உக்ரைன் மீது ரஷ்யா உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும்: அமெரிக்கா எச்சரிக்கை

ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் புதன்கிழமை, ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று எச்சரித்தது. உக்ரைனில் சட்டவிரோதமான இரசாயன ஆயுதங்களை உருவாக்குவதாக கூறப்படும் ரஷ்யாவின் கூற்றுக்களை வெள்ளை மாளிகை நிராகரித்தது. இந்த வாரம் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா,  உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் … Read more

கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா

உலகில் 60 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற COVID-19 தொற்றுநோய் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், கோவிட் நெருக்கடி தீர்ந்து விட்டது என்று நினைப்பது ஒரு “பெரிய தவறகி விடும்” என்று ஐ.நா தலைமைச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் புதன்கிழமை எச்சரித்தார். கோவிட்-19 தடுப்பூசி பெற கிட்டத்தட்ட மூன்று பில்லியன் மக்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்ற உண்மை நிலை கவலை அளிப்பதாக அவர் தெரிவித்தார். தொற்றுநோய் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி குட்டெரெஸ் வெலியிட்ட தனது … Read more

உக்ரைன் போரில் மரணமடைந்த நடிகர்! ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பலி..

உக்ரைன் மீது 14-வது நாளாக ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் இணைந்து சண்டையிடலாம் என உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ஏராளமானோர் ராணுவத்தில் இணைந்து, ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதில், பாஷா லீ என்ற நடிகர் கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் இணைந்தார். இர்பின் நகரில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற சண்டையில் பாஷா லீயும் பங்கேற்றிருந்த நிலையில் … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை

அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து அனைத்து வகையான எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று தெரிவித்தார். இருப்பினும், இதனால், அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் தெரிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். மேலும் படிக்க | உக்ரைன் … Read more

குண்டு மழைக்கு நடுவே முத்த மழை… போர்க்களத்தில் நடந்த திருமணம்..

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் சூழல் தொடர்ந்து வருகிறது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை வரை வந்துள்ள நிலையில், உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இவ்வளவு ரணகளத்திலும் போர்க்களத்தில் திருமணம் செய்து வருகிறார்கள் உக்ரைன் ராணுவ வீரர்கள். பாதுகாப்பு படை வீரர்களான வலேரி மற்றும் லெஸ்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.   Сьогодні вітав бійців одного з батальйонів тероборони столиці Лесю та Валерія. … Read more

உக்ரைன் அதிபர் எங்கே இருக்கிறார்? அவர் வெளியிட்ட வீடியோ

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் தங்களின் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால், போர் மேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேட்டோ அமைப்பில் சேருவதற்காக உக்ரைன் எடுத்த முயற்சியால் கோபமடைந்த ரஷ்யா, போரை அறிவித்து உக்கிரமாக நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியும், ரஷ்யா நடத்தும் தாக்குதலில் இருந்து பின்வாங்காமல் போரை முன்னெடுத்து வருகிறார் மேலும் படிக்க | உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் – பேனா பிடித்த கைகளில் … Read more

Good News சுவிட்சர்லாந்தில் குடியுரிமையும், வேலை வாய்ப்பும் – முழு விவரம்

ஸ்கில்டு வொர்க்கர்ஸ் என்று அழைக்கப்படும், இன்ஜினியர்கள், நர்சுகள், மருத்துவர்கள், மிஷின் ஆப்பரேட்டர்கள் உள்ளிட்ட பல திறன் சார்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து உலக நாடுகளிலும் நல்ல  வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அதனுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது. ஆனால் நாம் வேலை புரியும் நாட்டின் குடியுரிமை கிடைப்பதில் பல சிக்கல்கள் மற்றும் வழிமுறைகள் உள்ளன. இதம் காரணமாக குடியுரிமை கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.  வொர்க் பர்மிட் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நாடு விட்டு நாடு சென்று பணி … Read more

ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 ஊக்கத்தொகை!

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள், இலங்கையிலுள்ள தங்களின் குடும்பத்தாருக்கு அனுப்புகின்ற ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் ரூ.38 வரை உக்கத்தொகை சேர்த்து வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அரிவித்துள்ளது. வருடம்தோரும் இலங்கை புத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன்படி வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு சென்று தொழில்புரிபவர்களுக்கு சிறப்பு சலுகையை வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.  அது என்னவென்றால், இலங்கை தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, … Read more

உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் – பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த போரினால் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த சாய் நிகேஷ் எனும் இளைஞர் … Read more

ஆச்சர்ய தகவல்! அணு குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் இல்லாத உலகின் 5 இடங்கள்..!!

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது அணு ஆயுதத் தாக்குதல் குறித்த ஊகத்தை கிளப்பியுள்ளது. இது நடந்தால், பெரும்பாலான நாடுகளின் பெயர் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.  ரஷ்யாவில் அதிகபட்சமாக 4,600 அணுகுண்டுகள் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அமெரிக்க உள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் அணு ஆயுதப் போர் ஆரம்பித்தால் மக்கள் எங்கே சென்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்பதுதான் கேள்வி. அணுசக்தி யுத்தத்தால் பாதிக்கப்படாமல் இருக்கக் கூடிய  ஐந்து பகுதிகள் உலகில் உள்ளன. … Read more