US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
மாஸ்கோவுடனான உக்ரைன் மோதல் வலுத்து வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு 3,000 கூடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஆனால், ரஷ்யாவுடன் போரைத் தொடங்குவதற்காக இந்த துருப்புக்களை அனுப்பவில்லை என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. “உக்ரேனில் போரைத் தொடங்கவோ அல்லது ரஷ்யாவுடன் போரிடவோ அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் பல மாதங்களாக தெளிவாகக் கூறி வருகிறார்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஃபாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். … Read more