இன்றைய (10) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.06.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:    

நடிகர் அஜித்தை பார்த்தற்காகவே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு சென்ற சிறுவன் !

அஜித்தின் தீவிர ரசிகர்   தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். ரஜினி, ஷாருக் கான், மணிரத்னம், அட்லீ, கார்த்தி, சூர்யா என உச்ச நட்சத்திரங்கள் பலரும் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்நிலையில் தற்போது திருமணத்திற்கு வந்த சிறுவன் தான் இணையத்தில் வைரலாகியுள்ளான். ஆம், நயன்தாரா – … Read more

பொது போக்குவரத்துச் சேவையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை…

பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார். எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை, பொதுப் போக்குவரத்துக்கு அதிக தேவை இருப்பதால், அதற்கு வசதிகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். நேற்று (09) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு … Read more

இலங்கையில் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டிற்கான புகைப்படம் அதன்படி இவ்வாறு வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களை பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார். மென்பொருள் செயலிழப்பு இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு – வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்  வெளிநாட்டு கடவுச் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பசில் ரோஹன ராஜபக்க்ஷ இராஜினாமாக் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்தார்

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ரோஹன ராஜபக்க்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் நேற்று(09) கையளித்தார். இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2021ஆம் ஆண்டு ஜூலை 08ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சில மாதங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். பசில் ரோஹன ராஜபக்ஷ அவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பணிப்பாளர் … Read more

ராஜபக்சக்களுக்கு பொருந்தாத அந்த நாள்! ஜூலை மாதத்திற்காக காத்திருக்கும் மக்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதியின் மிரிஹான பகுதியிலுள்ள வீட்டை கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியிருந்தனர். இந்த நிலையில், அந்த போராட்டத்தில் பலர் காயமடைந்ததுடன், கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இதனை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில், கொழும்பு – காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி போராட்டமொன்றை … Read more

உணவு நெருக்கடியைத் தணிப்பதற்கு விரைவில் செயற்படுத்தக்கூடிய உற்பத்தித் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அவதானம்

உலக சந்தை நிலவரங்கள் மற்றும் நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக் கூடிய குறுகிய கால மற்றும் நீண்டகால உற்பத்தித் திட்டங்கள் குறித்து பாராளுன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அண்மையில் (07)  ஆராயப்பட்டது. இவ்வருடத்துக்குத் தேவையான அரிசித் தேவையில் பெருந்தொகையானவை இந்தப் போகத்தில் அறுவடை செய்யமுடியும் என மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய தொகையைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான … Read more

இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் இல்லை

இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இந்த விதி முறை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இருப்பினும் முகக்கவசதத்தை அணிவது தடுக்கப்படவில்லை. முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2264/9 என்ற 2022 ஜனவரி 25ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்ட இவ்விடயம் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் … Read more

ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவுடன் தூதுவர் சஞ்சீவ் குணசேகர சந்திப்பு

தூதுவர் சஞ்சீவ் குணசேகர 2022 ஜூன் 02ஆந் திகதி ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவை சந்தித்தார். மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மற்றும் ஜப்பான் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள வலுவான நட்புறவை நினைவுகூர்ந்த துணை அமைச்சர், தூதுவர் தனது பதவிக்காலத்தில் குறிப்பாக மக்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்துதல், முதலீடுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், ஜப்பான் அரசாங்கத்தால் … Read more

இலங்கையில் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவை – ஐ.நா

 நாட்டின் 22 வீதமான மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுக்ள அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட இணைப்பாளர் ஹென்ன சிங்கர் ஹெம்டே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 50 வீதமான அளவு விளைச்சல் குறைவு  இலங்கையில் சுமார் 4.9 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வழமையான நெல் விளைளச்சலில் 50 வீதமான அளவு விளைச்சல் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரசாயன உரப் பற்றாக்குறையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரசாயன … Read more