அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பரப்பப்படும் செய்தி யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார். அமைச்சரின் பதில் இதற்கு பதிலளிக்கும் போது அவர், குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கூறுகையில், … Read more

அமைச்சர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற தீர்மானம்

அமைச்சர்கள் சம்பளம் இன்றி, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு பணியாற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கசமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார் கொழும்பில் இன்று(7) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பிரதமர் விக்ரமசிங்கவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 2000 ரூபாவாகும் … Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மிகப் பெரிய அதிகரிப்பு

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக  விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பருப்பு ஒரு கிலோக கிராம் 100ரூபாவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ  அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.  மேலும் அதிகரிக்கும் கட்டணங்கள்  சீமேந்து ஒரு மூடை 4000 ரூபாவாக்கு விற்பனை  செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருளின் விலை மீண்டும் … Read more

போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது

போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆதரவாக செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடவியலாளர் வினவியபோது, நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பொலிசார் அதிகளவு காலத்தை செலவிடுவதாகவும், கப்பம் கோருபவர்கள் மற்றும் பாதாள … Read more

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள், எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும்

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும். இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக்கெகாள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கையில் இன்று அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் இன்று அமெரிக்க டொலரொன்று பதிவு செய்துள்ள பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையில் டொலரின் பெறுமதி மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 366.23 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 356.09 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  நேற்றைய பெறுமதி ரூபா மற்றும் டொலரின் இன்றைய பெறுமதி  இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365.26 சதமாக பதிவாகியிருந்தது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் … Read more

இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து யூரியா உர பெறுகைக்கு கடன்

பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்கான கடன் தொடரை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக்கொடுக்க இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. யூரியா உரம் பெறுகைக் கோரலுக்கான இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரைப் பெற்றுக்கொள்ளல் 2022ஃ23 பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குறைந்தபட்ச விலையில் உணவுப் பொட்டலத்தை வழங்குமாறு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில்  சபைக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  குறிப்பிட்டுள்ளார்.  Source link

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இரண்டு சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 43 லீற்றர் பெற்றோல், 28 லீற்றர் டீசல் மற்றும் 42 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 200 லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறு … Read more