மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோருக்கான தடகளப் போட்டி நேற்று (08) பதுளை வில்சன் டயஸ் விளையாட்டரங்கில் பதுளை மாவட்ட மேலதிக செயலாளர் கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன் தலைமையில் இடம்பெற்றது. ஆகஸ்ட் 2022 இல் நடைபெறவுள்ள தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு இணையாக விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்க மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், முதலிடத்தைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்கள் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெறுவார்கள். பதுளை மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு.ஆதித் … Read more

இலங்கையில் நாளை முதல் முகக் கவசம் கட்டாயம் இல்லை! சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் இனிமேல் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக் கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என இலங்கை சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எந்த தடையும் இன்றி … Read more

மருந்து கொள்வனவுக்காக அரசாங்கத்திடம் தற்போது 450 மில்லியன் ரூபா கையிருப்பு

சுகாதார துறைக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தற்போது 450 மில்லியன் ரூபா அரசாங்கத்திடம் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம், பல்வேறு நன்கொடையாளர்கள் மற்றும் நிதியுதவி வழங்கக்கூடிய குழுக்களால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். வருடாந்தம் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுமார் 260 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றன. எனவே இன்னும் இரண்டு வருடங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதுமான அளவு பணம் இருப்பதாக … Read more

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள யூரியா உரங்கள்

இந்திய அரசாங்கத்திடமிருந்து சிடைக்க உள்ள 65,000 மெற்றிக் டொன் யூரியா உரம் அடுத்த மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக விவசாய, வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். விவசாய அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உரம் இந்திய அரசாங்கத்தினால் அவர்களின் தேவைக்காக ஓமானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. தற்போது நமது … Read more

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா மறுப்பு

ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்த போது ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய தூதவரை நேரில் சென்று சந்தித்தேன். நான்கு நிறுவனங்களின் பட்டியலை தூதுவர் என்னிடம் கொடுத்தார். அதாவது, எரிபொருள் ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்படாதென ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கை எரிபொருளை பெற்றுக்கொள்ள … Read more

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்….

மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தனர். ஜனாதிபதி மற்றும் தூதுவர்களுக்கிடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் தூதுவர்களிடம் விளக்கினார். தற்போதைய நிலைமையைத் தீர்ப்பதில் இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இதுவரை அந்நாடுகள் வழங்கிய உதவிகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மத்திய … Read more

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்படும் பணத்தை அரசாங்கம் எடுத்துவிடுமா..! வெளியாகியுள்ள உண்மைத் தகவல்

இலங்கையில் வங்கிகளில் மக்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணத்தை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அரசாங்கம் எடுத்து விடும் என தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பில் இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் உண்மை விடயத்தை வெளியிட்டுள்ளார். யாழில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டினை மீண்டும் கட்டியெழுப்புதல் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு … Read more

தொழிற்சங்க நடவடிக்கையால் நாட்டில் மின் விநியோக தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தால் மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்திற்கு தடை ஏற்படும் வகையில் செயற்பட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மின்சார சபையின் பொறியியலாளர் சங்க தலைவர் அனில் இன்டுருவ, … Read more

பிரபல நாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரியவந்துள்ளது. இலங்கையர்கள் நாடு கடத்தல் கடந்த 19 நாட்களுக்கு முன்னர் அவர்கள் இழுவை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த போது, ​​அவர்களது இழுவை படகில் … Read more

இலங்கைக்கு எப்போது விடிவு கிட்டும்….! ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். இதன் போது தனக்கு சாதகமான பதில் கிடைத்தள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடன் உதவிகளை பெற முடியும். நான் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றேன். என்னால் இயலுமான அனைத்தும் செய்யப்படும். செப்டெம்பரில் இலங்கைக்கு விடிவு செப்டெம்பர் மாதமளவில் நாட்டிற்கு தேவையான … Read more