உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதலுக்கு பதிலளித்த அமெரிக்கா: அடுத்த கட்டம் ஆரம்பமா?

புதுடெல்லி: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நிலையிலும், உக்ரைனிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை என ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதப் போராக இது மாறிவிடக்கூடாது என்ற அச்சமும் மேலோங்கி உள்ளது.  உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க எரிசக்தி துறை தனது ‘நியூக்லியர் இன்சிடண்ட் … Read more

பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியா இஸ்லாமிய மசூதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பெஷாவரின் பழைய நகரத்தில் உள்ள குச்சா ரிசல்தார் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பக்தர்கள் கூடியிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியின் தெருக்கள் மிகவும் குறுகலாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வண்டிகள் வருவதும் செல்வதும் சிக்கலாக இருந்தது. … Read more

உக்ரைன் நெருக்கடி: சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனில் உள்ள சபோரிசியா Zaporizhzhia மீது, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில்  தீப்பிடித்தது என்றும், அங்கிருந்து புகை வெளியேறுவதை அதிகாரிகள் கவனித்ததாக அணுமின் நிலையம் உள்ள  எனர்கோடர் நகரின் மேயர் கூறிய நிலையில்,  சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளத மேலும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், அணுமின் நிலையத்தின் அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா தாக்குதல்களை நடத்திய நிலையில், அணுமின் நிலையம் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம்

கிவ்: உக்ரைம் மீதான தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்த நிலையில் கிவ்வில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்பு பணிக்கு சென்ற மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் (MoS) ஜெனரல் வி.கே.சிங் இத்தகவலை தெரிவித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய  மத்திய இணை அமைச்சர் VK சிங், போலந்தில் உள்ள Rzejo விமான நிலையத்தில் வியாழக்கிழமை இந்தத் தகவலைத் தெரிவித்தார். முன்னதாக ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் … Read more

ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ: உக்ரைன்

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான உக்ரைனில் உள்ள போரிசியா Zaporizhzhia மீது, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரஷ்ய துருப்புக்கள் நடத்திய தாக்குதலில்  தீப்பிடித்தது என்றும், அங்கிருந்து புகை வெளியேறுவதை அதிகாரிகள் கவனித்ததாக அணுமின் நிலையம் உள்ள  எனர்கோடர் நகரின் மேயர் கூறினார். உள்ளூர் படைகளுக்கும் ரஷ்ய துருப்புக்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, டிமிட்ரோ ஓர்லோவ் இவ்வாறு கூறினார். இதற்கிடையில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், அணுமின் நிலையத்தின் அனைத்து பக்கங்களிலிருந்தும் ரஷ்யா … Read more

‘பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் ….’: ரஷ்யாவுக்கு உள்ள தயக்கம் என்ன?

கீவ்: உக்ரைனில் நடக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு மாஸ்கோ தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனின் ராணுவ உள்கட்டமைப்பை அழிக்கும் முயற்சிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர், நாட்டின் பிரதிநிதிகள் குழு தனது கோரிக்கைகளை உக்ரேனிய பிரதிநிதிகளிடம் இந்த வார தொடக்கத்தில் சமர்ப்பித்ததாகவும், இப்போது வியாழன் அன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் உக்ரைனின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் கூறினார். மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை … Read more

உக்ரைன் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளதா.. இந்தியா கூறுவது என்ன..!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி நடந்து வரும் நிலையில், அண்டை நாடான கார்கிவ் நகரில் ஏராளமான இந்திய மாணவர்களை, உக்ரைன் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன்  தொடர்பு கொண்டு பேசிய நிலையில், உக்ரைனில் குறிப்பாக கார்கிவில் பல இந்திய மாணவர்கள்  சிக்கித் தவிக்கின்றனர் என செய்தி வெளியானது.  உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பான ஊடகங்களின் … Read more

அணு ஆயுத போர்; 30 நிமிடங்களில் 100 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்..!

நேட்டோ அமைப்பில் சேரக்கூடாது என்ற நிபந்தனையை மீறிய உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உக்கரமான போர் ஏற்பட்டுள்ள நிலையில், நாளுக்குநாள் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் எண்ணிக்கையும், குண்டு மழைப் பொழிவும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு சற்றும் பின்வாங்காமல் இருக்கும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.  மேலும் படிக்க | அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான … Read more

நடந்தாவது வெளியேறி விடுங்கள்: கார்கிவ்விலுள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர செய்தி

புது தில்லி: புதன்கிழமை (மார்ச் 2) வெளியிடப்பட்ட அவசர ஆலோசனையில், உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், உக்ரைன் நகரத்தில் உள்ள மோசமான நிலைமை காரணமாக கார்கிவ்விலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உக்ரைனில் உள்ள இந்தியர்களை கேட்டுக் கொண்டது. இன்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆலோசனையில், இந்தியத் தூதரகம், “இங்குள்ள இந்தியர்கள், பாதுகாப்பு கருதி கார்கிவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இங்கிருந்து பெசோச்சின், பாபே மற்றும் பெஸ்லியுடோவ்கா ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டும். இந்த பாதுகாப்பு புகலிடங்களை … Read more

உக்ரைன் எல்லையை கடக்க இந்திய தேசியக்கொடி உதவியது: பாகிஸ்தான் மாணவர்கள் உருக்கம்

ரஷ்யா உக்ரைன் இடையிலான பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் உட்பட உக்ரைனில் சிக்கியிருக்கும் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். பல்வேறு அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர அனைத்து வித ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.  இதற்கிடையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் மற்றும் துருக்கி மாணவர்களுக்கும் போரால் ஸ்தம்பித்துள்ள உக்ரைனிலிருந்து தப்பிக்க இந்திய தேசியக்கொடி உதவியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஒரு இந்திய மாணவர் தெரிவித்தார்.  … Read more