அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! வெளிவந்துள்ள அறிவிப்பு (Video)

பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி … Read more

கொழும்பு துறைமுகம் உலகில் 22வது இடத்தில்

கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P  குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ் சமத்திர, வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவு மற்றும் உலக வங்கியின் உலகளாவிய போக்குவரத்து நடவடிக்கை ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படும் CPPI  அல்லது கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் 2021 இந்தத் தரவுகள் பதியப்பட்டுள்ளன. இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் … Read more

ஜனாதிபதி கோட்டாபயவை மீறி நடவடிக்கை எடுக்கும் பிரதமர் ரணில்

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் – மத்திய ஆளுநருக்கு இடையில் மோதல் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் இராஜினாமாவைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் பதவிக் காலத்திற்கு … Read more

துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க விசேட வரிச்சலுகை

துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 40 வருட காலத்திற்கு விசேட வரிச்சலுகைகளை வழங்குவதற்காக, முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை  பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார். “அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் அமைக்கப்பட்ட நாட்டின் முக்கிய திட்டமான துறைமுக நகர் திட்டம் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகள்! ஜனாதிபதி பணிப்புரை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உணவு அதன் ​போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வாரத்தில் இரண்டு … Read more

விமான நிலையங்களுக்கு செல்வதற்கு டீசல் இல்லை!முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல்

அரசியல்வாதிகள் தயாரில்லை! நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக குறைநிரப்பு யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளபோதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார். ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால், பொதுமக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்றும் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார். 9 மாகாணங்களுக்கும் அதிகாரம் 9 மாகாணங்களையும் அபிவிருத்தி … Read more

நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார்! சிங்கள அரசியல்வாதிகள் தயாரா..!

சிங்கள  தலைவர்கள் தயாரா? நாட்டின் கடன்களை தீர்க்க 53 பில்லியன் டொலர்களை புலம்பெயர் தமிழர்கள் வழங்க முன்வந்தால், வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுக்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பியுள்ளார் வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதாரத்திற்காக இடைக்கால சபையை நிறுவுவதற்கு சிங்கள தலைவர்கள் எவரும் தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பல சலுகைகள்…

வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு சலுகைகளையும் பல ஊக்குவிப்புத் திட்டங்களையும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளதாக  தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் சில வரிச் சலுகைகள், வட்டியில்லா அல்லது மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் திட்டம் மற்றும் சலுகை அட்டை ஒன்றையும் மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

விறகுகளை பயன்படுத்தினால் ஆயுள் கூடும் – இலங்கை மக்களிடம் ஆளும் கட்சி உறுப்பினர் கோரிக்கை

எரிவாயுவிற்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , எரிவாயு போன்ற சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும், இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்கள் எனவும் தெரிவித்தார். விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் அதிகம் சுத்தமான எரிசக்தி எரிபொருளைப் … Read more