மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

மின்சார திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 84 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்களிப்பில் 13 பேர் கலந்துகொள்ளவில்லை. சட்டமூலம் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.மின்சார திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று நாள் முழுவதும் இடம்பெற்ற நிலையில் இறுதியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல திருத்த சட்ட … Read more

வாடகைக்கு வாகனங்களை பெற்று மோசடி

கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து திருப்பிக் கொடுக்காத பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 27, 29 மற்றும் 37 வயதுடைய பிலிமத்தலாவ மற்றும் தந்துரே பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மூவருடன் ஐந்து கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் ஜீப் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மத்துகம விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ஏழு … Read more

அந்நியச் செலாவணி கையிருப்பு 1.92 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை.. கிட்டத்தட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் மிஞ்சி உள்ளதாகவும் இதனால் உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைகளுக்கு எந்தவிதமான ஸ்திரத்தன்மையையும் காணப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 812 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் மே … Read more

இலங்கைக்காக உதவி கோரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். கிரிக்கெட் வீரர்களின் மனிதாபிமானம் அதற்கமைய, மனிதாபிமான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் கூட்டுத் திட்டம் ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையிலான நான்கு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு உயிர்காக்கும் உதவிகளை … Read more

நாடு கடக்க முயற்சித்த குழுவினர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று (09) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​ அவர்களின் இழுவை படகு ஆஸ்திரேலிய கடற்கரைக்கு அருகில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.​​​ … Read more

துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்தவும்… ஜனாதிபதி பணிப்புரை

நவீன தொழிநுட்பத்தினூடாக வினைத்திறனான சேவையை வழங்கி இலங்கை துறைமுகங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (09) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற போது ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். கொழும்பு துறைமுகமானது உலகின் அனைத்து முன்னணி கப்பல் நிறுவனங்களுடனும் இயங்குகிறது. நிர்வாக சபை உட்பட முழு ஊழியர்களும் … Read more

எனது தொலைபேசியின் ரிங்டோனும் அதுதான்! கப்புட்டு கா கா பாடல் குறித்து பகிரங்கமாக அறிவித்த பசில் (Video)

நாட்டில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது பாடப்பட்ட “ கப்புட்டு கா கா, பசில், பசில், பசில்” என்ற பாடலே தன்னுடைய தொலைபேசியின் ரிங்டோன் என  முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.  இன்றைய தினம் தனது தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது தொடர்பான அறிவித்தலை  வெளியிடும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பசில் ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்தார்.  இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது,  தன்னுடைய ரிங்கிங் டோனும் குறித்த பசில் பசில் என்ற பாடல் … Read more

2 ஆவது ரி 20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி  

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ரி 20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.  இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி இலங்கை அணியுடன் 3 ரி 20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இதற்கமைய கடந்த 7ஆம் திகதி இலங்கை ,  அவுஸ்திரேலியா இடையே முதல் ரி 20 போட்டி நடைபெற்றது. இதில், இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா  வெற்றிபெற்றது.  இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளப் போட்டி நேற்று (08) பதுளை வில்சன் டயஸ் விளையாட்டரங்கில் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன் தலைமையில் இடம்பெற்றது. ஆகஸ்ட் 2022 இல் நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு இணையாக விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்கள் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெறுவார்கள். பதுளை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.ஆதித் … Read more

இலங்கையில் நாளை முதல் முகக் கவசம் கட்டாயம் இல்லை! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என இலங்கை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி … Read more