உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது!
ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனை விட்டு வெளியேறிய மாணவர்கள், எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலை கொண்டிருந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பல உக்ரைனிய மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும் சில மாணவர்கள் நடைமுறை வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளதை எண்ணி கவலையடைந்துள்ளனர். பல மருத்துவப் பல்கலைக்கழகங்கள், பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. … Read more