Russia-Ukraine Crisis: அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,  ஆயுத பிரயோகம் ஏதும் இல்லாமல் உக்ரைனை மூன்றாகப் பிரித்துள்ளார். உக்ரைனின் இரு கிழக்கு மாகாண பகுதிகளையும் சுதந்திர நாடுகளாக விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். இந்தப் பகுதிகளில் உக்ரைனின் ராணுவம் நடத்தும் தாக்குதலில் இருந்து பாதுகாக்க உதவுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் பிரிவினைவாதப் பகுதிகளை சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அங்கீகரித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதிகள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் … Read more

‘வெற்று பேச்சுகளால் ரஷ்யா எங்களை ஏமாற்ற முடியாது’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: கிழக்கு உக்ரைனின் இரு மாகாணங்களையும் தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ரஷ்ய நடவடிக்கையால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன.  மாஸ்கோவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ரஷ்ய வங்கிகள் மற்றும் தன்னலக்குழுக்களுக்கு எதிராக கடுமையான நிதித் தடைகளை விதிக்க அமெரிக்கா உத்தரவிடுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செவ்வாயன்று அறிவித்தார். ‘திருந்தாவிட்டால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்’ உக்ரைன் விவகாரத்தில் மாஸ்கோ சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறியுள்ளது என்று ஜோ … Read more

அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.  ஆனால், உலகில் கொரோனாவினால் ஒருவர் கூட இது வரை பாதிக்கப்படாத சில பகுதிகளும் உள்ளன என்பது ஆச்சர்யம் அளிக்கிறது இல்லையா… துர்க்மெனிஸ்தான் மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான், கொரோனாவை தனது நாட்டிற்கு  நுழைய அனுமதிக்கவில்லை. இதுவரை இந்த நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. நாட்டில் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இது தவிர, அனைவரும் முகக்கவசம் அணியவும், சமூக … Read more

உக்ரைனின் டோனெட்ஸ்க் – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.  ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் உக்ரைனின் கிழக்கு மாகாண பகுதிகளான, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப்படும் இரண்டு பிரிவினைவாத பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ளார் என உக்ரைனில் இருந்து வரும் சமீபத்திய செய்திகள் கூறுகின்றன. ரஷ்யத் தலைவரும் இந்தப் பகுதியில் தனது படைகளை … Read more

Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்

கிழக்கு உக்ரைனில் சமீபத்திய ரஷ்ய நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் இடையிலான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்டாக் ஃப்யூசர்சில் சரிவு காணப்பட்டது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளை’ ‘சுயாதீனமாக’ அங்கீகரிப்பதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவும் இந்த பகுதிகளுக்கு படைகளை அனுப்பியுள்ளது. ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் சுமார் 4% … Read more

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியது டொனால்ட் ட்ரம்ப் ஆப்!

கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில சர்ச்சைக்குரிய அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சில சமூக ஊடங்கள் அவரது கணக்கிற்கு தடை விதித்தது.  இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவரது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப் உடன் இணைந்து … Read more

Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை, குண்டுவெடிப்பு குறித்த முழுமையாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.  அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஆதரவில் உள்ள டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறிய மக்கள், தென்மேற்கு ரஷ்ய நகரமான தாகன்ரோக்கில் இரயில்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்ல … Read more

அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

அறுவை சிகிச்சை என்பது நவீன காலத்தின் பரிசாக கருதப்பட்டாலும், அது முழுமையாக உண்மையல்ல. அகழ்வாராய்ச்சியில் வெளி வந்துள்ள சான்றுகள்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. காது கல்லறையில் இருந்து 5,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு மூலம் அறுவை சிகிச்சைக்கான ஆதாரங்கள்  வெளிவந்துள்ளது. காது அறுவை சிகிச்சையின் ஆரம்ப சான்றுகள் தொடர்பான  தகவல்கள் ஜீ குழுமத்தின் WION செய்தி அறிக்கையில் வெளியாகியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஸ்பெயினில் உள்ள ஒரு கல்லறையில் … Read more

Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம்

தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று.  23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தாய்மொழி தினத்துக்கான கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்று ஐ.நா அறிவித்துள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கஙக்ள், அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் தொலைதூரக் கல்விக்கு தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. … Read more

எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது

வாஷிங்டன்: கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விரைவில் கொரோனா போன்ற மற்றொரு தொற்றுநோய் உலகைத் தாக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. கோவிட்-19 இலிருந்து கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து வியத்தகு அளவில் குறைந்துள்ளது என்று பில் கேட்ஸ் கூறினார். ஏனென்றால், இந்த வைரஸுக்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக அதிகரித்து உள்ளது. புதிய எச்சரிக்கை சிஎன்பிசிக்கு அளித்த … Read more