இலங்கைக்கு எப்போது விடிவு கிட்டும்….! ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். இதன் போது தனக்கு சாதகமான பதில் கிடைத்தள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடன் உதவிகளை பெற முடியும். நான் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றேன். என்னால் இயலுமான அனைத்தும் செய்யப்படும். செப்டெம்பரில் இலங்கைக்கு விடிவு செப்டெம்பர் மாதமளவில் நாட்டிற்கு தேவையான … Read more

இலங்கையில் பேருந்து பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்றை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ வழங்கியுள்ளார்.  அதன்படி நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறையற்ற விதத்தில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்கவும். பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல … Read more

நாட்டின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தொழிற்சங்கங்கள் நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். எனினும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட மின்சார சபை பொறியிலாளர்கள் தீர்மானித்திருந்தனர். எனினும், ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, … Read more

ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் – முன்னாள் அமைச்சர் ஆரூடம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு சில சலுகைகள் கிடைக்கும் என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி கணித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் எதிர்வரும் மாதங்களில் சர்வதேச ஆதரவின் ஊடாக மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இலங்கைக்கு சலுகைகள் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் உலக … Read more

இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவியை அறிவித்தது சீனா!

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், அந்த நாட்டுக்கு அதன் திறனுக்குள் உதவி செய்து வருவதாகவும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாளாந்த செய்தி சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இந்த கருத்துக்களை தெரிவித்தார். சீனா இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் (சுமார் 74.75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள அவசர மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளதாக அவர் இதன் போது கூறியுள்ளார். வெளிநாட்டுக் … Read more

கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த – நீதிமன்றில் அறிவிப்பு

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மாதம் 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகிந்த ராஜபக்ச … Read more

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை ஆதரவளிக்காத காரணத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்கும் கோரிக்கையை அமைச்சரவைக்கு முன்வைக்கவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பதிலாகஇ மின் உற்பத்தி செலவைக் குறைக்கஇ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இலங்கை மின்சார சபை தொடர வேண்டும் என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும்இ இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மூன்று … Read more

பதவியை இராஜினாமா செய்ய தயாராகும் பசில்! இறுதி தீர்மானம் நாளை

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  அரச தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பசில் ராஜபக்ச  நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை தீர்மானம் நாளை முற்பகல் 11 மணிக்கு தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறப்பது தொடர்பான அறிவித்தலை ஊடகவியலாளர் சந்திப்பின்போது  பசில் ராஜபக்ச வெளியிட … Read more

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் ,இரண்டாவது சரத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இன்று (08) மாலை இதுதொடர்பாக அறிவித்துள்ளார். அரசாங்க கூட்டுத்தாபனம் , திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் நியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்திய சாலை சேவை … Read more