படையெடுப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, WION நடுநிலைமையாக செயல்பட்டதையும், அறிக்கை சமச்சீராக இருப்பதையும், யூடியூப் உறுதிபடுத்தியுள்ளது. மார்ச் 22 அன்று, யூடியூப் WIONஐத் முடக்கியது. மொத்தத் தடையை உறுதிசெய்த யூடியூப் நிறுவனம், ஜீ ஊடகத்தின் செய்திச் சேனல்களில் ஒன்றான வியான் தொலைகாட்சியின் புதிய வீடியோக்களை பதிவேற்ற அனுமதிக்கவில்லை. #YouTubeUnblockWION This … Read more

Drone Attack: ஆரம்கோ எண்ணெய் ஆலை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஹூதி! கவலை தரும் பின்னணி

ஜெட்டாவில் (2022, மார்ச் 25) நேற்று நிகழ்ந்த மிகப் பெரிய தீ விபத்துக்கு காரணமான தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று பேசிய ஹூதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரியா, ஜெட்டாவில் உள்ள சவுதி அராம்கோ எண்ணெய் ஆலையை யேமனின் ஹூதிகள் தாக்கியதாக தெரிவித்தார். ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களின் ஒரு பகுதியாக, நகரத்தில் உள்ள ஃபார்முலா ஒன் மைதானத்திற்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் வானில் பிரம்மாண்டமான அளவில் புகை … Read more

பிரபாகரனால் முடியாததை ராஜபக்‌ஷே செய்துவிட்டார் – இலங்கை எம்.பி சர்ச்சை பேச்சு

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் எரிவாயு வாங்கவும் அன்றாட தேவைகளை வாங்குவதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பலர் நாட்டை விட்டே வெளியேறி வருகின்றனர். நாளுக்குநாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற அவையில் பேசிய விஷயம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  ”30 ஆண்டுகாலம் பிரபாகரன் போர்செய்தும் அழிக்க முடியாத இலங்கையை கோத்தபய ராஜபக்‌ஷே இரண்டே ஆண்டுகளில் அழித்துவிட்டார்” என்று பேசியிருக்கிறார். இப்படியான ஒரு விஷயத்தை கார்டூனில் … Read more

அதிபர் புதினின் ரகசிய காதலியை நாடுகடத்த 61,000 பேர் மனு!

ரஷ்ய அதிபரான விலாடிமிர் புதினுக்கு சட்டப்பூர்வமாக லுட்மிலா அலெக்ஸான்ரோனா ஓசேரெட்னயா என்ற மனைவியும், மரியா புதினா, கேத்ரினா டிக்கோனோவா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், 69 வயதான ரஷ்ய அதிபர் புதினுக்கு 38 வயதில் ஒரு ரகசிய காதலியுள்ளார் என பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது. அந்த ரகசிய காதலியாக கருதப்படுபவரின் பெயர் அலினா கபேவா. உஸ்பெகிஸ்தான் நாட்டில் பிறந்த இவர் இஸ்லாமிய பெண்ணாக வளர்ந்துள்ளார். ஆனால் தற்போது கிறுஸ்துவத்தை பின்பற்றுகிறார் என கூறப்படுகிறது.  முன்னாள் … Read more

அடங்காத வடகொரியா.! மீண்டும் ஆபத்தான ஏவுகணை சோதனை

உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை செய்துவருகிறது. அடிக்கடி புதிய ஏவுகணையை தயாரித்து அதை ஜப்பான் கடல்பரப்பில் சோதனை செய்து வருவது வடகொரியாவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு தென்கொரியா மற்றும் ஜப்பான் கடும் கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றன. வடகொரியாவின் செயல் மிகவும் கவலை தருவதாக ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா தெரிவித்து வருகிறார். தடை செய்யப்பட்ட அணுஆயுத ஏவுகணைகள் பரிசோதனையை வட கொரியா கைவிட வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், … Read more

Russia-Ukraine: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் நியூஸிற்கும் ரஷ்யாவில் தடை..!!

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  சுமார் ஒரு மாத காலமாக தொடர்கிறது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.  உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள தூண்டு செய்திகளை அகற்றுவதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக  … Read more

Alina Kabaeva: இவர் தான் ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியா; அதிர வைக்கும் தகவல்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன்  நட்பு நாடுகளும் ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் … Read more

ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான ரஷ்யாவின் தீர்மானத்தில் 12 ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்தியாவும் எந்த பக்கமும் சாராமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் வரைவு தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்தன. புதன் கிழமையன்று, ஐ.நா சபையில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஒன்பது வாக்குகளைப் பெறாததால், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, எந்த நாடுகளும் எதிராக … Read more