ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “படையெடுப்பு தொடங்கும் தருணம் வரை, அதனை தடுக்க இராஜீய நிலையிலான நடவடிக்கையை தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்பதில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி … Read more

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக … Read more

Unique experiment: சூப்பர் ஐடியா! நீர் சேமிப்பு + மின்சார உற்பத்தி = சோலார் பேனல்கள்

Unique experiment: கால்வாய்களில் சோலார் பேனல்களை வைத்து, 63 பில்லியன் கேலன் தண்ணீர் சேமிப்பதுடன், 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூப்பர் திட்டம்… 4,000 மைல்கள் (6437 கிமீ) அளவிற்கு கால்வாய்களின் இரண்டு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு இந்த அற்புதமான இயற்கையை மேம்படுத்தி, நவீன வசதிகளை பெறும் திட்டம் கலிபோர்னியாவில் செயல்படுத்தப்படுகிறது. நெவாடா மலைகள் மற்றும் கலிபோர்னியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் இருபுறமும் சூரியசக்தி பேனல்கள் … Read more

கனடாவில் திடீரென மூடப்பட்ட 3 கல்லூரிகள்; பரிதவிக்கும் இந்திய மாணவர்கள்!

கனடாவின் கியூபெக்கில் மூன்று கல்லூரிகள் திடீரென திவாலானதாக அறிவித்ததையடுத்து, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மாணவர்களுக்கு எழுந்துள்ள பெரும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம்  பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்கியுள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கல்வி கற்கச் சென்ற இந்த இந்திய மாணவர்கள் தற்போது  செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். கனடாவில் உள்ள M College Montreal, CDE College Sherbrooke மற்றும் CCSQ College Longueil ஆகிய மூன்று … Read more

Swastika vs Ban: ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்ய கனடா முயல்வதற்கு காரணம் என்ன?

கனடாவில் ஸ்வஸ்திக் சின்னத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து இந்திய அரசு தனது கவலையை பகிர்ந்து கொண்டது. ஸ்வஸ்திகா சின்னத்தின் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. பாசிசத்துடன் கலாச்சார சின்னத்திற்கு என்ன தொடர்பு? பின்னணியைத் தெரிந்து கொள்ளுங்கள்… ஸ்வஸ்திக் சின்னம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாகரிகங்களிலும் வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக் சின்னம்.  பூஜையறை … Read more

ஏப்ரலில் ஏலத்துக்கு வரும் உலகின் விலையு உயர்ந்த அபூர்வ வைரம்..!

வைரங்கள் என்றாலே விலை உயர்ந்தவை தான். ஆனால், அந்த வைரத்திலும் விலை உயர்ந்த வைரம் இருக்கிறது. நீல நிறத்தில் இருக்கும் வைரம் மிக மிக விலை உயர்ந்தவை. கார்பன் இறுகிய பிணைப்பின் காரணமாக உருவாகும் வைரங்கள் மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக கிடைக்கின்றன. அவற்றில் நீல நிறத்தில் இருக்கும் வைரங்கள் மிகவும் அபூர்வமாக கிடைப்பவை.  மேலும் படிக்க |  HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அந்த வகையில் தற்போது … Read more

Gravity vs Space Travel: விண்வெளி வீரர்களின் மூளையை மாற்றியமைக்கும் புவியீர்ப்பு விசை

குறைந்த புவியீர்ப்பு விசையால் விண்வெளிப் பயணம் விண்வெளி வீரர்களின் மூளையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. விண்வெளியில் பயணிக்கும் மனிதர்களின் உடல் பல்வேறு மாறுதல்களுக்கு உட்படுகிறது. அவை பல வேறுபட்ட சிரமங்களை கடக்க வேண்டும், விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் மூளையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஃபிரான்டியர்ஸ் இன் நியூரல் சர்க்யூட்ஸ் இதழில் நேற்று (2022, பிப்ரவரி 18 வெள்ளிக்கிழமை)  வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, விண்வெளி வீரர்களின் மூளை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விண்வெளியில் செலவழித்த பிறகு பூமிக்குத் திரும்பிய சில மாதங்களில் … Read more

Russia-Ukraine விவகாரத்தால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது: ஐ.நா

முனிச்: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1990 களில் சோவியத் யூனியன் பிரிந்தபோது இருந்த பதற்றங்களுக்குப் பிறகு, அதே வீரியத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால், அதைவிட அதிக வீரியத்திலான கிழக்கு-மேற்கு பதற்றம் தற்போது நிலவி வருகிறது.  பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏற்படும் சிறிய தவறுகளும் தவறான தகவல்தொடர்புகளும் பேரழிவு விளைவுகளை … Read more

Russia-Ukraine crisis: இந்தியர்களை வெளியேற்ற உக்ரைனுக்கு 3 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும்

Ukraine Russia Conflict: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருந்து இந்திய குடிமக்கள் வெளியே வர உதவும் வகையில் ஏர் இந்தியா விமான நிறுவனம்மூன்று விமானங்களை இயக்க உள்ளது பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் (VBM) விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் … Read more

அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்கா மீது ரஷ்ய பிரிவினைவாதிகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 குழந்தைகள் மற்றும் 18 ஊழியர்கள் பயன்படுத்தும் மழலையர் பள்ளியின் சுவரில் ஷெல் வெடிப்பு நடந்தது. குழந்தைகள் உள்ளே இருந்தபோதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த மழலையர் பள்ளியில் இருந்த குழந்தைகள் காயம் ஏதும் ஏற்படாமல் சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழலையர் பள்ளி … Read more