அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்கா மீது ரஷ்ய பிரிவினைவாதிகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 குழந்தைகள் மற்றும் 18 ஊழியர்கள் பயன்படுத்தும் மழலையர் பள்ளியின் சுவரில் ஷெல் வெடிப்பு நடந்தது. குழந்தைகள் உள்ளே இருந்தபோதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த மழலையர் பள்ளியில் இருந்த குழந்தைகள் காயம் ஏதும் ஏற்படாமல் சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழலையர் பள்ளி … Read more

Otherside of Fame: 15 வயது டிக்டாக் பிரபலத்தை பார்க்க அடம் பிடித்த ரசிகர் சுட்டுக் கொலை

சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களுக்கு பணமும் கூரையை பொத்துக் கொண்டு கொட்டுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் பிரபலத்திற்கு கொடுக்கும் விலையும் அதிகமாக இருக்கிறது. இதற்கான அண்மை உதாரணம் அமெரிக்காவை சேர்ந்த டீனேஜ் சிறுமி அவா மஜூரி, இந்த டிக்டாக் நட்சத்திரத்தின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் அவாவின் வீட்டிற்கு வந்தபோது ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவா மசூரியின் வீட்டிற்கு வந்த எரிக் ரோஹன் ஜஸ்டின் என்ற 18 வயது இளைஞரை அவாவின் தந்தை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், … Read more

Primordial Apartments: 8500 ஆண்டு பழமையான வீடுகள் சொல்லும் கலாச்சாரம் இது யுஏஇ வீடு

அபுதாபி: 8500 ஆண்டுகள் பழமையான வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த புராதனமான வீடுகளின் அறைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (United Arab Emirates) இந்த புராதன வீடுகள் கண்டறியப்பட்டன. இந்த வீடு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான வீடு என்றும், இது 8500 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்நாட்டின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை வியாழக்கிழமை (2022, பிப்ரவரி 17) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கல் சுவர்கள் ஐக்கிய அரசு அமீரகத்தின் தொல்லியல்த்துறையால் மேற்கொள்ளபப்ட்ட … Read more

Travel to Mars: பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்! சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பம்

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணித்தை சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பமானது சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. ஆச்சரியமாக இருந்தாலும் இது சாத்தியமாகும் உண்மை என்று உறுதியளிக்கின்றனர் விஞ்ஞானிகள். 45 நாட்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடைவது இப்போது சாத்தியமாகும், இது நீண்ட நாட்களாக அறிவியல் ஆர்வலர்களின் கனவாக இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  கனடா நாட்டைச் சேர்ந்த எஞ்சினியர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். தற்போதைய நிலவரப்படி … Read more

விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை ‘பூனை’ என்று அழைப்பார். கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது … Read more

Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!

அறிவு மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்தாலும், அதில் சில ஆபத்துக்களும் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் உக்ரைனில் நடந்த சைபர் தாக்குதல். ஹேக்கர்கள் உக்ரைனின் கணினி நெட்வொர்க் அமைப்பிற்குள் நுழைந்து வங்கியியல் முதல் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைத் ஸ்தம்பிக்க செய்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் அல்லது ரஷ்யாவின் சைபர் ராணுவம் இருப்பதாக ஊகிக்கப்பட்டது. இருப்பினும் உக்ரைனில் நடந்த சைபர் மோதலில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. … Read more

அதிர்ச்சி சம்பவம்! இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு

நியூயார்க்: இரண்டு ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் உள்ள ரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை தங்களிடம் இருக்க வேண்டும் என்ற பெற்றோர் கோரி வந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளாக ஒரு ரகசிய மறைவிடத்தில் மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பெண் குழந்தைக்கு இப்போது 6 வயது. கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி காணாமல் … Read more

Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் சூழ்நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் பதற்றம் நிலவுகிறது.  உக்ரைன் – ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா … Read more

Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

இந்த பூமி பல மர்மங்களைக் கொண்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை தன்னுள் பல ரகசியங்களை பொதித்து வைத்துள்ளது.  மனிதர்களால் அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன.  இருப்பினும், மனிதர்களின் விடா முயற்சி, இந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க விளைகிறது.  அவற்றில் சில வெற்றியடைந்தாலும், பெரும்பாலும் ரகசியங்கள் மர்மமாகவே தொடர்கின்றன. அப்படி மர்மமாய் தொடரும் ஒரு ஏரி தென்னாப்பிரிக்காவின் ஃபுண்டுஜி.  பார்ப்பதற்கு பேரழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் தனது … Read more

HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

வாஷிங்டன்: HIV என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இது இதுவரை குணப்படுத்த முடியாததாக கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த வகையில்  பெரும் வெற்றியை அடைந்துள்ளனர். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம்  இது சாத்தியம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்து, HIV தொற்றில் இருந்து குணமடைந்த … Read more