விறகுகளை பயன்படுத்தினால் ஆயுள் கூடும் – இலங்கை மக்களிடம் ஆளும் கட்சி உறுப்பினர் கோரிக்கை

எரிவாயுவிற்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , எரிவாயு போன்ற சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும், இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்கள் எனவும் தெரிவித்தார். விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் அதிகம் சுத்தமான எரிசக்தி எரிபொருளைப் … Read more

தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு..

தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகளை, காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கும் நிகழ்வு இன்று (07) திகதி இடம்பெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கபட்டன. இதன்போது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியேமாகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.யறூப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உலர் உணவுப்பொதிகளையும் வழங்கினர். காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கே உலர் … Read more

மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சிங்கப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளார்

      வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், 2022 ஜூன் 8 முதல் 9 வரை இருதரப்புப் பயணமாக சிங்கப்பூர் செல்லவுள்ளார். தனது விஜயத்தின் போது, அமைச்சர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும், நிதி அமைச்சர் லோரன்ஸ் வோங், சட்டம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. சண்முகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.   விஜயத்தைத் … Read more

இலங்கையின் நிலை மோசமடையும் – ஐநா கடும் எச்சரிக்கை

எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை அரசாங்கத்தால் இரசாயன பசளைக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. இலங்கையில் வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பன போதிய அளவு உணவு உட்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. … Read more

ரபேல் நடால் 14 ஆவது முறையாக பிரெஞ்சு பகிரங்க பட்டத்தை வென்றார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில்,ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14 ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். பிரெஞ்சு ஓபன் … Read more

விவசாயிகள் பெற்ற , சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி

இலங்கையில்  விவசாயிகள் பெற்ற சிறு, சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சிறிய நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும்  நிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் 100 வீதம் தள்ளுபடி செய்யப்படும் என” பிரதமர் கூறினார்.      

நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார்! சிங்கள அரசியல்வாதிகள் தயாரா..!

சிங்கள  தலைவர்கள் தயாரா? நாட்டின் கடன்களை தீர்க்க 53 பில்லியன் டொலர்களை புலம்பெயர் தமிழர்கள் வழங்க முன்வந்தால், வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுக்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பியுள்ளார் வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதாரத்திற்காக இடைக்கால சபையை நிறுவுவதற்கு சிங்கள தலைவர்கள் எவரும் தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்க தயாராகும் உலக நாடுகள்

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுக்கவுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி உலக நாடுகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். 6 பில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டை நிலைநிறுத்துவதற்கு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் … Read more

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்: தீர்மானத்தை அறிவித்த பிரதமர் (Live)

கடன் தொகை தள்ளுபடி தொடர்பிலான அறிவிப்பொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து வழங்கியுள்ளார். கடன் தள்ளுபடி அதன்படி இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறைநிரப்பு பிரேரணை அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் இன்றைய தினம் … Read more

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பரப்பப்படும் செய்தி யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார். அமைச்சரின் பதில் இதற்கு பதிலளிக்கும் போது அவர், குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கூறுகையில், … Read more