ICJ on Russia War: போரை நிறுத்து ரஷ்யா! சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

கீவ்: உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதி மன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது,  இந்த தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி என்று கூறும் உக்ரைன் அதிபர் Zelenskyy, தீர்ப்பை உடனடியாக ரஷ்யா அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ICJ இன் உத்தரவு சர்வதேச சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் உக்ரைன் அதிபர், தீர்ப்புக்கு ரஷ்யா கட்டுப்பட வேண்டும் என்று கூறினார். இந்த உத்தரவை புறக்கணிப்பது ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தும் … Read more

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்க் குற்றவாளி: ஜோ பைடன்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் புதன்கிழமை (மார்ச் 16, 2022) ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை ஒரு போர்க் குற்றவாளி என்று கூறியுள்ளார்.  உக்ரைனில் போர் “திட்டமிடப்பட்ட வகையில் முன்னேறி வருவதாக” ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து வெளியான கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா … Read more

Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம்

டோக்கியோ: ஜப்பானில் ஏறபட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களின் கரையோரங்களில் சுனாமி ஏற்படுவதற்கான ஆலோசனையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் நீக்கியது. ஜப்பானில் (2022, மார்ச் 16) அன்று ஏற்பட்ட பூகம்பத்தில்  2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபுகுஷிமா கடற்கரையில் புதன்கிழமை இரவு 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் – உச்சக்கட்ட சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் இன்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.3 ஆக பதிவானது. தலைநகர் டோக்கியோ உட்பட பல நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் காணப்பட்டது. ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.  மேலும் படிக்க | ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன! 20 லட்சம் வீடுகளில் … Read more

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எண்ணெய்: அமரிக்கா கூறுவது என்ன!

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை.  போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து 20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது. அதிலும் மிக … Read more

ஸ்டைலாக ‘தம்’ அடிக்கும் நண்டு..! என்னமா புகை விடுது..! வைரல் வீடியோ!

பொதுவாக குரங்கு, கரடி எல்லாம் மனிதர்கள் அணைக்காமல் வீசிச் செல்லும் சிகரெட்டை புடிக்கும் வீடியோக்களை பார்த்திருப்போம். ஆனால் இங்கு நண்டு ஒன்று தம் அடிக்கும் வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.  மேலும் படிக்க | SVS 13 பைனரி நட்சத்திர கூட்டத்தைச் சுற்றி 3 கிரக அமைப்புகளின் உருவாக்கம் கண்டுபிடிப்பு! 35 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் கடற்கரையில் நண்டு ஒன்று சிகரெட்டை அதன் கொடுக்கில் வைத்து புகைக்கிறது. அதன்பிறகு சிகரெட்டை வாயில் இருந்து எடுத்து புகை … Read more

உக்ரைன் போரின் மறுபக்கம்! அகதிகளாக வெளியேறும் பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படும் அபாயம்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதலால், நாட்டில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவது போர் தொடர்பான கவலைகளைத் தவிர வேறுவிதமான கவலைகளை அதிகரித்துள்ளது. நாட்டில் இருந்து வெளியேறும் பெண்களையும், சிறுமிகளையும் மனித கடத்தல்காரர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்பதற்கான அறிகுறிகளை போலந்து கண்டுள்ளதாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் தெரிவித்தனர். கடத்தல் வழக்குகள் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தற்போது தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடத்தல் அபாயங்கள் கடந்த மாதம் போலந்தின் கிழக்கு அண்டை நாட்டின் மீது … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: அமைதி உடன்படிக்கையை எதிர்நோக்கும் உக்ரைன்!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன. கார்கிவ் நகரிலும் ரஷ்யாவின் குண்டுவீச்சு தொடர்கிறது. அதிகரித்து வரும் இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில்  அமைதி உடன்படிக்கைக்கான வாய்ப்பு உள்ளது என உக்ரைன்  எதிர்பார்க்கிறது. ரஷ்யப் படைகளால் சூழப்பட்ட உக்ரைனின் மரியுபோலில் இருந்து பாதுகாப்பான மனித நடைபாதை வழியாக சுமார் 20,000 பேர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது … Read more

SVS 13 பைனரி நட்சத்திர கூட்டத்தைச் சுற்றி 3 கிரக அமைப்புகளின் உருவாக்கம் கண்டுபிடிப்பு!

SVS 13 எனப்படும் பைனரி நட்சத்திர அமைப்பைச் சுற்றி மூன்று கிரக அமைப்புகளின் உருவாக்கத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். 980 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பைனரி நட்சத்திர அமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தூசியின் சிக்கலான கட்டமைப்புகள் இந்த கண்கவர் சூழலில் கிரக அமைப்புகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இந்த ஆராய்ச்சியை தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் (he Astrophysical Journal) என்ற விஞ்ஞான சஞ்சிகை ஏற்றுக்கொண்டது. இந்த ஆய்வுக் கட்டுரை, பதிப்பிற்கு முந்திய … Read more

உக்ரைனில் குண்டுமழை: கண்ணீருடன் கடைசியாக பியோனோ வாசித்த இசைக்கலைஞர்!

இன்னும் சற்று நேரத்தில் மூழ்கவே மூழ்காது என்ற தம்பட்டம் அடித்த அந்த பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ கப்பல் மூழ்கப் போகிறது. உயிர் பிழைப்பதற்காக மக்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஆறேழு இசைக்கலைஞர்கள் கப்பலின் ஓரமாக வயலின் வாசித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் வயலின் வாசித்தவர்கள் தங்களுக்குள்ளே கிளம்பலாம் என்று முடிவெடுத்துக் கட்டியணைத்துப் பிரிந்துசென்ற பின், ஒரு கலைஞர் மட்டும் தனியாக வயலின் வாசிப்பார். கிளம்பிய அத்தனை பேரும் அந்த தனி இசைக்கலைஞரைக் கண்டு கப்பலில் தப்பிச்செல்லாமல் மீண்டும் … Read more