தன்னை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிய பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமராக தன்னை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ரணில் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் அல்ல 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றவருக்கு அதிகாரம் வழங்குவதும் 250,000 வாக்குகளைப் பெற்றவருக்கு அதிகாரம் வழங்குவதும் மக்கள் ஆணைக்கு எதிரானது எனவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்க விரும்புவதாகவும் பசில் குறிப்பிட்டுள்ளார். … Read more

தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்களும் பொறுப்பேற்க வேண்டும் – பசில் கருத்து

அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்களையும் குற்றம் சுமத்த வேண்டும் என பதவி விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். அதிகாரத்தை அரசாங்கத்திடம் கையளித்தமைக்கு பொது மக்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நான் இனி நாடாளுமன்றத்திற்கு தேவையில்லை “நான் இனி நாடாளுமன்றத்திற்கு தேவையில்லை. நிதியமைச்சராக பதவியேற்கவே நாடாளுமன்றத்திற்கு வந்தேன், … Read more

இது சிரிக்கும் விடயம் அல்ல – பசிலை கடுமையாக சாடிய ஜயசூர்ய

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். I am terribly disappointed by the press conference given by former Minister Basil Rajapaksa. … Read more

கப்பலில் உள்ள எரிவாயு 6 நாட்களுக்கு போதுமானது

எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) இடம் பெற மாட்டாது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 3,900 மெற்றிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதற்கு செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை இன்று செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம் என்பதுடன் இந்தக் கப்பலில் உள்ள எரிவாயு 6 நாட்களுக்குப் போதுமானது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எரிவாயு பெறுவதற்காக நேற்று பல பிரதேசங்களில் நீண்ட வரிசைகள் … Read more

இலங்கை அரசியலில் பசில் தொடர்ந்து ஒரு சக்தியாக இருப்பார்!

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், இலங்கை அரசியலில் பசில் ராஜபக்ச தொடர்ந்து ஒரு சக்தியாக இருப்பார்” என்று கொழும்பு சிந்தனைப் பகுப்பாய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் பவானி பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மீது அவருக்கு எந்தளவு செல்வாக்கு அல்லது கட்டுப்பாடுகள் உள்ளன என்பதே தற்பொதைய கேள்வியாகும் என பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச … Read more

கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை….

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை நாளாந்தம் 100 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நேற்று (8) மாத்திரம் சுமார் 2,500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டார அறிவித்துள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் ஒரு நாளைக்கு 1,200 கடவுச்சீட்டுகளை மாத்திரம் வழங்கியது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நாளொன்றுக்கு சுமார் 2,500 கடவுச்சீட்டுகளை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் ஒரு நாளைக்கு சுமார் 1,000 பேர் … Read more

யாழ்.அரியாலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் பலி (Photos)

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் ரயிலுடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். அரியாலை – மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றிரவு 7.15 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்தவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Source link