பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃப்கான் நிதியமைச்சர்! கால் டாக்சி ஓட்டும் காலித் பயெண்டா!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, முந்தைய அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக பல்வேறு சிறிய வேலைகளைப் பார்த்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவதற்கு … Read more

Ukraine under Threat: உக்ரைனில் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பரவியது காட்டுத் தீயா?

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பல இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக உக்ரைனின் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. செர்னோபில் அணு உலை அருகே காட்டுத் தீ ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ வெடித்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக்கோள் … Read more

பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என நம்பப்படுகிறது. ராணுவத் தளபதி அவரைபதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை… ஆனால்… எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா..!!

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 28 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன.  ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் போருக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகில்  ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து என்று டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள எச்சரிக்கை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  விளாடிமிர் புடின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் … Read more

ராணுவக் கண்காணிப்பில் பெட்ரோல் டீசல் விற்பனை ! மோசமாகும் பொருளாதாரம்! தள்ளாடும் நாடு…

இலங்கையில், எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் இங்கு ஒவ்வொரு நாளும் சாதனை உச்சத்தை எட்டுகிறது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் உட்பட பல காரணங்கள் உள்ளன. எரிபொருள் விற்பனையின்போது கும்பல் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் விதமாக, இந்த நாட்டின் அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், ராணுவத்தின் கண்காணிப்பில் பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.  … Read more

சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

நேற்று, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஜெட் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் விழுந்து சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கூறியது.  எனினும் விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, … Read more

உக்ரைனில் இருந்து 2389 குழந்தைகளை கடத்திய ரஷ்ய ராணுவம் – பகீர் பின்னணி!

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 25 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டுவருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருவதால் இந்த போர் எப்போது தான் முடிவுக்கு … Read more

வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் … Read more

தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  27வது நாளாக தொடர்கிரது. அதிபர் புடினின் உஜ்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. உலகிலேயே அதிக தடைகளை சந்திக்கும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடை ‘தீவிரவாத நடவடிக்கைகள்’  … Read more

உக்ரைன் அதிபர் எப்போதும் பச்சை நிற டி-ஷர்ட்டில் காணப்படும் காரணம் என்ன..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் 27வது நாளாக இன்றும் தொடர்கிறது.  போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இது வரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான முடிவும் ஏற்படவில்லை.  இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பச்சை நிற டி-ஷர்ட்டில் மட்டுமே … Read more