Wi-Fi இணைப்பை துண்டித்ததால், குடும்பத்தையே சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவன்!

இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர். அதிலும் சிறுவர்கள் சிலரும் அடிமையாகி, அது கிடைக்காமல் போனால், கொலை, கொள்ளை என இறங்கி விடும் சம்பவங்கள் அதிர்ச்சிகளை கொடுப்பதாக உள்ளன. ஸ்பெயினில் இது போன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ஒருவர் Wi-Fi இணைப்பை துண்டித்ததால், ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன் … Read more

முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!

இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அதிர்ஷ்டம் என்பது கூரை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. கணவர் பல வருடங்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். ஆனால் தற்போது வரை லாட்டரியில் இருந்து ஒரு ரூபாய் கூட வெல்ல முடியவில்லை. ஆனால்,  மனைவி முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கி முதல் முறையாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களாவை வென்றார். பென் என்ற நபர் பல ஆண்டுகளாக ஓமேஸின் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்தது. இருந்தாலும் இந்த முறை … Read more

Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கானேவால் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் குரானை அவமதித்ததாகக் கூறி நடுத்தர வயது நபர் ஒருவரை பொது மக்கள் கல்லெறிந்து கொன்றனர். மக்ரிப் தொழுகைக்குப் பிறகு ஜங்கிள் தேரா கிராமத்தில் ஒரு நபர் குர்ஆனின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்ததாக செய்திகள் வந்ததையடுத்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் அங்கு திரண்டனர். குரானின் பக்கங்களை எரித்ததாக கூறி, நடுத்தர வயது நபரை சுற்று வளைத்து, கல் எறிந்து படு கொலை செய்ததோடு, அவரின் சடலத்தை … Read more

உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை; ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  இந்நிலையில், உக்ரைனில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளார். படையெடுப்பு நடந்தால், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும் … Read more

பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!

தில்லியை உலுக்கிய தந்தூரி கொலை வழக்கு பலருக்கு நினைவில் இருக்கலாம் . தில்லியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மா, தனது மனைவி நைனா சாஹ்னியைக் கொன்றுவிட்டு, உணவகத்தின் தந்தூரி அடுப்பில் அவரது உடலை எரித்து விட்டார். இந்த வழக்கில் சர்மாவுக்கு 2003 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  அதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, முதல் மனைவியை இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த, மனைவியை … Read more

நேபாளத்தின் ‘உயிருள்ள’ நிலம்; வரும் ஆண்டுகளில் 1500 கிமீ தூரம் விலகிச் செல்லும்!

நேபாள நிலம் ஒன்றுக்கு உயிர் உள்ளது என்றால், முதல்முறை கேட்கும் நபருக்கு கேலியாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மைதான். இந்தோ-ஆஸ்திரேலிய புவித்தட்டு என்று அழைக்கப்படும் நேபாளத்தின் டெக்டோனிக் தட்டு தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த மில்லியன் ஆண்டுகளில் நேபாளத்தின் நிலப்பரப்பு 1500 கி.மீ அளவிற்கு நகர்ந்து செல்லும் என நம்பப்படுகிறது. 2015ம் ஆண்டு ஏப்ரலில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்நாட்டின் டெக்டோனிக் பிளேட்டின் சுழற்சியே காரணம் என்றும் நம்பப்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் … Read more

ரஷ்யா உக்ரைன் போர் மூளுமா; வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எச்சரிக்கை!

உக்ரைன் எல்லையில் ரஷ்ய தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருவதால்,  எல்லையில் எந்த ந்நேரமும் போர் மூளலாம் என்ற வகையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு … Read more

Quad 2022: வடகொரியா, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு குவாட் மாநாட்டில் மறைமுக எச்சரிக்கை!

மெல்பர்ன்: சுதந்திரமான மற்றும் சிறப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது குவாட் தலைவர்களின் மாநாடு. இந்தச் சந்திப்பில் வட கொரியாவுக்கு நேரடியாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (2022, பிப்ரவரி 11) மெல்போர்னில் நடைபெற்ற குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டின் 4வது பதிப்பில், ​​இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.   எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், இந்தியாவில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் … Read more

கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா – அமெரிக்கா!

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை சாடினார்.  இந்நிலையில், கண்டாவில்  டிரக் ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், அமெரிக்க-கனடா இடையிலான முக்கிய … Read more

அழுத்தம் கொடுக்கும் நாடுகள், அடம் பிடிக்கும் ரஷ்யா: மூளுமா உலகப்போர்?

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாக தெரிகிறது. உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, ​​அடுத்த சில நாட்களில் ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டால், அது இரு நாடுகளுக்கு மட்டும் உரிய பிரச்னையாக இருக்காது. இந்தப் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் … Read more