Ukraine – Russia war: ஆயுதமேந்திய உக்ரைன் அழகு ராணியின் கோரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் பலர் தன்னார்வத்துடன் களமிறங்கியுள்ளனர். அவர்களுடன் மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அனஸ்தேசியாவும் தீரமுடன் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து போரில் ஈடுபட்டு வரும் அவர், தன்னாட்டு மக்களுக்காக உலக ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார். நன்கொடை அனுப்ப வேண்டிய முகவரியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.  மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் … Read more

சிக்கலில் இருக்கும் உக்ரைன் அதிபர் – அமெரிக்கா, இங்கிலாந்தின் ரகசிய திட்டம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தற்போது பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளார். அவர் ஏற்கனவே போரின் நடுவில் ரஷ்யாவால் மூன்று முறை தாக்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், உக்ரைன் அதிபரை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்காவும், பிரிட்டனும் ஒன்றிணைந்துள்ளன. ஜெலென்ஸ்கியை மீட்க இரு நாட்டு ராணுவமும் ரகசிய திட்டம் வகுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் அதிகரித்து வருவதால் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது. அவர் அண்மையில் உக்ரைனை விட்டு வெளியேறி … Read more

‘போரை நிறுத்த புடினிடம் பேசுங்கள்’: பிரதமர் மோடியிடம் உக்ரைன் கோரிக்கை

உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்  11வது (ஞாயிற்றுக்கிழமை) நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 11 நாட்களாக உலகப் போர் மூளுமோ என்ற அச்சத்தில் உலகமே உள்ளது. ரஷ்யா உக்ரைனை மண்டியிட வைக்க வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் உக்ரைன் சரணடைய தயாராக இல்லை.  இந்நிலையில் உக்ரைனின் … Read more

உக்ரைன் போருக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் – ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு

உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் (Naftali Bennett) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) மாஸ்கோவில் சனிக்கிழமை சந்தித்து பேசினார். போருக்கு மத்தியில் புடின் மற்றும் நஃப்தாலியின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. மத்தியஸ்தம் செய்ய முயற்சி ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்ய இஸ்ரேல் முன்வந்துள்ளது என செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் … Read more

உக்ரைன் வெளிநாட்டு மாணவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறது: ரஷ்யா

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடனும், ரஷ்ய ராணுவத்துடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ராணுவம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறிய ரோமன் பாபுஷ்கின், உக்ரைன் இந்திய மாணவர்களை துன்புறுத்துவதாக சாட்டியதுடன், உக்ரைனில் உள்ள ராணுவ வீரர்கள் வெளிநாட்டு மாணவர்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர் என்றார். இந்திய மாணவர் மரணம் வருத்தமளிக்கிறது தூதர் ரோமன் பாபுஷ்கின், Zee மீடியாவுக்கு … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

உக்ரைன் நகரங்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான தளங்களை அனுமதிக்கும் வகையில், ரஷ்யா சனிக்கிழமை (மார்ச் 5) உக்ரைனில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. Russia declares ceasefire in Ukraine, opens humanitarian corridors for civilians to leave Read @ANI Story | https://t.co/6RdaSSDQr7#UkraineCrisis #RussiaUkraine #Ceasefire pic.twitter.com/vTwGKbpTUa — ANI Digital (@ani_digital) March 5, 2022 இந்த தற்காலிக … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: கோரிக்கைகளை ஏற்றால் பேச்சுவார்த்தைக்கு தயார் – புடின்

ராணுவ தாக்குதல் தொடங்கிய 3-4 நாட்களில் உக்ரைன் முழுவதையும் தனது ராணுவம் கைப்பற்றும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கருதினார்.ஆனால் உக்ரைனின் துணிச்சலான ராணுவம்  அதனை தீவிரமாக எதிர் கொண்டு வரும் நிலையில் போரின் 9வது நாளான இன்றும் நீடிக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நகரங்களில் குண்டுகள் வீசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் மறுத்துள்ளார். அதேசமயம், தனது கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் பேசத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் அலுவலகமான … Read more

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போலந்தில் தஞ்சம் புகுந்தார்; ரஷ்யா பரபரப்பு தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்க்கு மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டை விட்டு வெளியேறி போலந்தில் தஞ்சம் புகுந்தார் என ரஷ்ய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கூறியுள்ளார். இதற்குப் பிறகு, தற்போது தலைநகர்  கிவ் மீது பெரிய தாக்குதல் எதுவும் நடக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிவ்வில் பெரிய அளவில் முற்றுகை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரில், தலைநகர் கீவ் சில நாட்களாக நெருக்கடியை சந்தித்து வருகிறது. அத்தகைய … Read more

உக்ரைன் அணுமின் நிலைய தாக்குதலுக்கு பதிலளித்த அமெரிக்கா: அடுத்த கட்டம் ஆரம்பமா?

புதுடெல்லி: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் புதிய பரிமாணங்களை எடுத்து வருகின்றது. பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் நிலையிலும், உக்ரைனிய ராணுவ தளங்கள் மீதான தாக்குதலை நிறுத்த தயாராக இல்லை என ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இதற்கிடையில், பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அணுஆயுதப் போராக இது மாறிவிடக்கூடாது என்ற அச்சமும் மேலோங்கி உள்ளது.  உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க எரிசக்தி துறை தனது ‘நியூக்லியர் இன்சிடண்ட் … Read more

பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியா இஸ்லாமிய மசூதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பெஷாவரின் பழைய நகரத்தில் உள்ள குச்சா ரிசல்தார் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பக்தர்கள் கூடியிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியின் தெருக்கள் மிகவும் குறுகலாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வண்டிகள் வருவதும் செல்வதும் சிக்கலாக இருந்தது. … Read more