சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

நேற்று, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஜெட் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் விழுந்து சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கூறியது.  எனினும் விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, … Read more

உக்ரைனில் இருந்து 2389 குழந்தைகளை கடத்திய ரஷ்ய ராணுவம் – பகீர் பின்னணி!

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 25 நாட்களுக்கு மேலாக தொடர்ந்துகொண்டுவருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலை ரஷ்ய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதனை பொருட்படுத்தாமல் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.  உக்ரைன் ராணுவமும் சளைக்காமல் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருவதால் இந்த போர் எப்போது தான் முடிவுக்கு … Read more

வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.250 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.170 க்கும் விற்கப்படுகிறது. சமையல் எரிவாயுவின் விலை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. எரிவாயு பொருட்கள் கடும் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் … Read more

தீவிரவாதத்தை பரப்புவதாக புகார்; பேஸ்புக், இன்ஸ்டாகிராமிற்கு ரஷ்யாவில் தடை !

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  27வது நாளாக தொடர்கிரது. அதிபர் புடினின் உஜ்ரைன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. உலகிலேயே அதிக தடைகளை சந்திக்கும் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. இந்த நிலையில், அந்நாட்டு நீதிமன்றம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்துள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தடை ‘தீவிரவாத நடவடிக்கைகள்’  … Read more

உக்ரைன் அதிபர் எப்போதும் பச்சை நிற டி-ஷர்ட்டில் காணப்படும் காரணம் என்ன..!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் 27வது நாளாக இன்றும் தொடர்கிறது.  போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இது வரை எந்த விதமான ஆக்கப்பூர்வமான முடிவும் ஏற்படவில்லை.  இந்நிலையில், உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பச்சை நிற டி-ஷர்ட்டில் மட்டுமே … Read more

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ரஷ்யா, QUAD நாடுகள் கூறுவது என்ன!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போரை நிறுத்த பல நாடுகள் குரல் எழுப்பியுள்ளன. இதில் இந்தியாவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.  இந்தியா ரஷ்யா உக்ரைனில் நடந்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘குவாட்’ நாடுகளின் கூட்டத்திற்கு முன்னதாக ஆஸ்திரேலியா இந்த விஷயங்களை கூறியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை ‘குவாட்’ நாடுகள் ஏற்றுக்கொண்டதாக … Read more

China Plane Crash: தலைக்குப்புற விழுந்த விமானம்! வெளியான கடைசி நிமிட வீடியோ!

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த கடைசி திக்திக் நிமிட வீடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்து நடந்த இடத்தில் தற்போது 300-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் குவிந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  மேலும் படிக்க | Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன … Read more

சீனாவில் விமான விபத்து: 133 உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி வீடியோ

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலி என தகவல் வெளியாகியுள்ளது.    pic.twitter.com/NqCFtX5EcT — ShanghaiEyeofficial (@ShanghaiEye) March 21, 2022 விபத்து நடந்த இடத்தில் தற்போது மீட்புக்குழு விரைந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அங்கிருந்த மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   

Breaking: 133 பயணிகளுடன் சென்ற சீன விமானம் விழுந்து நொறுங்கியது!

133 யணிகளுடன் சென்ற சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் விபத்துக்குள்ளானது. இதனால், தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான தெங்சியன் கவுண்டி என்னும் மலைப்பகுதி தீ பிடித்துள்ளது; உயிரிழப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை. சீனா ஈஸ்டர்ன் போயிங் 737 விமானம் தென் சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியான டெங்சியன் கவுண்டியில் மலைத் தீயை ஏற்படுத்தியது. தென்மேற்கு சீனாவில் 133 பேருடன் சென்ற சைனா ஈஸ்டர்ன் பயணிகள் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக … Read more

டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த வழித்தடத்தில் கத்தார் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இயக்கியது. விமானம் QR579 தில்லியில் இருந்து  திட்டமிடப்பட்ட படி, அதிகாலை 3.50 மணிக்குப்  புறப்பட்ட நிலையில், சுமார் 1.15 மணி நேரத்திற்குப் பிறகு 5.45 AM மணிக்கு பாகிஸ்தான் கராச்சியில் தரையிறங்கியது என … Read more